Toyota Innova Crysta: அப்க்ரேடாகி 4 புதிய வேரியண்ட்களில் இன்னோவா க்ரிஸ்டா.. 7 & 8 சீட்டர் - விலை, அம்சங்கள் என்ன?
Toyota Innova Crysta 2026: டொயோட்டாவின் மேம்படுத்தப்பட்ட இன்னோவா க்ரிஸ்டா கார் மாடலானது ரூ.19.72 லட்சம் என்ற தொடக்க விலையில் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

Toyota Innova Crysta 2026: டொயோட்டாவின் மேம்படுத்தப்பட்ட இன்னோவா க்ரிஸ்டா கார் மாடலானது, இந்தியாவில் நான்கு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
அப்க்ரேடட் இன்னோவா க்ரிஸ்டா..
தோற்ற மேம்பாடுகள் மற்றும் கூடுதல் அம்சங்கள் ஆகியவற்றை சேர்த்து மேம்படுத்தப்பட்ட இன்னோவா க்ரிஸ்டா கார் மாடலை, டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்தம் நான்கு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த காரின் தொடக்க விலையானது 19 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மெக்கானிக்கல் அம்சங்களில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாவிட்டாலும், மேம்படுத்தப்பட்ட எம்பிவி ஆனது தோற்றம் மற்றும் உட்புற அம்சங்களால் மெருகூட்டப்பட்டுள்ளது. அதேநேரம், இந்தியாவில் 13 லட்சத்திற்கும் அதிகமான இன்னோவா கார்கள் விற்பனையாகியுள்ள நிலையில், இருபது ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை புதுப்பிக்கப்பட்ட எடிஷன் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது.
இன்னோவா க்ரிஸ்டா - டிசைன் அப்க்ரேட் விவரங்கள்
புதிய எடிஷனில் வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றங்களை முன்பக்கத்தில் காணலாம். அங்கு, இன்னோவா கிரிஸ்டா புதிதாக வடிவமைக்கப்பட்ட ரேடியேட்டர் க்ரில் மற்றும் திருத்தப்பட்ட பம்பர் கார்னிஷைப் பெற்று, MPV-க்கு தீவிரமான தோற்றத்தை வழங்குகிறது. அதன் பழக்கமான பாடி ஸ்டைலைத் தக்கவைத்துக்கொண்டே, ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்தும் வகையில் பின்புற பம்பர் கார்னிஷ் புதுப்பிக்கப்பட்டுள்ளது. டிசைனில் மாற்றங்கள் இருந்தபோதிலும், நடைமுறைப் பயன்பாடும் அன்றாட உபயோகமும் அப்படியே தொடர்கின்றன.
இன்னோவா க்ரிஸ்டா - உட்புற அம்சங்கள், வசதிகள்
உட்புறத்தில், டொயோட்டா தனது பிரீமியம் தோற்றத்தை மேம்படுத்துவதற்காக பல அப்க்ரேட்களை கொடுத்துள்ளது. அதன்படி புதிய டூயல் டோன் லெதர் இருக்கை உறைகளுடன், இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், டோர் ட்ரிம்கள் மற்றும் பெசல்கள் முழுவதும் க்ரேஸ் காப்பர் அலங்காரங்களும் இடம்பெற்றுள்ளன. மரத்துண்டுகளை கொண்டு செய்யப்பட்டுள்ள வேலைப்பாடுகள் சூழலை மேலும் மேம்படுத்துவதோடு, ஏசி கண்ட்ரோலர்கள், சுவிட்சுகள் மற்றும் பின் இருக்கையின் முதுகுப் பகுதி டேபிள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளன. உபகரணங்களின் பட்டியலில் வயர்லெஸ் சார்ஜர் மற்றும் டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
இன்னோவா க்ரிஸ்டா - இன்ஜின் விவரங்கள்
டொயோட்டாவின் 2.4-லிட்டர் நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜின், பிரத்தியேகமாக மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டு தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. இது லிட்டருக்கு 15 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடவசதி முகுந்த கேபின், தாராளமான மேல் கூரை இடம், நெகிழ்வான இருக்கை அமைப்புகள் மற்றும் திறமையான ஏசி வசதி ஆகியவை இன்னோவா கிரிஸ்டாவை தனிப்பட்ட உரிமையாளர்கள் மட்டுமின்றி வர்த்தக வாடிக்கையாளர்களிடமும் விரும்பப்படும் தேர்வாகத் தொடர்ந்து நிலைநிறுத்துகின்றன.
இன்னோவா க்ரிஸ்டா - விலை விவரங்கள்
| வேரியண்ட் | 7-சீட்டர் | 8-சீட்டர் | ட்ரான்ஸ்மிஷன் |
|---|---|---|---|
| GX / GX Fleet | ரூ. 19.72 லட்சம் | ரூ. 19.77 லட்சம் | மேனுவல் |
| GX+ | ரூ. 21.15 லட்சம் | ரூ. 21.20 லட்சம் | மேனுவல் |
| VX | ரூ. 24.93 லட்சம் | ரூ. 24.98 லட்சம் | மேனுவல் |
| ZX | ரூ. 26.63 லட்சம் | – | மேனுவல் |
இதையும் படியுங்கள்: Maruti Hybrid Cars: லிட்டருக்கு 35+ KM மைலேஜ்..! மார்கெட்டில் 50% ஷேர் பிடிக்கனும் - மாருதியின் மலிவு விலை ஹைப்ரிட் கார்கள்
இன்னோவா க்ரிஸ்டா - முக்கிய விவரங்கள்
| அம்சங்கள் | விவரங்கள் | அம்சங்கள் | விவரங்கள் |
|---|---|---|---|
| இன்ஜின் | 2.4L | பவர்ட்ரெயின் | டீசல் மட்டுமே |
| ட்ரான்ஸ்மிஷன் | 5 ஸ்பீட் மேனுவல் | மைலேஜ் | லிட்டருக்கு 15 கி.மீ., வரை |
| இருக்கை வசதிகள் | 7 & 8 சீட்டர் | பாதுகாப்பு | 7 ஏர்பேக்குகள் |
| வாரண்டி | 3 வருடங்கள / 1,00,000 கி.மீ., | நீட்டிக்கப்பட்ட வாரண்டி | 5 வருடங்கள் வரை / 2,20,000 கி.மீ., |
ட்ரெண்டிங் செய்திகள்























