மேலும் அறிய

Kia Sonet: நாட்டின் மலிவான டீசல் SUV-யில் இவ்ளோ குறைகளா? சோனெட் யாருக்கு செட் ஆகாது? மாற்று ஆப்ஷன்கள்

Kia Sonet Drawbacks: நாட்டின் மலிவான டீசல் SUV ஆன கியா சோனெட் கார் மாடலில் உள்ள குறைகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Kia Sonet Drawbacks: கியா சோனெட் கார் மாடல் தொடர்பான சுவாரஸ்யமான தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

கியா சோனெட் SUV:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெட்ரோல், சிஎன்ஜி, ஹைப்ரிட் மற்றும் மின்சார எடிஷன் என பலதரப்பட்ட கார் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டாலும், டீசல் கார்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. எஸ்யுவிக்கள் மீதான ஆர்வமும் தீவிரமாக உள்ள நிலையில், நாட்டின் மலிவான டீசல் SUV ஆக கியாவின் சோனெட் மாடல் திகழ்கிறது. முற்றிலுமான ஒரு எஸ்யுவி பயன்பாடு மற்றும் வலுவான மைலேஜ் போன்ற முக்கியமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தாலும், தென்கொரிய நிறுவனத்தின் இந்த மாடலிலும் சில குறிப்பிடத்தக்க குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் கியா சோனெட்டில் உள்ள குறைகள், யாருக்கு இந்த கார் பொருந்தாது மற்றும் இதற்கான மாற்று ஆப்ஷன்களாக சந்தையில் கிடைக்கும் கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

கியா சோனெட் - முக்கிய குறைபாடுகள்

1. பின்புற இருக்கை வசதியானதாக இல்லை

சோனெட்டின் பின்புற இருக்கையானது இரண்டு பெரியவர்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. பிரதான போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது பின்புற இருக்கையில் மூன்று பேர் அமர்ந்தால் மிகவும் சிரமப்பட வேண்டியதாக உள்ளது.

2.கடினமான சஸ்பென்ஷன்

குழிகள் மற்றும் சேதமடைந்த சாலைகளில் குறைந்த வேகத்தில் செல்லும்போது சஸ்பென்ஷன் விறைப்பாக உணரும். சில போட்டியாளர்களைப் போல அதிர்வுகளை உள்வாங்கும் திறன் சோனெட்டின் சஸ்பென்ஷனில் இல்லை.

3. சுமாரான பூட் ஸ்பேஸ்

3872 லிட்டர் பூட் ஸ்பேஸ் என்பது போதுமானதாக இருந்தாலும், இந்த பிரிவில் முதன்மையானதாக இல்லை. பெரிய குடும்பத்தினர் நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளும்போது சிரமத்தை எதிர்கொள்ளலாம்.

4. இன்ஜின் சத்தம்

குளிர்ச்சியான சூழலில் இன்ஜினை ஸ்டார்ட் செய்யும்போதும் மற்றும் வேகமாக ஆக்சிலரேஷனை வழங்கும்போதும் இன்ஜின் சத்தம் அதிகமாக கேட்கிறது.

5. பாதுகாப்பு ரேட்டிங்

இந்திய சந்தைக்கான கியா சோனெட் பாரத் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. எனவே, பாதுகாப்பிற்கு அதிகம் முக்கியத்துவம் அளிப்பவர்களுக்கு இந்த கார் சரியான தேர்வாக இல்லாமல் போகலாம்.

இதையும் படியுங்கள்: Piaggio Scooter: ஸ்கூட்டர் கிங் ஆக்டிவாவிற்கு போட்டியாக களமிறங்கும் பியாஜியோ - மலிவு விலை, அம்சங்கள், வசதிகள்

கியா சோனெட் - யாருக்கு செட் ஆகாது?

  • சோனெட்டின் இரண்டாவது வரிசை மூன்று பெரியவர்கள் அமரும் வகையி வசதியாக இல்லாததோடு, உயரமான பயணிகளின் கால் மற்றும் தசைகளுக்கு போதுமான இடவசதியை கொண்டிருக்கவில்லை. 
  • ஏராளமான பெட்டிகளுடன் அடிக்கடி குடும்பத்துடன் வெளியூர் செல்பவராக இருந்தால் சோனெட்டின் பூட் ஸ்பேஸ் போதுமானதாக இல்லை
  • குறைந்த வேகங்களில் சோனெட்டின் சஸ்பென்ஷனானது பயனர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக இல்லை
  • ஆண்டிற்கு 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கிலோ மீட்டர் தான் வாகனம் ஓட்டுவீர்கள் என்றால், கூடுதல் விலை கொடுத்து கியா சோனெட்டின் டீசல் எடிஷனை வாங்க வேண்டிய அவசியம் இல்லை
  • உயரமான பெரியவர்கள், வளரும் பதின்பருவ குழந்தைகள் இருந்து, இடவசதியை எதிர்பார்த்தால் சோனெட் நல்ல தேர்வாக இருக்காது
  • கரடுமுரடான சாலைகளை ஓரளவிற்கு சோனெட் கையாளும் என்றாலும், தொடர்ந்து மிகவும் மோசமான சாலைகளில் பயணிப்பீர்கள் என்றால் போட்டியாளர்கள் பக்கம் கவனம் செலுத்துவது சிறந்த முடிவு
  • உறுதி செய்யப்பட்ட பாதுகாப்பு ரேட்டிங் அடிப்படையில் காரை வாங்க விரும்பினால் சோனெட் உங்களுக்கு செட் ஆகாது

கியா சோனெட்டிற்கான மாற்று ஆப்ஷன்கள்

கியா சோனெட் உடன் ஒப்பிடுகையில் அதன் குறைபாடுகள் அடிப்படையில் இந்திய சந்தையில் பல மாற்றும் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. நகர்ப்புறத்திற்கான நடுநிலையான எஸ்யுவி ஆக ஹுண்டாய் வென்யு, பாதுகாப்பு அடிப்படையிலான எஸ்யுவிக்கு டாடா நெக்ஸான், செயல்திறன் & இடவசதிக்கு மஹிந்த்ராவின் XUV 3XO, நம்பகத்தன்மை & குறைந்த விலைக்கு மாருதி சுசூகி ப்ரேஸ்ஸா, சிறந்த ஓட்டும் அனுபவித்திற்கு ஸ்கோடா கைலாக் ஆகியவை சோனெட்டிற்கு பிரதான மாற்றுகளாக உள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Kia Offers: ரூபாய் 1.70 லட்சம் தள்ளுபடி.. ஆஃபர்களை அள்ளித் தெளித்த Kia! எந்தெந்த காருக்கு?
Kia Offers: ரூபாய் 1.70 லட்சம் தள்ளுபடி.. ஆஃபர்களை அள்ளித் தெளித்த Kia! எந்தெந்த காருக்கு?
இனி இங்க நான்தான் King .. அறிமுகமாகியது Triumph Bonneville T40- விலை எவ்ளோ?
இனி இங்க நான்தான் King .. அறிமுகமாகியது Triumph Bonneville T40- விலை எவ்ளோ?
அறிமுகமாகியது Toyota Fortuner Leader Edition! இனி மிரட்டல்தான்..! விலை எவ்ளோ?
அறிமுகமாகியது Toyota Fortuner Leader Edition! இனி மிரட்டல்தான்..! விலை எவ்ளோ?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
Embed widget