மேலும் அறிய

Kia Seltos: டாப் 3 போதாது..! புதுசா 2 வேரியண்ட்களை இறக்கிய கியா - 28 ADAS அம்சங்கள் - புது செல்டோஸ் எப்படி?

Kia Seltos SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் முன்னணியில் உள்ள , செல்டோஸ் மாடலுக்கு கியா நிறுவனம் புதியதாக இரண்டு வேரியண்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Kia Seltos SUV: கியா செல்டோஸ் மாடலின் புதிய வேரியண்ட்கள் தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

டாப் 3 போதாது - கியா:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவானது மிகவும் போட்டித்தன்மை மிக்கதாக உள்ளது. இருப்பினும் க்ரேட்டா மற்றும் விக்டோரிஸ் மாடல்களை தொடர்ந்து, கடந்த மார்ச் தொடங்கி மே மாதம் வரையிலான விற்பனையில் கியா செல்டோஸ் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. புள்ளி விவரங்களின்படி, செல்டோஸ் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 10 யூனிட்கள் என 3 மாதங்களில் 32 ஆயிரத்து 204 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. ஆனால், இந்த விற்பனையை மேலும் ஊக்குவிப்பதற்காக புதியதாக இரண்டு வேரியண்களை தென்கொரிய நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவை முறையே TX (O) மற்றும் X-Line (O) என குறிப்பிடப்படுகின்றன.

செல்டோஸ் புதிய வேரியண்ட்களின் விவரங்கள்:

ஜிடிஎக்ஸ் (ஓ) மற்றும் எக்ஸ்-லைன் (ஓ) ஆகிய புதிய வேரியன்ட்களால் செல்டோஸ் மிட்சைஸ் எஸ்யூவி லைன் - அப் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இவற்றின் விலை ரூ. 2,156,900 (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது. புதிய வேரியன்ட்களின் மிகப்பெரிய சிறப்பம்சம், இந்த செக்மென்ட்டிலேயே முன்னணியில் உள்ள ADAS F+ தொகுப்பு வழங்கப்பட்டு இருப்பதாகும். இதில் 28-க்கும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் அடங்கியுள்ளன. இந்த அப்டேட்டின் மூலம், 2026 கியா செல்டோஸ் ஆனது மேம்பட்ட பாதுகாப்பு, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் வசதியை" வழங்கும் என்று கியா பெருமிதம் தெரிவித்துள்ளது.

ADAS F+ பாதுகாப்பு அம்சங்கள்:

செல்டோஸில் புதியதாக இணைக்கப்பட்டுள்ள ADAS F+ பேக்கேஜ் ஆனது ஃப்ரண்ட் கொலிசன் அவாய்டன்ஸ் அசிஸ்ட் - ஜங்க்சன் க்ராஸ்ஸிங், ஃப்ரண்ட் கொலிசன் அவாய்டன்ஸ் அசிஸ்ட் - லேன் சேஞ்ச் ஆன் - கமிங், ஃப்ரண்ட் கொலிசன் அவாய்டன்ஸ் அசிஸ்ட் - லேன் சேஞ்ச் சைட், எவாசிவ் ஸ்டியரிங் அசிஸ் உடன் கூடிய ஃப்ரண்ட் கொலிசன் அவாய்டன்ஸ் அசிஸ்ட், நேவிகேஷன் பேஸ்ட்  ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல் ஜோன், நேவிகேஷன் பேஸ்ட்  ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல் கர்வ் மற்றும் ட்ரைவிங் அசிஸ்ட் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்: Sierra EV Price List: சியாரா மின்சார எடிஷனின் வேரியண்ட், விலை, கலர்..! பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டி உண்மையா?

செல்டோஸில் அப்க்ரேட் செய்யப்பட்ட அம்சங்கள்

புதிய கியா செல்டோஸ் GTX (O) மற்றும் X-லைன் (O) வேரியண்ட்டுகளில், கனெக்டட் கார் நேவிகேஷன் காக்பிட், 85-க்கும் மேற்பட்ட அம்சங்களுடன் கூடிய கியா கனெக்ட் 2.0, பிராந்திய மொழிகளில் குரல் வழி வசதி, விண்ட்ஷீல்டில் ஒளியைப் பாய்ச்சும் ஹெட்-அப் டிஸ்ப்ளே (HUD), டிஜிட்டல் சாவி, AQI டிஸ்ப்ளேவுடன் கூடிய ஸ்மார்ட் ஏர் பியூரிஃபையர், முன் மற்றும் பின் கேமராவுடன் கூடிய ஸ்மார்ட் டாஷ்கேம் (மொபைல் செயலியுடன்), அனைத்து பவர் விண்டோக்களுக்கும் ஒன்-டச் ஆட்டோ அப்/டவுன் வசதி மற்றும் ரெயின் சென்சிங் வைப்பர்கள் ஆகிய அம்சங்களும் பொருத்தப்பட்டுள்ளன. 


Kia Seltos: டாப் 3 போதாது..! புதுசா 2 வேரியண்ட்களை இறக்கிய கியா - 28 ADAS அம்சங்கள் - புது செல்டோஸ் எப்படி?

செல்டோஸ் இன்ஜினில் மாற்றமில்லை:

செல்டோஸில் இன்ஜின் அடிப்படையில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய GTX (O) மற்றும் X-Line (O) வேரியண்ட்கள், 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. இந்த எஸ்யுவி, கியாவின் K3 ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டே தொடர்கிறது. தேசிய அளவிலான பாதுகாப்பு பரிசோதனையில் 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. செல்டோஸ் மாடலின் மொத்த விலைவரம்பானது ரூ.14.15 லட்சத்தில் தொடங்கி ரூ.25.20 லட்சம் ரூபாய் வரை நீள்கிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Embed widget