போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
ஹோண்டா நிறுவனத்தின் Honda Elevate காருக்கு ஜனவரி மாத சலுகையாக ரூபாய் 1.76 லட்சம் தள்ளுபடி அளித்துள்ளது ஹோண்டா நிறுவனம்.

இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்று ஹோண்டா. இரு சக்கர வாகன சந்தையில் மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தும் ஹோண்டா நிறுவனத்தின் கார்களுக்கும் இந்தியாவில் தனி வரவேற்பு உள்ளது.
ரூ.1.76 லட்சம் தள்ளுபடி:
புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது கார்களுக்கு தள்ளுபடி அறிவிக்கும். அந்த வகையில், ஹோண்டா நிறுவனம் தனது கார்களுக்கும் தள்ளுபடி அறிவித்துள்ளது.
ஹோண்டா நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற கார் Honda Elevate. புத்தாண்டான 2026ம் ஆண்டின் முதல் மாதமான இந்த ஜனவரி மாதம் Honda Elevate காருக்கு ரூபாய் 1.76 லட்சம் வரை தள்ளுபடி அளித்துள்ளது ஹோண்டா நிறுவனம். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.
வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி:
இந்த காரின் ஷோ ரூம் விலை ரூபாய் 10.99 லட்சம் ஆகும். இதன் ஆன் ரோட் தொடக்க விலை ரூபாய் 13.64 லட்சம் ஆகும். ஜனவரி மாத சலுகையாக ரூபாய் 1.76 லட்சம் தள்ளுபடி அளித்துள்ளதால் இந்த காரை ரூபாய் 12 லட்சத்திற்கும் குறைவான விலையிலே வாங்கலாம். புத்தாண்டில் கார் வாங்க கருதியவர்களுக்கு இந்த விலை குறைப்பு மிகவும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இந்திய சந்தையில் ஹோண்டா கார்களுக்கு மிகப்பெரிய வெற்றியை தற்போது தருவது இந்த Honda Elevate கார் ஆகும். இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் மொத்தம் 22 வேரியண்ட்கள் உள்ளது.
வேரியண்ட்களும் விலையும்:
Elevate SV MT - ரூ.13.64 லட்சம்
Elevate V MT - ரூ.14.81 லட்சம்
Elevate V CVT - ரூ.16.22 லட்சம்
Elevate VX MT - ரூ.16.81 லட்சம்
Elevate Elite Pack VX MT - ரூ.16.94 லட்சம்
Elevate Apex Edition VX MT - ரூ.17.12 லட்சம்
Elevate VX CVT - ரூ.18.22 லட்சம்
Elevate Apex Edition VX CVT - ரூ.18.30 லட்சம்
Elevate ZX MT - ரூ.18.35 லட்சம்
Elevate Elite Pack VX CVT - ரூ.18.36 லட்சம்
Elevate Elite Pack ZX MT - ரூ.18.49 லட்சம்
Elevate Black Edition ZX MT - ரூ.18.61 லட்சம்
Elevate Signature Black Edition ZX MT - ரூ.18.89 லட்சம்
Elevate ADV Edition MT - ரூ.19.04 லட்சம்
Elevate ADV Edition MT Dual Tone - ரூ.19.28 லட்சம்
Elevate ZX CVT - ரூ.19.78 லட்சம்
Elevate Elite Pack ZX CVT - ரூ.19.98 லட்சம்
Elevate Black Edition ZX CVT - ரூ.20.10 லட்சம்
Elevate Signature Black Edition ZX CVT - ரூ.20.33 லட்சம்
Elevate ZX CVT Dual Tone - ரூ.20.45 லட்சம்
Elevate ADV Edition CVT - ரூ.20.48 லட்சம்
Elevate ADV Edition CVT Dual Tone - ரூ.20.73 லட்சம்
மைலேஜ்:
1498 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்ட இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வெர்சனாகவும் உள்ளது. 17 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது.119 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது இந்த கார். இந்த கார் முழுக்க முழுக்க பெட்ரோலில் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1.5 லிட்டர் i-VTEC பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் மிகவும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காராக உள்ளது. 6 கியர்கள் மேனுவல் காரில் உள்ளது. மிகவும் சுமூகமாக உள்ள இந்த காரில் 6 ஏர்பேக்குகள் உள்ளது.





















