மேலும் அறிய

Hero Destini 110: குடும்பஸ்தனுக்கு ஏற்ற வண்டி... பெட்ரோல் நிறைய குடிக்கமாட்டான்? மைலேஜில் அசத்தும் ஹீரோ டெஸ்டினி

Hero Destini 110 Mileage: ஹீரோ டெஸ்டினி 110 ஸ்கூட்டரை நகர சாலைகளிலும் நெடுஞ்சாலைகளிலும் எவ்வளவு மைலேஜ் கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Hero Destini 110 Mileage: தினமும் அலுவலகம் செல்பவர்கள், குடும்பத் தேவைகளுக்காக ஸ்கூட்டர் வாங்க விரும்புபவர்கள் அதிகம் கேட்டும் கேள்வி - "இந்த வண்டி எவ்வளவு மைலேஜ் தரும்?" என்றுதான். அவர்களுக்காக ஆட்டோ நிபுணர்கள் ஹீரோ டெஸ்டினி 110 ஸ்கூட்டரை நகர சாலைகளிலும் நெடுஞ்சாலைகளிலும் சோதித்துப் பார்த்து, உண்மையான மைலேஜ் என்ன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

ஹீரோ டெஸ்டினி 110 பைக்கில் 110.9சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சின் உள்ளது. இது 7,250rpm-ல் 8.1hp பவரையும், 5,750rpm-ல் 8.7Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது ஹீரோவின் தனித்துவமான i3S தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. சாலையில் சிக்னலில் சில வினாடிகள் நிறுத்தும்போது எஞ்சின் நின்றுவிடும். ஆக்சிலரேட்டரை அழுத்தும்போது மீண்டும் ஸ்டார்ட் ஆகும். இதன் மூலம் பெட்ரோல் சேமிக்கப்படுகிறது.

சிட்டியில் மைலேஜ் எவ்வளவு?

ஆட்டோ நிபுணர்கள் ஹீரோ டெஸ்டினி 110 ஐ நகரத்தில் 46.1 கிலோமீட்டர் ஓட்டினர். பரபரப்பான சாலைகளில் சீரான வேகத்தில் ஓட்டினர். சோதனைக்குப் பிறகு, மீண்டும் டேங்க் நிரப்ப 0.80 லிட்டர் பெட்ரோல் தேவைப்பட்டது. இதன் பொருள் ஹீரோ டெஸ்டினி 110 நகரத்தில் லிட்டருக்கு 54.10 கிலோமீட்டர் மைலேஜ் கொடுத்தது. தினமும் அலுவலகம் மற்றும் கடைக்கு செல்பவர்களுக்கு இது நல்ல மைலேஜ் என்று கூறலாம்.

ஹைவேஸில் மைலேஜ் எவ்வளவு?

ஆட்டோ நிபுணர்கள் ஹீரோ டெஸ்டினி 110 ஐ நெடுஞ்சாலையில் 51.3 கிலோமீட்டர் ஓட்டினர். பெரும்பாலான நேரங்களில், வேகம் 65 முதல் 70 கிலோமீட்டர் வரை பராமரிக்கப்பட்டது. சோதனைக்குப் பிறகு, மீண்டும் டேங்க் நிரப்ப 0.80 லிட்டர் பெட்ரோல் தேவைப்பட்டது. அதாவது - ஹீரோ டெஸ்டினி 110 நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 64.10 கிலோமீட்டர் மைலேஜ் கொடுத்தது. தினமும் தொலைதூர இடங்களுக்குச் செல்வோருக்கு இது மிகவும் உகந்ததாக இருக்கும்

சராசரி மைலேஜ்

நகரம் மற்றும் நெடுஞ்சாலை முடிவுகளை இணைத்து, சராசரி பெட்ரோல் சிக்கனம் லிட்டருக்கு 59.15 கிமீ ஆகும். 110சிசி ஸ்கூட்டர் பிரிவில் இது ஒரு ஆப்ஷன் ஆகும்.

மைலேஜ் பகுப்பாய்வு

ஹீரோ டெஸ்டினி 110 முதன்மையாக குடும்ப பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது செயல்திறனில் மிதமான சக்தியை வழங்குகிறது. வேகமாக செல்ல விரும்புவோரை விட, சீராக செல்ல விரும்புவோருக்கு இது மிகவும் பொருத்தமானது. நகரப் பயணத்தில் நிபுணர்கள் நிலையான வேகத்தைப் பராமரித்தனர். நெடுஞ்சாலையில் கூட, அவர்கள் அதிக வேகத்தில் இல்லாமல் மணிக்கு 65-70 கிமீ வேகத்தில் ஓட்டினர். இந்த ஸ்கூட்டரில் சராசரி மைலேஜ் குறிகாட்டியும் உள்ளது. ஓட்டுநர் உடனடியாக தனது சவாரி பாணியை மாற்றி, சிறந்த மைலேஜை அடைய முடியும். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். சவாரி செய்யும் பாணி, போக்குவரத்து மற்றும் சாலை நிலைமைகளைப் பொறுத்து மைலேஜ் மாறுபடும்.

மைலேஜ் சோதனை எப்படி செய்யப்பட்டது?

முதலில், பெட்ரோ டேங்க் முழுவதுமாக நிரப்பப்பட்டது. டயர் அழுத்தம் நிறுவனம் பரிந்துரைக்கும் அழுத்தத்திற்கு அமைக்கப்பட்டது. நகரம் மற்றும் நெடுஞ்சாலை பயணங்கள் ஒரே பாதையில் செய்யப்பட்டன. இரண்டு சோதனைகளிலும் சவாரி எடை மற்றும் சுமை ஒரே மாதிரியாக வைக்கப்பட்டன. சோதனைக்குப் பிறகு, டேங்க்மீண்டும் நிரப்பப்பட்டது. டிரிப் மீட்டருடன் நுகரப்படும் பெட்ரோலின் அளவை ஒப்பிட்டு சரியான முடிவு பெறப்பட்டது. நீங்கள் தினமும் 20-30 கிலோமீட்டர் பயணம் செய்யும் நபராக  இருந்தால், ஹீரோ டெஸ்டினி 110 நல்ல மைலேஜ் மற்றும் வசதியை வழங்கும். இந்த சோதனைகள் நகரத்தில் அதிகமாகப் பயன்படுத்தினால் லிட்டருக்கு 54 கிமீ மைலேஜ் தரும் என்றும், நெடுஞ்சாலையில் அதிகமாகப் பயன்படுத்தினால் லிட்டருக்கு 64 கிமீ மைலேஜ் தரும் என்றும் காட்டுகின்றன.

விலை

தமிழ்நாட்டில் அனைத்து செலவுகளையும் சேர்த்து ஆன்-ரோடு விலை தோரயமாக ரூ. 91,332 முதல் ரூ. 98,060 வரை இருக்கும்.

தலைப்பு செய்திகள்

Brezza Facelift: டர்போ எஞ்சின், புதிய தோற்றம்.! அட்டசாகமான மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் வெளியீட்டு தேதி அறிவிப்பு
டர்போ எஞ்சின், புதிய தோற்றம்.! அட்டசாகமான மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Maruti Dzire வாங்கலாமா? நல்ல மைலேஜ், பாதுகாப்பு, வசதி ஓகோ... ஆனால் ஒரு குறை! ப்ளஸ், மைனஸ் என்ன?
Maruti Dzire வாங்கலாமா? நல்ல மைலேஜ், பாதுகாப்பு, வசதி ஓகோ... ஆனால் ஒரு குறை! ப்ளஸ், மைனஸ் என்ன?
ஒரே சார்ஜில் 175 கி.மீட்டர் மைலேஜ்! சர்ட்டுனு போய்ட்டு விர்ட்டுனு வர Oben Rorr EZ இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 175 கி.மீட்டர் மைலேஜ்! சர்ட்டுனு போய்ட்டு விர்ட்டுனு வர Oben Rorr EZ இ பைக் - விலை எவ்ளோ?
டாடா சியரா EV vs கர்வ் EV: விலை, ரேஞ்ச், அம்சங்கள் - எது பெஸ்ட்? எது வர்த்? டீடெயில் அலசல்
டாடா சியரா EV vs கர்வ் EV: விலை, ரேஞ்ச், அம்சங்கள் - எது பெஸ்ட்? எது வர்த்? டீடெயில் அலசல்

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
Embed widget