மேலும் அறிய

Fortuner Rival: பெஸ்ட் மைலேஜில் ஃபார்ட்சுனரின் போட்டியாளர் - பட்ஜெட்டில் அடங்குமா? SUV-யின் லாஞ்ச் தேதி லாக்..!

Fortuner Rival SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஃபார்ட்சுனரின் போட்டியாளராக மட்டுமின்றி, பிரிவிலேயே அதிக மைலேஜ் வழங்கும் எஸ்யுவி ஆக ஜெட்டூர் T2 (Jetour T2) சந்தைப்படுத்தப்பட உள்ளதாம்.

 Fortuner Rival SUV: ஃபார்ட்சுனரின் போட்டியாளராக JSW நிறுவனமானது ஜெட்டூர் T2 (Jetour T2) மாடலை அக்டோபர் மாதம் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாம்.

JSW ஜெட்டூர் T2 லாஞ்ச் எப்போது?

சீனாவின் முன்னணி ஏற்றுமதி நிறுவனமான செரி உடனான ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவின் தனிப்பட்ட கார் பிராண்டாக தனக்கான இடத்தை பிடிக்க JSW மோட்டார்ஸ் நிறுவன்ம தீவிரம் காட்டி வருகிறது. இந்த கூட்டு முயற்சியின் முதல் மாடலாக ஜெட்டூர் T2 காரை வரும் தீபாவளி சீசனில் (அக்டோபர் மாதம்) விற்பனைக்கு கொண்டு வர பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய எஸ்யுவியை மகாராஷ்டிரவின் சம்பாஜி நகரில் உள்ள தனது ஆலையில் அசெம்பிளி செய்ய JSW மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

ஜெட்டூர் T2 - விலை, போட்டியாளர்கள்:

JSW நிறுவனமானது உள்ளூர் சந்தையில் ஜெட்டூர் T2 கார் மாடலின் சர்வதேச எடிஷனான ப்ளக்-இன் ஹைப்ரிட் மாடலையே விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட உள்ளதால் போட்டித்தன்மை மிக்கதாக,  30 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்படலாம். இதனால் டொயோட்டா ஃபார்ட்சுனர், எம்ஜி மெஜஸ்டர் மற்றும் ஸ்கோடா கோடியாக் ஆகிய மாடல்களுடன் போட்டியிட உள்ளது. பிரதான போட்டியாளரான ஃபார்ட்சுனரின் விலை வரம்பு, ரூ.34.76 லட்சத்தில் தொடங்கி ரூ.50.46 லட்சம் வரை நீள்கிறது. இந்த பிரிவில் இடம்பெறும் மற்ற மாடல்கள் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்க, ப்ளக் -இன் ஹைப்ரிட் எடிஷனில் கிடைக்கும் T2 அதிக மைலேஜ் திறனை கொண்டிருக்கும்.

ஜெட்டூர் T2 - மைலேஜ் எப்படி?

ஜெட்டூர் T2 மாடலில் 1.5-லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜினுடன் 26.7kWh பேட்டரி பேக் இணைக்கப்பட்டுள்ளது. இதை ஒற்றை-மோட்டார் ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் அல்லது இரட்டை-மோட்டார் ஆல் வீல் ட்ரைவ் ஆப்ஷனிலோ பயனர்கள் தேர்வு செய்யலாம். இந்த பேட்டரி பேக், NEDC தரமதிப்பீட்டின்படி 139 கி.மீ. தூரம் வரை முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வ தரவுகளானது, இந்த ப்ளக் இன் ஹைப்ரிட் மின்சார எஸ்யுவி ஆனது 100 கி.மீ-க்கு 0.8-5.4 லிட்டர் என்ற ஒருங்கிணைந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது. தோராயமாக முழு டேங்கிற்கு எரிபொருளை நிரப்பி பயணம் செய்த பிறகு, மின்சார பயன்பாட்டில் 125 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியுமாம். பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டிருக்கும்போதும், SUV ஆனது EV பயன்முறையில் இயங்கும்போதும் மட்டுமே அதிகபட்ச மைலேஜை அடைய முடியும்.


Fortuner Rival: பெஸ்ட் மைலேஜில் ஃபார்ட்சுனரின் போட்டியாளர் - பட்ஜெட்டில் அடங்குமா? SUV-யின் லாஞ்ச் தேதி லாக்..!

ஜெட்டூர் T2 - மைலேஜ் ஒப்பீடு

ஒப்பீட்டளவில், 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின்களைக் கொண்ட டொயோட்டா ஃபார்ட்சுனர், முறையே லிட்டருக்கு 10.3 கி.மீ மற்றும் லிட்டருக்கு 14.6 கி.மீ வரை மைலேஜ் தருவதாகக் கூறப்படுகிறது. ஸ்கோடா கோடியாக் லிட்டருக்கு 14.86 கி.மீ வழங்க,  எம்ஜி மஜெஸ்டரின் அதிகாரப்பூர்வ மைலேஜ் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த எண்களின் அடிப்படையில், ஜெட்டூர் டி2 அதன் பிரிவில் மிகவும் எரிபொருள் சிக்கனமான வாகனமாக செயல்பட உள்ளது.

இதையும் படியுங்கள்: Honda Discounts: ஹைப்ரிட் தொடங்கி SUV வரை..! ரூ.2.15 லட்சம் தள்ளுபடியை தாராளமாய் தந்த ஹோண்டா - எது டாப்?

ஜெட்டூர் T2 - முக்கிய அம்சங்கள்

சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் எடிஷனைப் போலவே, இந்தியாவிற்கு வரவிருக்கும் ஜெட்டூர் T2 வாகனமும் பல மேம்பட்ட அம்சங்களை கொண்டு ப்ரீமியம் மாடலாக விளங்க உள்ளது. அதன்படி, 

  • 15.6 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  • 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே
  • ஸ்போர்ட்டி ஸ்டீயரிங் வீல்
  • வயர்லெஸ் மொபைல் சார்ஜர்
  • பனோரமிக் சன்ரூஃப்
  • பின்புற ஏசி வென்ட்கள்
  • முன் இருக்கை பயணிகளுக்கான வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்
  • டூயல் ஜோன் தானியங்கி காலநிலை கட்டுப்பாடு
  • 12-ஸ்பீக்கர் சோனி சவுண்ட் சிஸ்டம்
  • ஆம்பியண்ட் லைட்கள்
  • மின்சார மற்றும் காற்றோட்ட வசதியுள்ள முன் இருக்கைகள்
  • ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல்
  • 360 டிகிரி கேமரா
  • லெவல் 2 ADAS
  • எலெக்ட்ரிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல்
  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்
  • முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள்
  • ஹில் ஹோல்ட் அசிஸ்ட்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

அப்டேட்டாகி வந்த அந்நியன்.. அறிமுகமாகியது ராயல் என்ஃபீல்டின் Continental GT 650 பைக்
அப்டேட்டாகி வந்த அந்நியன்.. அறிமுகமாகியது ராயல் என்ஃபீல்டின் Continental GT 650 பைக்
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Embed widget