Upcoming EV Cars: ராஜாங்கம் நடத்தப்போகும் டாடா! அடுத்தடுத்து அறிமுகமாகப்போகும் 5 மின்சார கார்கள்! என்னென்ன?
டாடா நிறுவனம் இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் 5 மின்சார கார்களை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவில் மின்சார கார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மின்சார கார்கள் தயாரிப்பில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக திகழ்வது டாடா.
டாடா நிறுவனம் விரைவில் இந்தியாவில் புதியதாக 5 மின்சார கார்களை அறிமுகப்படுத்த உள்ளது.
1.Tata Safari.ev:
டாடாவின் புகழ்பெற்ற கார்களில் ஒன்று Tata Safari. சொகுசு காரான இந்த காரில் மின்சார வேரியண்டாக இந்திய சந்தையில் அடுத்தாண்டு அறிமுகமாக உள்ளது Tata Safari.ev. இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் மற்றும் எம்ஜி ஹெக்டர் டோமாஹக் மின்சார காருக்கு போட்டியாக அமையும் என்று கருதப்படுகிறது. இதன் பேட்டரி ஆற்றல், மற்ற சிறப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
2. Next-gen Tata Nexon.ev:
டாடாவின் பட்ஜெட் விலை கார்களில் மிகவும் வெற்றிகரமான கார் Tata Nexon. இதன் மின்சார வேரியண்டாக Tata Nexon.ev கார் தற்போது விற்பனையாகி வருகிறது. இதன் அடுத்த தலைமுறை காராக Next-gen Tata Nexon.ev காரை இந்தியாவில் களமிறக்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தாண்டு அடுத்தாண்டு பிற்பாதியில் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.
3. Avinya EV:
இந்திய மின்சார கார் சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கார் Avinya EV. டாடாவின் மிகவும் சொகுசு வகை மின்சார காராக இந்த கார் கருதப்படுகிறது. கடந்தாண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போ 2026-யில் காட்சிப்படுத்தப்பட்டது. இதன் தோற்றமே இந்த எதிர்பார்ப்பிற்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த கார் அடுத்தாண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.
4. Tata Kuno:
டாடா நெக்ஸான் மின்சார கார் மற்றும் சியாரா மின்சார காருக்கு இடைப்பட்ட அளவில் 4.3 மீட்டர் அளவில் இந்தியாவில் டாடா அறிமுகப்படுத்த உள்ள மின்சார கார் இந்த Tata Kuno. இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகமானால் மின்சார கார் சந்தையில் டாடாவின் ஆதிக்கம் அதிகளவு இருக்கும் என்று கருதப்படுகிறது. குஜராத்தில் இந்த கார் தயாரிக்கப்பட உள்ள நிலையில், 2028ம் ஆண்டு இந்த கார் அறிமுகமாகிறது.
5. Tata Scarlet:
ரெனால்ட் நிறுவனத்தின் மின்சார காரான Renault Briger EV காருக்கு போட்டியாக டாடா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள கார் இந்த Tata Scarlet. மினி சியாரா காராக இந்த கார் தோற்றத்தில் அமைந்துள்ளது. சப் 4 மீட்டர் எஸ்யூவி காரான இந்த கார் இந்தியாவில் 2028ம் ஆண்டு அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















