8 வருட பேட்டரி வாரண்டி; ரேஞ்ச்? இந்தியாவின் நம்பகமான டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
Electric Scooter With 8 Year Battery Warranty: 8 வருட பேட்டரி வாரண்டியுடன் கிடைக்கும் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்: வடிவமைப்பு மற்றும் ரேஞ்ச் விவரங்கள்!

எலக்ட்ரிக் பைக் என்றாலே பேட்டரி செயல்திறன்தான் முதலில் கேட்கப்படும் கேள்வியாக இருக்கும். இந்தியாவில் பேட்டரி மாற்றம் என்பது மலிவாக இருப்பதில்லை. இதற்கு 40 ஆயிரம் முதல் 90 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.
இந்த நிலையில், பயனர்களின் நீண்ட கால பயன்பாட்டிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், அதிகபட்சமாக 8 வருட பேட்டரி வாரண்டியுடன் இந்திய சந்தையில் கிடைக்கும் 5 சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வடிவமைப்பு, கட்டமைப்பு மற்றும் ரேஞ்ச் விவரங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
- ஓலா எஸ்1 (Ola S1)
- பேட்டரி வாரண்டி: ஓலாவின் வழக்கமான பேட்டரி 3 ஆண்டுகள் அல்லது 40 ஆயிரம் கி.மீ. அளிக்கப்படுகிறது. டாப் அப் திட்டமாக 8 வருடங்கள் அல்லது 80,000 கி.மீ, 1 லட்சம், 1.25 லட்சம் கி.மீ. பேட்டரி வாரண்டி வழங்கப்படுகிறது.
- வடிவமைப்பு: டியூபுலர் ஃபிரேம் அமைப்புடன், எதிர்காலத்திற்கு ஏற்ற மென்மையான மற்றும் மினிமல் டிசைனைக் கொண்டுள்ளது. தட்டையான ஃபுட்போர்டு வசதி உள்ளது.
- ரேஞ்ச்: ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 195 கி.மீ ரேஞ்ச் வழங்குகிறது.
- ஏத்தர் 450எக்ஸ் (Ather 450X)
- வாரண்டி: அதிகபட்ச பேட்டரி பாதுகாப்பிற்கான நீட்டிக்கப்பட்ட (Extended) வாரண்டி திட்டங்கள் உள்ளன. இதன்படி 8 ஆண்டுகள் அல்லது 80 ஆயிரம் கி.மீ. திட்டங்கள் உள்ளன. 8 ஆண்டுகளுக்குள் பேட்டரி செயல்திறன் 70 சதவீதத்துக்கும் கீழே சென்றால், பேட்டரி முழுவதும் இலவசமாக மாற்றித் தரப்படும்.
- வடிவமைப்பு: ஸ்போர்ட்டியான, கூர்மையான ஏரோடைனமிக் டிசைன். அலுமினியம் சேஸிஸ் கட்டமைப்புடன் சிறந்த பேலன்ஸ் மற்றும் ஓட்டும் அனுபவத்தைத் தருகிறது.
- ரேஞ்ச்: ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ ரேஞ்ச் வரை செல்லும்.
- டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube)
- வாரண்டி: பேட்டரிக்கு 3 ஆண்டு அல்லது 50 ஆயிரம் கி.மீ. வாரண்டி பேக்கேஜ்கள் வழங்கப்படுகின்றன. கூடுதலாக 2 ஆண்டுகள் அல்லது 20 ஆயிரம் கி,மீ. வாரண்டி டாப் அப்பாக வழங்கப்படுகிறது. அதேபோல பேட்டரி ஏஸ் எ சர்வீஸ் திட்டத்தின்கீழ், 7 ஆண்டுகள் அல்லது 70 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு பேட்டரி வாரண்டி அளிக்கப்படுகிறது.
- வடிவமைப்பு: அனைத்து வயதினருக்கும், குறிப்பாக குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்ற பாரம்பரிய ஸ்கூட்டர் வடிவம். அகலமான இருக்கை மற்றும் உறுதியான கட்டமைப்பு கொண்டது.
- ரேஞ்ச்: மாடலை பொறுத்து 100 கி.மீ முதல் 145 கி.மீ வரை ரேஞ்ச் வழங்குகிறது.
- சிம்பிள் ஒன் (Simple One)
சிம்பிள் ஒன் பைக் 8 ஆண்டுகள் பேட்டரி வாரண்டியை நேரடியாகவே 8 ஆண்டுகளுக்கு தருகிறது. ஓலா, ஏதர் போல பெய்ட் டாப் அப்பாக அல்லாமல், இந்த வாரண்டி இருக்கிறது. எனினும் வாரண்டி விதிமுறைகள் மாறிக் கொண்டே இருப்பதால், ஒருமுறை டீலரிடம் சரிபார்த்துக் கொள்வது முக்கியம்.
- ஹீரோ விடா வி1 ப்ரோ (Hero Vida V1 Pro)
- வாரண்டி: விடா பைக்கில் 5 ஆண்டுகள் அல்லது 60 ஆயிரம் கி.மீ. என்ற அடிப்படையில், நீண்ட கால பேட்டரி வாரண்டித் திட்டம் உள்ளது.
- வடிவமைப்பு: ஸ்கூட்டரில் இருந்து தனியாக கழற்றி சார்ஜ் செய்யக்கூடிய மாடுலர் பேட்டரி கட்டமைப்பு மற்றும் ஸ்பிளிட் சீட் கொண்ட தனித்துவமான டிசைன்.
- ரேஞ்ச்: ஒருமுறை சார்ஜ் செய்தால் 165 கி.மீ ரேஞ்ச் வழங்குகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்























