மேலும் அறிய

Maruti S Presso: நாட்டின் மலிவான CNG கார், 32KM மைலேஜ், சிட்டிக்கான குட்டி காருக்கு ரூ.4,800 போதும் - முழு விவரம்

Cheapest CNG Maruti Suzuki S Presso: நாட்டின் மலிவான சின்ஜி கார் மாடலான மாருதி சுசூகி எஸ் ப்ரெஸ்ஸோ குறித்த முழு விவரங்களையும் இந்த தொகுப்பில் அறியலாம்.

Cheapest CNG Maruti Suzuki S Presso: நாட்டின் மலிவான சின்ஜி கார் மாடலான மாருதி சுசூகி எஸ் ப்ரெஸ்ஸோ குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

மாருதி சுசூகி எஸ் ப்ரெஸ்ஸோ சிஎன்ஜி

இந்தியாவில் அடுத்த சில மாதங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய வாய்ப்பில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விற்பனையாகும் விலையில் காரை பயன்படுத்துவது என்பதே பொதுமக்களுக்கு மிகப்பெரிய செலவாக கருதப்படுகிறது. அதேநேரம், நல்ல மைலேஜை வழங்கக் கூடிய சிஎன்ஜி கார்கள் பொதுமக்களுக்கு வரப்பிரசாதமாக திகழ்கிறது. குறிப்பாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் சிறிய மற்றும் நல்ல மைலேஜை தரக்கூடிய சிஎன்ஜி பயன்படுத்துவது என்பது, பொருளாதார ரீதியாக நல்ல சேமிப்பை வழங்குவதோடு, கையாள்வதற்கு மிகவும் எளிதானதகாவும் இருக்கும். அந்த வகையில் நாட்டிலேயே மலிவான சிஎன்ஜி காரான மாருதி சுசூகி எஸ்-ப்ரெஸ்ஸோ கார் மாடலை, மலிவு விலையில் சொந்தமாக்குவதற்கான நிதி திட்ட விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

எஸ் ப்ரெஸ்ஸோ CNG - விலை விவரங்கள்

எஸ் ப்ரெஸ்ஸோ கார் மாடலானது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் அம்சங்களில், ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதுபோக  4 சீட்டர் மற்றும் 5 சீட்டர் கான்ஃபிகரேஷனிலும் பயனர்கள் எஸ் ப்ரெஸ்ஸோ காரை தேர்வு செய்யலாம். ஒட்டுமொத்தமாக 8 ட்ரிம்களில் கிடைக்கும் இந்த காரின் விலையானது ரூ.3.50 லட்சத்தில் தொடங்கி ரூ.5.25 லட்சம் ரூபாய் வரை நீள்கிறது. என்ட்ரி லெவல் சிஎன்ஜி மேனுவல் எடிஷனின் ஆன் - ரோட் விலை 5 லட்சத்து 41 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இதில் ரூ.4.6 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையும், ரூ.55 ஆயிரம் பதிவு கட்டணமும், காப்பீட்டு தொகையாக 18 ஆயிரம் ரூபாயும் அடங்கும்.

எஸ் ப்ரெஸ்ஸோ CNG - ரூ.4,800 போதும்

எஸ் ப்ரெஸ்ஸோவின் எண்ட்ரி லெவல் காரை மாதாந்திர தவணை முறையில் சொந்தமாக்க விரும்பி, எரிபொருள் செலவை கருத்தில் கொண்டு தயங்குகிறார்களா? எனில் உங்களுக்கு சிஎன்ஜி எடிஷன் உங்களுக்கான நல்ல தேர்வாக இருக்கும். இப்படி வங்கிக் கடன் மூலம் காரை வாங்க விரும்புபவர்கள், முடிந்தவரையில் மிகப்பெரிய தொகையை டவுன் - பேமண்டாக செலுத்த முயலுங்கள். அப்போது தான் குறைந்த கடனுடன், வட்டி செலவும் மிகவும் கணிசமாக இருக்கும். அந்த வகையில் சுமார் 3 லட்சம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, மீதமுள்ள ரூ.2.41 லட்சத்தை கடனாக பெறுவதாக கொள்வோம். வழக்கமாக கார் கடனுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில்  7.45 தொடங்கி 11.50 சதவிகிதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு 8 சதவிகித வட்டியில் கடனை வாங்கினால், மாதந்திர தவணையாக சுமார் ரூ.4,800 செலுத்த வேண்டியிருக்கும். அந்த வகையில் சுமார் 52 ஆயிரம் ரூபாய் வட்டியுடன் சேர்த்து மொத்தமாக 2 லட்சத்து 93 ஆயிரம் ரூபாயை திருப்பி செலுத்துவீர்கள். அதாவது 5 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய்க்கு எஸ்.ப்ரெஸ்ஸோ காரை நீங்கள் சொந்தமாக்கலாம்.

இதையும் படியுங்கள்: Honda 7 Seater: டாடா., மஹிந்த்ராவின் 7 சீட்டர்களுக்கு போட்டியாக ஹோண்டா..! ஹைப்ரிட்டில் கலக்குமா? விலை?

எஸ் ப்ரெஸ்ஸோ CNG - மைலேஜ்

எஸ் ப்ரெஸ்ஸோ சிஎன்ஜி கார் மாடலானது 1.0 லிட்டர் கே10சி டூயல்ஜெட்  3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் கொண்டுள்ளது. கிலோவிற்கு 32.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்தாலும், நிஜ உலக பயன்பாட்டில் 24 முதல் 30 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் அளிப்பதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வலுவான எரிபொருள் செயல்திறனானது கூடுதல், கூடுதல் வட்டி என்பது வீண் செலவில்லை என்ற அளவிலான பலனை அளிக்கிறது.


Maruti S Presso: நாட்டின் மலிவான CNG கார், 32KM மைலேஜ், சிட்டிக்கான குட்டி காருக்கு ரூ.4,800 போதும் - முழு விவரம்

எஸ் ப்ரெஸ்ஸோ CNG - அம்சங்கள், வசதிகள்

ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ கம்பேடிபிலிட்டி  உடன் கூடிய 7 இன்ச் ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ  டச்ஸ்க்ரீன் சிஸ்டம், ப்ளஸ் ஸ்டியரிங் மவுண்டட்  ஆடியோ மற்றும் வாய்ஸ் கன்ட்ரோல்கள், கமேண்டிங் சீட்டிங் பொசிஷன், செண்டர் மவுண்டட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், மேனுவல் ஏசி, ஃப்ரண்ட் பவர் விண்டோக்கள், ஆம்பிள் லெக்ரூம் ஆகியவை உள்ளன. பாதுகாப்பிற்காக ஹில் ஹோல்ட் கன்ட்ரோலுடன் கூடிய எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம், ரிவர்ஸ் பார்கிங் சென்சார்கள் மற்றும் இரண்டு ஏர் பேக்குகள் ஆகியவை உள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget