மேலும் அறிய

காரில் ஏசி போடும்போது மைலேஜ் குறைகிறதா? பெட்ரோல் செலவை மிச்சப்படுத்த இதோ எளிய டிப்ஸ்!

கோடைக்காலத்தில் உங்கள் கார் ஏசியை முறையாகப் பயன்படுத்துவது நல்ல குளிர்ச்சியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பெட்ரோலையும் சேமிக்கும். சில எளிய அமைப்புகளுடன், நீங்கள் வசதியாகப் பயணிக்கலாம்.

கோடைகாலத்தில் காரில் ஏசி  பயன்படுத்துவது சொகுசு என்பதைத் தாண்டி, முக்கிய தேவையாக மாறிவிட்டது. சுட்டெரிக்கும் வெயிலில் ஏசி இல்லாமல் பயணிப்பது முடியாத காரியம். ஆனால், நம்மில் பலரும் காரில் ஏறிய உடனே ஏசியை ஆன் செய்கிறோம். இதனால் காரின் மைலேஜ் குறைவதோடு, பெட்ரோல், டீசல் செலவும் எகிறுகிறது என்பது பலருக்கு தெரிவதில்லை காரின் ஏசியை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி, எரிபொருளையும் மிச்சப்படுத்தி, அதே நேரத்தில் காரையும் சூப்பராகக் குளிர்விப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் சில எளிய டிப்ஸ்களை காணலாம்.

காரில் ஏசியை எப்படி பயன்படுத்த வேண்டும்?

வெயிலில் நிறுத்தப்பட்டிருக்கும் காரின் உட்பகுதி (Cabin) மிகக் குறுகிய காலத்திலேயே அதிக வெப்பமடைந்துவிடுகிறது. இத்தகைய சூழ்நிலையில், காரில் அமர்ந்த உடனே ஏசியை முழு வேகத்தில் ஆன் செய்வது போதுமானது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது தவறு. காரை எடுத்தவுடன் முதலில் சில விநாடிகளுக்கு காரின் ஜன்னல்களைத் திறந்து வைத்து, உள்ளே இருக்கும் வெப்பமான காற்று வெளியேற அனுமதிக்க வேண்டும். அதன் பிறகுதான் காரில் ஏசியை ஆன் செய்ய வேண்டும்.

ஏசியை ஆன் செய்ததும், முதலில் ப்ளோயரை (Blower) நடுத்தர வேகத்தில் (Medium speed) வைக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது காரின் உட்பகுதியை விரைவாகக் குளிர்விக்க உதவும். ப்ளோயரை முதலில் மீடியம் ஸ்பீடில் வைப்பதால், ஏசி சிஸ்டத்தின் மீது திடீர் அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

ரீசர்குலேஷன் மோட் (Recirculation Mode) தரும் நன்மைகள்

காரில் ஏசி போடும்போது 'ரீசர்குலேஷன் மோட்'டை பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. இது வெளிப்புறத்திலிருந்து வரும் வெப்பமான காற்று காருக்குள் நுழைவதைத் தடுக்கிறது. உள்ளே இருக்கும் காற்றையே மீண்டும் மீண்டும் குளிர்விப்பதால் காரின் உட்பகுதி மிக விரைவாகக் குளிரடைகிறது. எனவே, ஏசியை இந்த முறையில் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது சிறந்த குளிர்ச்சியைத் தருவதோடு, எரிபொருளையும் கணிசமாக மிச்சப்படுத்துகிறது.

இதையும் படிங்க: அலட்சியம் வேண்டாம்! கோடைகாலத்தில் பிரேக் ஃபெயிலியர் ஆக இதுதான் காரணம் - தப்பிக்க எளிய டிப்ஸ்

மைலேஜை அதிகரிக்கும் சிறிய டிப்ஸ்


காரை ஓட்டும்போது நாம் செய்யும் சில சிறிய தவறுகள் பெட்ரோல் செலவை தேவையின்றி அதிகரிக்கின்றன. காரை நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருக்கும் போது, இன்ஜினை ஆன் செய்து ஏசியை இயக்குவது அதிக எரிபொருளை உறிஞ்சும். அதேபோல், ஏசியின் வெப்பநிலையை (Temperature) மிகக் குறைவாக வைப்பதும் இன்ஜினுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

ஏசியின் வெப்பநிலையை எப்போதும் 22 முதல் 24 டிகிரி வரை வைத்திருக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இது சிறந்த குளிர்ச்சிக்கும், நல்ல மைலேஜுக்கும் உகந்த அளவாகக் கருதப்படுகிறது.

ஏசி சர்வீஸ் மற்றும் பராமரிப்பு

காரின் ஏசி சிஸ்டத்தை அவ்வப்போது சர்வீஸ் செய்வதும், ஏர் ஃபில்டரை (Air filter) சுத்தமாக வைத்திருப்பதும் அவசியமாகும். அழுக்கடைந்த ஃபில்டர் ஏசியின் குளிர்ச்சித் திறனைக் குறைத்து, இன்ஜின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். ஃபில்டரை சுத்தமாக வைத்திருப்பது இன்ஜின் சுமையைக் குறைக்கும்.

வாகனம் ஓட்டும்போது இந்த எளிய விஷயங்களைப் பின்பற்றினால், இந்த கோடைகாலத்தில் வசதியான பயணத்தோடு, பெட்ரோல் செலவையும் உங்களால் மிச்சப்படுத்த முடியும்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
Jaguar Type 01 EV Car: மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
Tata Avinya X Launch: லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
சேலத்தில் தெறிக்கவிடப்போகும் கார், பைக் சாகசங்கள்! உங்க காருடன் நீங்களும் வரலாம்? எப்போது? எங்கே?
சேலத்தில் தெறிக்கவிடப்போகும் கார், பைக் சாகசங்கள்! உங்க காருடன் நீங்களும் வரலாம்? எப்போது? எங்கே?

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
JD Vance Vs Iran: “சும்மா வாக்குறுதி கொடுத்தா மட்டும் போதாது, முதல்ல...“ ஈரானுக்கு செக் வைத்த அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்
“சும்மா வாக்குறுதி கொடுத்தா மட்டும் போதாது, முதல்ல...“ ஈரானுக்கு செக் வைத்த அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்
Embed widget