மேலும் அறிய

April Car Sales: மீண்டும் திரும்பிய ஆல்டோ மவுசு.. எகிறிய மாருதி சுஸுகி விற்பனை! ஏப்ரல் மாதத்தில் மட்டும் இத்தனை லட்சமா?

April Car Sales: 2026 ஏப்ரல் மாதத்தில் மட்டும் 2.39 லட்சம் கார்கள் யூனிட்களை விற்பனை செய்து, தனது நிறுவன வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு உச்சபட்ச மாதாந்திர விற்பனையைப் பதிவு செய்துள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் துறையின் ஜாம்பவானான மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட், புதிய நிதியாண்டை அதிரடியான விற்பனை வளர்ச்சியுடன் தொடங்கியுள்ளது.  2026 ஏப்ரல் மாதத்தில் மட்டும் அதிக யூனிட்களை விற்பனை செய்து, தனது நிறுவன வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு உச்சபட்ச மாதாந்திர விற்பனையைப் பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் 1,79,791 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியிருந்த நிலையில், தற்போது நிறுவனம் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது. உள்நாட்டு சந்தையில் மட்டும் 1,91,122 யூனிட்களை விற்பனை செய்து மாருதி சுஸுகி புதிய சாதனை படைத்துள்ளது.

சிறிய ரக கார்கள் விற்பனை

பயணிகள் வாகனப் பிரிவில் மாருதி சுஸுகி அபாரமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. குறிப்பாக ஆல்டோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ போன்ற மாடல்களை உள்ளடக்கிய 'மினி செக்மென்ட்' பிரிவில் விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 6,332 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியிருந்த நிலையில், தற்போது 16,066 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம் நடுத்தர வர்க்க மக்களிடையே சிறிய ரக கார்களுக்கான மவுசு மீண்டும் திரும்புவது உறுதியாகியுள்ளது. அதேபோல் பலேனோ, ஸ்விஃப்ட், டிசையர் மற்றும் வேகன்-ஆர் போன்ற நிறுவனத்தின் முதுகெலும்பாக விளங்கும் காம்பாக்ட் மற்றும் மிட்-சைஸ் பிரிவில் 80,659 யூனிட்கள் விற்பனையாகி அசத்தியுள்ளன.

எஸ்யுவி மற்றும் எம்பிவி பிரிவில் மாருதியின் ஆதிக்கம்

தற்போதைய சந்தை மாற்றத்திற்கு ஏற்ப, பயன்பாட்டு வாகனங்கள் (Utility Vehicles) பிரிவிலும் மாருதி சுஸுகி தனது முத்திரையைப் பதித்து வருகிறது. பிரெஸ்ஸா, எர்டிகா, கிராண்ட் விட்டாரா மற்றும் ஃபிரான்க்ஸ் போன்ற பிரபலமான மாடல்களின் உதவியுடன் இப்பிரிவில் 77,892 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 59,022 ஆக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. குடும்பங்கள் மற்றும் வணிகத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஈக்கோ (Eeco) வேன் விற்பனையும் 13,087 யூனிட்களாக அதிகரித்துள்ளது.

ஏற்றுமதியிலும் மாருதி சுஸுகி மாஸ்

வணிக வாகனப் பிரிவில் மாருதி சுஸுகி சூப்பர் கேரி 3,418 யூனிட்கள் விற்பனையைப் பதிவு செய்துள்ளது. உள்நாட்டு விற்பனை ஒருபுறம் இருக்க, சர்வதேச சந்தைகளுக்கான ஏற்றுமதியிலும் மாருதி சுஸுகி தனது பலத்தை நிரூபித்துள்ளது. கடந்த ஆண்டு 27,911 யூனிட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 40,054 யூனிட்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

முதலிடத்தில் மாருதி.. மிரட்டும் மற்ற நிறுவனங்கள்

ஏப்ரல் மாத விற்பனையில் டாடா மோட்டார்ஸ் (59,701 யூனிட்கள்) மற்றும் ஹூண்டாய் (51,902 யூனிட்கள்) ஆகிய நிறுவனங்களும் நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இருப்பினும், பல லட்சம் யூனிட்களை விற்பனை செய்து மாருதி சுஸுகி தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தியை அதிகரித்துள்ளதாலும், புதிய மாடல்களை அறிமுகம் செய்ததாலும் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே போன்ற வளர்ச்சியை நடப்பு நிதியாண்டு முழுவதும் தொடரப் போவதாக மாருதி சுஸுகி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
Long Trip Cars: ரோட் ட்ரிப் போக விரும்புபவரா? நீங்க தேர்வு செய்ய வேண்டிய டாப் 5 SUV மாடல்கள் - ஏன்? எதற்கு?
ரோட் ட்ரிப் போக விரும்புபவரா? நீங்க தேர்வு செய்ய வேண்டிய டாப் 5 SUV மாடல்கள் - ஏன்? எதற்கு?
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
Embed widget