மேலும் அறிய

மாஸ் என்ட்ரி கொடுத்த Flying Flea C6! எலெக்ட்ரிக் யுகத்திலும் கெத்து காட்டும் ராயல் என்பீல்டு.. ஏப்ரல் விற்பனை

இமாலயன் 450 இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் இதற்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் உலகளவில் 38,000 யூனிட்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

நாட்டின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் என்பீல்டு, புதிய நிதியாண்டை (2026-27) அதிரடியான வளர்ச்சியுடன் தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பைக்குகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது. 

விற்பனை விவரங்கள்:

2026 ஏப்ரல் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் மொத்தம் 1,13,164 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 86,559 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியிருந்த நிலையில், தற்போது 31 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.  இந்திய சந்தையில் மட்டும் 1,04,129 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட 37 சதவீத வளர்ச்சியாகும். சர்வதேச சந்தைகளுக்கான ஏற்றுமதி 14 சதவீதம் குறைந்து, 9,035 யூனிட்களாக உள்ளது.

'பிளையிங் பிளீ C6' முரட்டு வளர்ச்சி

ராயல் என்பீல்டு வரலாற்றில் 2026 ஏப்ரல் மாதம் ஒரு மைல்கல்லாக மாறியுள்ளது. நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக்கான 'பிளையிங் பிளீ C6' (Flying Flea C6) சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெட்ரோ ஸ்டைல் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த பைக், வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

நிறுவனத்தின் 'சிட்டி பிளஸ்' (City Plus) எலெக்ட்ரிக் மொபிலிட்டி தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக இது கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது பெங்களூருவில் உள்ள முதல் ரீடைல் அவுட்லெட் மூலம் விற்பனை செய்யப்படும் இந்த பைக், விரைவில் நாடு முழுவதும் படிப்படியாகக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் டாப் 3-யில் ராயல் என்பீல்டு

பிராண்ட் ஃபைனான்ஸ் (Brand Finance) நிறுவனம் வெளியிட்ட தரவரிசைப்படி, 2026-ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது வலிமையான ஆட்டோமொபைல் பிராண்டாக ராயல் என்பீல்டு உருவெடுத்துள்ளது.

இதற்கிடையில், இளைஞர்களைக் கவரும் வகையில் ஹண்டர் 350 (Hunter 350) மாடலில் புதிய 'பேஸ் பிரீமியம்' வேரியண்ட் மற்றும் கூடுதல் வண்ணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சாகச விரும்பிகளுக்காக செப்டம்பர் மாதம் லடாக்கில் 'இமாலயன் பேஸ் கேம்ப்' நிகழ்வையும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இமாலயன் 450-ன் அசுர வளர்ச்சி

உலகளவில் தனது பிரிவில் அதிகம் விற்பனையாகும் பைக்காக இமாலயன் 450 உருவெடுத்துள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் இதற்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் உலகளவில் 38,000 யூனிட்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. "புதிய நிதியாண்டை வலுவான வளர்ச்சியுடன் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களின் முதல் எலெக்ட்ரிக் பைக்கான பிளையிங் பிளீ C6-க்கு கிடைத்துள்ள வரவேற்பு எங்களுக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது." ஐஷர் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் பி. கோவிந்தராஜன்

இதுமட்டுமின்றி, நிறுவனத்தின் 125 ஆண்டுகால வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் 'ஹெரிடேஜ் கலெக்ஷன்' உடைகள் மற்றும் கிளாசிக் 500 மினியேச்சர் மாடல்களையும் ராயல் என்பீல்டு அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய கிளாசிக் தோற்றத்தை மாற்றாமல், எதிர்காலத் தேவைகளுக்காக எலெக்ட்ரிக் வாகனத் துறையில் ராயல் என்பீல்டு எடுத்து வைக்கும் இந்த அடி, பைக் பிரியர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Safest SUV: ”உயிருக்கு உத்தரவாதம்னா நாங்க தான்” நாட்டின் பாதுகாப்பான 5 எஸ்யுவிக்கள் - முழு விவரம் இதோ
”உயிருக்கு உத்தரவாதம்னா நாங்க தான்” நாட்டின் பாதுகாப்பான 5 எஸ்யுவிக்கள் - முழு விவரம் இதோ
Toyota Hyryder: திடீரென விலையை உயர்த்திய டொயோட்டா..! எந்த காருக்கு தெரியுமா? அதுவும் ரூ.1.5 லட்சமா?
திடீரென விலையை உயர்த்திய டொயோட்டா..! எந்த காருக்கு தெரியுமா? அதுவும் ரூ.1.5 லட்சமா?
MG Windsor EV: கூடுதல் ரேஞ்சிற்காக பெரிய பேட்டரியுடன் வரும் எம்ஜி விண்ட்சர் - வசதிகளும், விலையும் - லாஞ்ச்?
கூடுதல் ரேஞ்சிற்காக பெரிய பேட்டரியுடன் வரும் எம்ஜி விண்ட்சர் - வசதிகளும், விலையும் - லாஞ்ச்?
XEV 9e Sporteq: மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?
மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? - பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? - பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
சென்னையில் இன்று மழை வெளுத்து வாங்குமாம்.. வேற எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை - வானிலை ரிப்போர்ட்
சென்னையில் இன்று மழை வெளுத்து வாங்குமாம்.. வேற எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை - வானிலை ரிப்போர்ட்
தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியது உண்மையா? - தமிழக அரசு சொன்ன பளீச் விளக்கம் என்ன தெரியுமா?
தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியது உண்மையா? - தமிழக அரசு சொன்ன பளீச் விளக்கம் என்ன தெரியுமா?
எஸ்கேப் ஆன பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன்? - திருமண ஆசை காட்டி ஏமாற்றினாரா? முழு விவரம் என்ன?
எஸ்கேப் ஆன பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன்? - திருமண ஆசை காட்டி ஏமாற்றினாரா? முழு விவரம் என்ன?
இந்திய வான் பாதுகாப்பில் முக்கிய மைல்கல்! - 'ஜ்வாலா எம்.கே-1' சோதனை வெற்றி!
இந்திய வான் பாதுகாப்பில் முக்கிய மைல்கல்! - 'ஜ்வாலா எம்.கே-1' சோதனை வெற்றி!
Shubman Gill: ”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
Congress:
Congress: "100 தொகுதிகளுக்கு மேல் கண்டிப்பாக வேணும்.." அகிலேஷ் யாதவிடம் காங்கிரஸ் கறார் காட்டுவது ஏன்?
Embed widget