மேலும் அறிய

Tata Sumo: சியாரா ஓவர்.. 9 சீட்டராக ஒரிஜினல் SUV கிங்கை இறக்க டாடா திட்டம் - அப்க்ரேட் எடிஷன் எப்படி? எப்போ?

New Generation Tata Sumo: டாடா நிறுவனம் சியாரா காரின் அப்க்ரேடட் எடிஷன்களை சந்தைப்படுத்தி முடித்ததும், மற்றொரு லெஜண்டரி மாடலான சுமோ காரை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாம்.

New Generation Tata Sumo: விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ள டாடா சுமோ காரில் என்ன எதிர்பார்க்கலாம் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

டாடா அடுக்கும் புதிய கார் மாடல்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வரும் 2031ம் ஆண்டு முடிவிற்குள், 6 முற்றிலும் புதிய கார் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதே காலகட்டதில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மற்றும் புத்துயிரூட்டப்பட்ட 20 கார் மாடல்களையும் சந்தைப்படுத்த உள்ளூர் கார் உற்பத்தி நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த வகையில் உள்ளூர் கார் உற்பத்தி நிறுவனமானது முதன்முறையாக 3 வரிசை இருக்கைகளை கொண்ட எம்பிவி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் களமிறங்க உள்ளதாம். குறிப்பிடத்தக்க வகையில் அவின்யா எனும் துணை ப்ராண்டின் மூலம் நிறுவனம் வரும் 2027ம் ஆண்டில் புதிய கார் மாடல்களையும் அறிமுகப்படுத்த உள்ளது. 

புதிய தலைமுறை டாடா சுமோ..!

டாடா மோட்டார்ஸ், வர்த்தக மற்றும் தனி பயண வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு, எஸ்யுவி பாணியிலான 3-வரிசை இருக்கை வாகனத்தை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பிரிவில் தற்போது மாருதி சுசூகி நிறுவனத்தின் எர்டிகா, கியா கேரன்ஸ் க்ளாவிஸ் மற்றும் மாருதி எக்ஸ்எல்6 ஆகிய மாடல்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. பழைய லெஜண்டரி மாடலான சியாராவைப் போலவே, 'டாடா சுமோ' என்ற பெயரை மீண்டும் கொண்டு வர உள்ளூர் கார் உற்பத்தி நிறுவனம் பரிசீலித்து வருகிறதாம். 3-வரிசை எஸ்யுவி பாணியிலான புதிய மாடல் 'சுமோ' என்ற பெயரை பயன்படுத்த உள்ளதாம்.  இருப்பினும், இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

புதிய டாடா சுமோ எப்போது வரும்?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது எதிர்கால கார் மாடல்களை காட்சிப்படுத்த ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வுகளை வரலாற்று ரீதியாகப் பயன்படுத்தி வருகிறது. அதன்படி, பாரத் மொபிலிட்டி க்ளோபல் எக்ஸ்போவின் அடுத்த எடிஷனில், டாடா சுமோ பெயர் ஒரு கான்செப்ட் வடிவத்தில் அறிமுகமாகக் கூடும். டாடா நிறுவனம் தனது உண்மையான திட்டங்களை இன்னும் வெளியிடாததால், இவை அனைத்தும் யூகங்களே ஆகும். இந்நிறுவனம், புதிய எம்பிவியை வடிவமைத்து உருவாக்க ஆர்கோஸ் ப்ளாட்ஃபார்மை பயன்படுத்தக்கூடும். இந்தத் தளம் தற்போது சியாரா இன்ஜின் எடிஷனின் அடிப்படையாக உள்ளது. புதிய எடிஷன் எத்தனை இருக்கை வசதிகள், எப்படிப்பட்ட இன்ஜின் ஆப்ஷன்கள் உடன் வரும் என்பது போன்ற எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

டாடா சுமோ எனும் ஜாம்பவான்..

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரான சுமந்த் மூல்கௌகரின் பெயரின் சுருக்கமாகவே சுமோ என்ற பெயர் இந்த கார் மாடலுக்கு வழங்கப்பட்டது. 10 பேர் வரை அமரும் வகையிலான இருக்கை வசதிகளுடன் 1994ம் ஆண்டு அறிமுகமான டாடா சுமோ, கடந்த 2019ம் ஆண்டு சந்தையில் இருந்து வெளியேறியது. இந்த கார் மாடல் எந்தவொரு பயணத்திற்கும் ஏற்றதாகவும், பரந்த விசாலமான இடவசதி, வலுவான திறன் ஆகியவற்றால், நகரம் மட்டுமின்றி கிராமப்புறங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அறிமுகம் ஆகியிருந்தாலும், ஒரு சில மாடல்கள் தான் அடையாளமாக காலம் கடந்து நிலைத்து நிற்கும். அதில் தவிர்க்க முடியாத ஒரு கார் தான், டாடா சுமோ.

இதையும் படியுங்கள்: Swift CNG: ரூ.9000 பட்ஜெட்டில் 33KM மைலேஜ் ப்ரீமியம் ஹேட்ச்பேக்.. அசத்தலான பாதுகாப்பு, முழு EMI விவரங்கள்

கட்டுமஸ்தான வடிவமைப்புடன் பலதரப்பட்ட பயன்பாடுகளுக்கான சிறந்த தேர்வாக இந்த வாகனம் விளங்கியது. குடும்பமாக வெளியே செல்வதற்கான நல்ல ஆப்ஷனாகவும், சினிமாக்களில் டான் என்றாலே சுமோ இருக்கும் என்ற ஒரு அடையாளமும் தவிர்க்க முடியாததாய் மாறியது.  இந்நிலையில் தான், புதிய வடிவில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் அப்டேடட் டாடா சுமோ விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ள சுமோ மாடலானது புதிய வெளியீடாக மட்டுமின்றி, இந்திய ஆட்டோமொபைலின் சின்னங்களில் ஒன்றான சுமோவின் மறுபிறவியாக கருதப்படுகிறது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
டகால்டி காட்டாத Ducati பைக்.. இருக்கதுலே இதுதான் விலை கம்மி - எவ்ளோ? என்ன வண்டி?
டகால்டி காட்டாத Ducati பைக்.. இருக்கதுலே இதுதான் விலை கம்மி - எவ்ளோ? என்ன வண்டி?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
Embed widget