மேலும் அறிய

“சும்மாவா 7 லட்சம் பேர் வாங்குவாங்க?” - கியா செல்டோஸ் கார் இவ்வளவு பிரபலமாக இருக்க இதுதான் காரணம்

இந்தியாவில் 7 லட்சம் விற்பனையைத் தாண்டி கியா செல்டோஸ் புதிய சாதனை படைத்துள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடுத்தர எஸ்யூவி பிரிவில் தனது மவுசை தொடர்ந்து தக்க வைத்து வரும், கியா செல்டோஸ் (Kia Seltos) கார் உள்நாட்டுச் சந்தையில் 7 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. 2026-ஆம் ஆண்டில் வெறும் 10 மாதங்களில் 1.13 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன.

கியா செல்டோஸின் விலை ரூ. 11 லட்சத்தில் தொடங்குகிறது. அதாவது இது நடுத்தர வர்க்க மக்களின் பட்ஜெட்டிற்குள் வாங்கக்கூடிய ஒரு கார் ஆகும்.

ஏழே ஆண்டுகளில் 7 லட்சத்திற்கும் அதிகமான விற்பனை

செல்டோஸ், இந்தியாவில் கியா தயாரித்த முதல் கார் ஆகும். இந்த எஸ்யூவி 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22  ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல், அக்டோபர் 2026 வரை உள்நாட்டு சந்தையில் மொத்தம் 7,04,829 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கியா நிறுவனம் இதுவரை விற்பனை செய்துள்ள மொத்த 16.8 லட்சம் வாகனங்களில், செல்டோஸ் காரின் பங்கு மட்டும் சுமார் 36 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டுச் சந்தையில் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும் செல்டோஸ் முன்னணியில் உள்ளது. இதுவரை 1.6 லட்சத்திற்கும் அதிகமான செல்டோஸ் கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இரண்டாம் தலைமுறை மாடலால் மளமளவென உயர்ந்த விற்பனை

இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய பொலிவுடன் அறிமுகமான இரண்டாம் தலைமுறை (Second Generation) செல்டோஸ் மாடல், வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. 2026 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1,13,078 செல்டோஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் விற்பனையான 60,526 கார்களுடன் ஒப்பிடுகையில், இது 87 சதவீத அபார வளர்ச்சியாகும்.

பிப்ரவரி முதல் அக்டோபர் வரையிலான 9 மாதங்களில் மட்டும் 1,02,439 கார்கள் விற்கப்பட்டுள்ளன. அதாவது, சராசரியாக ஒவ்வொரு மாதமும் 11,000-க்கும் மேற்பட்ட கார்களை மக்கள் வாங்கியுள்ளனர். ஜூன் மாதத்தைத் தவிர மற்ற அனைத்து மாதங்களிலும் 10,000-க்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.

அக்டோபரில் கியா படைத்த புதிய சாதனை

2026 அக்டோபர் மாதம் கியா நிறுவனத்திற்கு மிகவும் சிறப்பான மாதமாக அமைந்துள்ளது. அந்த ஒரே மாதத்தில் மட்டும் கியா நிறுவனம் 33,462 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் கியா நிறுவனம் பதிவு செய்த அதிகபட்ச மாதாந்திர விற்பனை இதுவாகும். இதே காலகட்டத்தில்தான் செல்டோஸ் 7 லட்சம் விற்பனை என்ற மைல்கல்லைக் கடந்தது.

கியா நிறுவனத்தின் இரண்டாவது அதிகம் விற்பனையாகும் காரான சோனெட், உள்நாட்டு விற்பனையில் செல்டோஸை விட சுமார் 1.1 லட்சம் யூனிட்கள் பின்தங்கியுள்ளது. மற்றொரு மாடலான கேரன்ஸ்  சீரிஸ் இதுவரை 3,31,186 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.

போட்டி கடுமையா இருந்தாலும் மவுசு குறையல

நடுத்தர எஸ்யூவி பிரிவில் எலக்ட்ரிக் கார்கள் மற்றும் ஹைப்ரிட் கார்கள்  உட்பட 20-க்கும் மேற்பட்ட மாடல்கள் போட்டியிடுகின்றன. இருப்பினும், செல்டோஸ் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது. 2026 ஜனவரி முதல் அக்டோபர் வரை 81,090 யூனிட்கள் விற்பனையாகி, செல்டோஸ் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் முன்னிலையில் உள்ள டாப் 4 கார்கள்:

மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio): 1,12,841 யூனிட்கள்

ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta): 1,07,682 யூனிட்கள்

மாருதி விக்டோரிஸ் (Maruti Victoris): 88,804 யூனிட்கள்

கியா செல்டோஸ் (Kia Seltos): 81,090 யூனிட்கள்

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

சிங்கிள் சார்ஜில் 670 கி.மீ. ரேஞ்ச்.. உலகையே அதிர வைத்த புதிய எலெக்ட்ரிக் கார், சிறப்பம்சங்கள், விலை என்ன? முழு விவரம்
சிங்கிள் சார்ஜில் 670 கி.மீ. ரேஞ்ச்.. உலகையே அதிர வைத்த புதிய எலெக்ட்ரிக் கார், சிறப்பம்சங்கள், விலை என்ன? முழு விவரம்
Himalayan 750: ஹிமாலயன் 750 புக்கிங் எப்போ? ராயல் என்ஃபீல்டின் டாப் மாடலுக்கான அம்சங்கள், வசதிகள், விலை
ஹிமாலயன் 750 புக்கிங் எப்போ? ராயல் என்ஃபீல்டின் டாப் மாடலுக்கான அம்சங்கள், வசதிகள், விலை
Maruti Micro-SUV: ஃப்ராங்க்ஸைவிட குட்டி, டாடா பஞ்ச்சை டார்கெட் செய்யும் மாருதி..! SUV-யில் என்ன இருக்கும்?
ஃப்ராங்க்ஸைவிட குட்டி, டாடா பஞ்ச்சை டார்கெட் செய்யும் மாருதி..! SUV-யில் என்ன இருக்கும்?
Upcoming Off Road Bikes: Royal Enfield முதல் Hero வரை.. அட்டகாசமாய் வரப்போகும் 5 அட்வெஞ்சர் பைக்குகள்! என்னென்ன?
Upcoming Off Road Bikes: Royal Enfield முதல் Hero வரை.. அட்டகாசமாய் வரப்போகும் 5 அட்வெஞ்சர் பைக்குகள்! என்னென்ன?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு எதிராக தீர்ப்பு - செக் வைத்த நீதிபதி!
காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு எதிராக தீர்ப்பு - செக் வைத்த நீதிபதி!
U19 ஆசியக்கோப்பை தொடரில் வெற்றி வாகை சூடிய இந்தியா! - பாகிஸ்தானை பந்தாடி த்ரில் வெற்றி!
U19 ஆசியக்கோப்பை தொடரில் வெற்றி வாகை சூடிய இந்தியா! - பாகிஸ்தானை பந்தாடி த்ரில் வெற்றி!
மதுரை Tanishq-ல் நகை கொள்ளை வழக்கில் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி  மற்றும் பட்டதாரி இளைஞர் கைது !
மதுரை Tanishq-ல் நகை கொள்ளை வழக்கில் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி  மற்றும் பட்டதாரி இளைஞர் கைது !
காவிரி என்ன கர்நாடகாவுக்கு மட்டும் சொந்தமா? முதல்வர் விஜய் யார் உங்களுக்கு முக்கியம்? - டிஆர்பி ராஜா ஆவேசம்
காவிரி என்ன கர்நாடகாவுக்கு மட்டும் சொந்தமா? முதல்வர் விஜய் யார் உங்களுக்கு முக்கியம்? - டிஆர்பி ராஜா ஆவேசம்
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
பாலியல் குற்றச்சாட்டில் அடுத்தடுத்து சிக்கும் TVK நிர்வாகிகள்! உச்சகட்ட கோபத்தில் CM விஜய்! சாட்டையை சுழற்றுவாரா?
பாலியல் குற்றச்சாட்டில் அடுத்தடுத்து சிக்கும் TVK நிர்வாகிகள்! உச்சகட்ட கோபத்தில் CM விஜய்! சாட்டையை சுழற்றுவாரா?
"பஞ்ச் டயலாக பேசி ஆட்சி நடத்தும் டம்மி முதல்வர்" - காவல் மரணங்கள் தொடர்வதாக எதிர்க்கட்சித்தலைவர் விமர்சனம்!
பாகிஸ்தானை பந்தாடுமா இந்திய அணி! - இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்கு
பாகிஸ்தானை பந்தாடுமா இந்திய அணி! - இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்கு
Embed widget