மேலும் அறிய

திருப்பதி தரிசன டிக்கெட்: மீண்டும் தொடங்கிய முன்பதிவு: தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடு!

நவ., 18ம் - டிச., 10 வரை 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் திருமலைக்கு வர முடியாத நிலையில் அவர்கள் தங்கள் தரிசன தேதியை வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பூலோக வைகுண்டம் என்ற பெருமைக்குரியது திருப்பதி ஏழுமலையான் கோவில். இங்கு தினசரியும் லட்சக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். உண்டியல் காணிக்கை தினசரியும் கோடிக்கணக்கில் வசூலாகும். கொரோனா காலத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தற்போது தினசரி 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையானை இலவச தரிசனத்தில் சென்று வழிபடும் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அட்டை நேரில் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் திருமலை மற்றும் திருப்பதியில் கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதுடன் மலைப் பாதையில் மண் சரிவும் ஏற்பட்டது. இதனால் திருமலைக்கு செல்லும் மலைப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த நாட்களில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தும், திருமலைக்கு வரமுடியாத பக்தர்களுக்காக தேவஸ்தானம் ஒரு புதிய வாய்ப்பை வழங்கி உள்ளது.

திருப்பதி தரிசன டிக்கெட்: மீண்டும் தொடங்கிய முன்பதிவு: தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடு!

நவ., 18ம் - டிச., 10 வரையிலாத தேதிகளுக்கு 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் திருமலைக்கு வர முடியாத நிலையில் அவர்கள் தங்கள் தரிசன தேதியை வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தேவஸ்தான இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் 27ஆம் தேதி ஏழுமலையானை தரிசிக்க டிசம்பர் மாதத்துக்கான இலவச தரிசன டிக்கெட் முன்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்த்தது. திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்ட சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும் முடிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது மழையால் தரிசனம் செய்யமுடியாதவர்களுக்கான வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கியுள்ளது. எனவே பக்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் தரிசன தேதியை மாற்றி திருமலை பயணத்தை முடிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி தரிசன டிக்கெட்: மீண்டும் தொடங்கிய முன்பதிவு: தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடு!

பூலோக வைகுண்டம், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று, நம்பெருமாள் சௌரிக் கொண்டை, ரத்தினகிளி, ரத்தின அபயஹஸ்தம், நெல்லிக்காய் மாலை, அடுக்கு திருவாபரணங்கள் தரித்து மூலஸ்தானத்திலிருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். டிசம்பர் மாதத்தில் கார்த்திகை மாதம் பாதி நாட்களும் மார்கழி மாதம் பாதி நாட்களும் இணைந்து வருகிறது. இந்த மாதங்களில் ஏராளமானோர் ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்புவார்கள். கொரோனா கட்டுப்பாடுகள் அதிகம் இருந்தாலும் பலரும் ஆர்வத்துடன் ஆன்லைனில் புக் செய்து தரிசனம் செய்து வருகின்றனர். இதனிடையே திருமலை திருப்பதி டைரி, காலண்டர்கள் வாங்குவதற்கு பக்தர்கள் ஆர்வம் காட்டி வருவார்கள். இந்த ஆண்டு டைரி, காலண்டர் ஆன்லைன் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in இணைய தள பக்கத்தில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில்  பகல் பத்து நிகழ்ச்சி
வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் பகல் பத்து நிகழ்ச்சி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
Embed widget