மேலும் அறிய

அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை: ரூ.55.15 லட்சம் காணிக்கை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் புரட்டாசி மாதப் பௌர்ணமி உண்டியல் காணிக்கையாக ரூ.55,15,309 லட்சம், 268 கிராம் தங்கம், 221 கிராம் வெள்ளி கிடைத்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் உண்டியல்கள் வைக்கப்பட்டு, பக்தர்களிடம் இருந்து காணிக்கை பெறப்படுகிறது . அதேபோன்று கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயிலில், அஷ்டலிங்கக் கோயில்கள், திருநேர் அண்ணாமலை கோயில் மற்றும் துர்க்கை அம்மன் கோயில்களிலும் உண்டியல்கள் வைக்கப்பட்டு காணிக்கை பெறுவது வழக்கம். அவ்வாறு உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை, ஒவ்வொரு மாதமும் கணக்கிடப்படும்.

கொரோனா வைரஸ் பரவியதன் எதிரொலியாக நாடு முழுவதும் பொதுமக்களை பாதுகாக்க சுற்றுலா தலங்கள் வணிக தலங்கள் உட்பட அனைத்து ஆன்மீக ஸ்தலங்களும் மூடப்பட்டது. தமிழகம் முழுவதும் கடுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் சுமார் 2 வருடங்களாக மூடப்பட்ட கோவில்கள் கொரோனா வைரஸ் பரவுதல் குறைந்து வருவதால் ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் கொடுக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. 

அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை: ரூ.55.15 லட்சம் காணிக்கை!

தமிழகத்தின் முதன்மைக் கோயிலான திருவண்ணாமலை மாவட்டம் பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய அண்ணாமலையார் கோவிலில் அருள்மிகு கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு முடிந்த நிலையில் பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை மாதம் கடந்த 5ம் தேதி திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டது.

தங்கத்தேர்,  போன்றவை இயக்கப்படாத நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் நாள்தோறும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்ய ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்று திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே அனுப்பப்பட்டு வருகின்றது வந்தனர். இந்நிலையில் பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்ல வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம் கொரோனா தொற்றால் ஊரடங்கு போடப்படத்தால் இந்த முறையும் கிரிவலம் சுற்றுவதற்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தடை விதித்திருந்தார் .

அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை: ரூ.55.15 லட்சம் காணிக்கை!

அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் புரட்டாசி மாதப் பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று  நடைபெற்றது. கோயில் ஊழியர்கள், மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் காணிக்கை எண்ணும் பணியில் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். சுமார் 50 உண்டியல்களில் சேகரிக்கப்பட்ட காணிக்கையை வகைப்படுத்திக் கணக்கிடப்பட்டது.

அதில், ரொக்கமாக ரூ.55 லட்சத்து 15 ஆயிரத்து 309 , 268 கிராம் தங்கம், 221 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, வீடியோ கேமராக்கள் மூலமாகப் பதிவு செய்யப்பட்டது. பக்தர்கள் வருகை அடிப்படை, விழாக்கால நேரத்தை பொறுத்து மாதந்தோறும் உண்டியல் காணிக்கைகளை எண்ணப்படுவது வழக்கம் அந்த அடிப்படையில் ஊரடங்கு விதிமுறைகளுக்கு பின் நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில் திறக்கப்பட்டதால் பக்தர்கள் வருக அடிப்படையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget