மேலும் அறிய

உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழா : அண்ணாமலையார் திருக்கோவிலில் 10 நாட்கள் கொடியேற்றத்துடன் துவக்கம்..

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பல முக்கிய திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். 

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலம் என்றும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலம் என்றும், தெற்கு நோக்கி நகரும் 6 மாத காலத்தினை தட்சிணாயன புண்ணிய காலம் என்றும், வடக்கு நோக்கி நகரும் 6 மாத காலத்தினை உத்தராயண புண்ணிய காலம் என்றும் அழைப்பார்கள்.மகாபாரத கதையின்படி அம்பு படுக்கையில் படுத்திருந்த பீஷ்மர் மகரதமாதம் என்று அழைக்கப்படும். தைமாதம் பிறந்து தான் உயிர்நீத்தார் என்று கூறுகிறது.  மேலும் தைமாதம் முதல் நாள் மகர மாதபிறப்பின்போதுதான் தமிழ்நாட்டில் தைபொங்கல் கொண்டாடப்படுகிறது. சபரிமலையில் மகரஜோதியை பக்தர்கள் தரிசிக்கின்றனர். மேலும் இந்த காலத்தில் தான் சூரியன் உக்கிரம் ( வெயில் தாக்கம் ) தொடங்குகின்றது.  

உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழா : அண்ணாமலையார் திருக்கோவிலில் 10 நாட்கள் கொடியேற்றத்துடன் துவக்கம்..

இந்த நிலையில்தான்  திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தட்சிணாயன புண்ணிய காலம், உத்தராயண புண்ணிய காலம், திருக்கார்த்திகை தீபம் ஆகிய 3 திருவிழாக்களுக்கு அண்ணாமலையார் சன்னதியில்  உள்ள தங்கக்கொடி மரத்திலும், ஆடிப்பூரத்தில் உண்ணாமுலையம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்திலும் கொடியேற்று விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சமேத  உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையாருக்கு  சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, அதன் பின்னர் அண்ணாலையார் சன்னதி அருகே உள்ள தங்க கொடி மரம் அருகே விநாயகர் மற்றும் சமேத உண்ணமுலை அம்மனுடன் அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மன் எழுந்தருளி,சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 63 அடி உயர தங்கக் கொடி மரத்தில் காலை 7.15 மணிக்கு தனூர் லக்கினத்தில்  உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்றும் விழா நடைபெற்றது.

உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழா : அண்ணாமலையார் திருக்கோவிலில் 10 நாட்கள் கொடியேற்றத்துடன் துவக்கம்..

இன்று உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவம் விழா கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடைபெறும். இந்த உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலையிலும்  மாலையிலும் என இரு வேலைகளிலும் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.இதனையடுத்து 10ம் நாளான தை மாதம் முதல் தேதி ஜனவரி 14ம் தேதி அன்று தாமரை குளத்தில் தீர்த்தவாரியோடு இவ்விழா நிறைவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவம் கொடியேற்றம் விழாவில் தற்பொது கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். கொடியேற்ற விழா முடிந்ததும், வழக்கம் போல பக்தர்களை சாமி தரிசனத்துக்கு அனுமதித்தனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
"ஐபிஎல் தொடங்கிடுச்சி.. இவர்களிடம் இருந்து கவனமா இருங்க" எச்சரிக்கும் DGGI
"இந்திய கலாச்சாரத்தின் பெருமை சமஸ்கிருதம்" பதஞ்சலி விழாவில் பாபா ராம்தேவ் புகழாரம்!
Embed widget