மேலும் அறிய

Thaipusam 2024: இன்று தைப்பூசம்! நன்மைகள் நடக்க 12 ராசியினரும் என்ன செய்ய வேண்டும்?

தைப்பூசம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் சூழலில், இன்று 12 ராசியினரும் எப்படி வழிபட வேண்டும் என்பதை கீழே காணலாம்.

உலகம் முழுவதும் உள்ள முருகப்பெருமான் கோயில்களில் இன்று தைப்பூச கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரு

மேஷ ராசி:

அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே, தைப்பூச தினத்தில் முடிந்தவரை முருகப்பெருமானுக்கு ஆறு விளக்குகள் ஏற்றுங்கள். ஆறு கிருத்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட முருகப்பெருமான் மேஷ ராசியில் சஞ்சாரம் செய்யும் கிருத்திகை நட்சத்திரத்தின் அம்சம் கொண்டதாக இருக்கிறபடியால்,  நீங்கள் ஆறு விளக்குகளை தைப்பூச தினத்தில் ஏற்றும் பொழுது முருகனே நேரடியாக உங்க வீட்டில் அவதரிப்பார் .

ரிஷப ராசி:

ரிஷப ராசி வாசகர்களே, உங்களுடைய  ராசியின் படி தைப்பூச தினத்தில்  கந்த சஷ்டி கவசத்தை மனம் உருகி படியுங்கள்.  வீட்டில் நடைபெற்று முடிந்த  அல்லது நடக்கப்போகும் எந்த அசுப காரியங்களும் உங்களை அணுகாமல்  அப்பன் முருகன் பார்த்துக் கொள்வார்.

மிதுன ராசி:

மிதுன ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு ஒரு நோட்டு புத்தகத்தில்  40 முறை அதாவது 8, 8 தடவையாக  முருகன் நாமத்தை எழுத வேண்டும்.  எட்டு தடவை முருகப்பெருமானின் நாமத்தை எழுதிய பிறகு  அடுத்த எட்டு முறை எழுத வேண்டும்  இவ்வாறு 5*8 =40  இவ்வாறு 40 முறை முருகப்பெருமானின் ஏதாவது ஒரு நாமத்தை நோட்டு புத்தகத்தில் பேனாவில் எழுதி வர  தைப்பூச தினத்தில் முருகனுடைய அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும். கஷ்டங்கள் ஆளும் நிம்மதி உண்டாகும். நினைத்த காரியம் நடைபெறும்.

கடக ராசி :

கடக ராசி வாசகர்களே  உங்களுடைய ராசியிலேயே பூச நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் சந்திர பகவான்  உங்களை ஏற்கனவே பரிபூரணமாக ஆசீர்வதித்ததாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.  இருப்பினும் தைப்பூச தினத்தில், நீங்கள் யாருக்கேனும் அன்னதானம் செய்யுங்கள்.  முடியாதவர்கள் காக்கைக்கு உணவு வைக்கலாம்.  அதுவும் முடியாதவர்கள் தெருவில் இருக்கும் நாய்க்கு கூட நீங்கள் உணவு அளிக்கலாம்.  தைப்பூச தினத்தில் நீங்கள் உணவு வழங்கும் பொழுது உங்களுடைய அனைத்து பிரச்சனைகளுக்கும் முருகப்பெருமான் முற்றுப்புள்ளி வைப்பார்.  குப்பையில் இருந்து மனிதர்களை கோபுரத்தில் உயர்த்தும் தைப்பூசம் உங்களையும் உயர்த்தும்.

சிம்ம ராசி :

சிம்ம ராசி வாசகர்களே தைப்பூச தினத்தன்று பூஜை அறையில் 10 நிமிடம் அமர்ந்து முருகப்பெருமானை நோக்கி தியானம் செய்யுங்கள்.  அமைதியான சூழலில் நீங்கள் முருகப்பெருமானை ஒற்றை சிந்தனையோடு நோக்கி பார்க்கும் பொழுது  அவர் உங்களுக்கு  செய்ய வேண்டிய அனைத்து சுப காரியங்களையும் சிறப்பாக செய்து கொடுப்பார்.  சிம்ம ராசி வாசகர்களே தைப்பூசத்தில் தியானத்தை மறந்து விடாதீர்கள். 

கன்னி ராசி :

கன்னி ராசி வாசகர்களே  நாளுக்கு நாள் பெருகி வரும் இயந்திர உலகில்  உங்களைப் போன்ற புத்திசாலிகள்  அடுத்தடுத்த கட்ட பரிமாண வளர்ச்சிக்கு சென்று கொண்டே இருப்பார்கள்.  ஆனால் ஒரு சிலருக்கு வாழ்க்கையில் தடைகள், தாமதங்கள் ஏற்படலாம். அப்படிப்பட்டவர்களுக்கு  இந்த தைப்பூச தினத்தில்  108 முறை  முருகப்பெருமானின் நாமங்களை போற்றி எழுத வேண்டும்.  உதாரணத்திற்கு

  1.   ஓம் கந்தா போற்றி
  2.  ஓம் கதிர்வேலனே போற்றி
  3.  ஓம் வடிவேலனே போற்றி
  4.  ஓம் ஆறுமுகனே போற்றி
  5.  ஓம் கடம்பனை போற்றி
  6.  ஓம் கார்த்திகேயனே போற்றி

 இப்படியாக முருகப்பெருமானின் நாமங்களை 108 முறை போற்றி எழுதி வர,  அந்த நொடியே முருகனின் பரிபூரண அருளை பெற்று வாழ்க்கையில்  நீங்கள் சந்தித்து வந்த பிரச்சனைகளிலிருந்து  சுலபமாக விடுபடலாம்.

துலாம் ராசி :

எனக்கு அன்பார்ந்த துலா ராசி வாசகர்களே  தைப்பூச தினத்தில் நீங்கள் முருகப்பெருமானுக்கு  மண் விளக்கேற்றும்  பயபக்தியுடன்  அவரிடம் மனம் உருகி பிரார்த்திக்கும் போது, உங்களுடைய வேண்டுதல்கள் அனைத்தும்  நிறைவேறும்.  ஒரு விளக்கு மூன்று விளக்கு ஆறு விளக்கு  இதில் நீங்கள் எதை கேட்டாலும் உங்களுக்கு பலன் கிட்டும்.  வாழ்க்கையில் சறுக்கல்கள் இருந்தால்  சரியாகும்.

விருச்சிக ராசி :

எனக்கு அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு நீங்கள் தைப்பூச தினத்தில்  முருகப்பெருமானின் நாமங்களை தியானம் செய்தாலே போதும்.  முருகப்பெருமானின் நாமங்களை பயபக்தியுடன்  பூஜை அறையில்  மனதிற்குள்ளே தியானம் செய்து வந்தால்  கஷ்டங்கள் அவளும் நன்மை பிறக்கும்.

தனுசு ராசி :

தனுசு ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு  நீங்கள் முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை பாடி, அவருடைய மனதை குளிர்வித்தீர்கள் என்றால்  மழை அளவு இருந்த கடன்கள் கடுகளவு  குறைந்து போகும்.  வாழ்க்கையில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி போகும்.  நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்.

மகர ராசி :

மகர ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு முருகப்பெருமானின் படத்துக்கு முன்பாக விளக்கேற்றி வைத்து பத்து நிமிடத்தில் தியானத்தில் ஈடுபட்டால், இதுவரை நீங்கள் சந்தித்து வந்த பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பார் முருகன்.  உங்கள் ராசிக்கு நேர் எதிர் ஏழாவது ராசியில் பூச நட்சத்திரத்தில்  சந்திரன் பிரயாணம் செய்யும் பொழுது சூரியன் உங்கள் ராசியிலேயே பிரயாணம் செய்வார்.  பௌர்ணமி யோகம் உங்கள் ராசிக்கு உண்டு.

கும்ப ராசி :

கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு நீங்கள்  48 முறை  முருகப்பெருமானின் போற்றிகளை எழுதி வர  உங்களுடைய பிரச்சனைகள் அகன்று சந்தோஷம் பெருகும்.  பல நாட்கள் பிரச்சனையினால் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு சரியான உறக்கம் உண்டாகும்.  தைப்பூச தினத்தில் முருகப்பெருமானை பக்தியுடன் வணங்கி வர சங்கடங்கள் விலகும்.

மீன ராசி :

மீன ராசி வாசகர்களே  தைப்பூச தினத்தில் முருகப்பெருமானின்  படத்திற்கு முன்பாக விளக்கேற்றி வைத்து வழிபட்டால்,  வாழ்வில் முன்னேற்றம் பெறலாம்.  தைப்பூசத்தன்று நீங்கள் விளக்கேற்றியும் வழிபடலாம். அல்லது  முருகப்பெருமானின் போற்றிகளை 108 முறை வீட்டில் எழுதி  அதை மனம் உருகி பிரார்த்தித்து முருகனுக்கு சமர்ப்பித்தால், சங்கடங்கள் விலகி சந்தோஷம் பெருகும்.  பகைவரை வென்ற முருகனின்  பாசத்திற்குரிய பக்தராக நீங்கள் மாறுவீர்கள்.  உங்கள் தடைகளை முருகன் பார்த்துக் கொள்வார்.  வாழ்வில் அனைத்து வளங்களும் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள் வணக்கம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
A R Rahman : ரஹ்மான் என் தந்தை மாதிரி...வதந்திகள் பற்றி மெளனம் கலைத்த மோகினி
A R Rahman : ரஹ்மான் என் தந்தை மாதிரி...வதந்திகள் பற்றி மெளனம் கலைத்த மோகினி
Watch Video:
Watch Video: "ராஜா ராஜாதான்" அஜர்பைஜான் நாட்டில் ஒலித்த இசைஞானி பாடல் - பாடியது யார் தெரியுமா?
அதிர்ச்சி! 13 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை: 15 வயது சிறுவன் போக்சோவில் கைது
அதிர்ச்சி! 13 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை: 15 வயது சிறுவன் போக்சோவில் கைது
Embed widget