Sani Vakra Nivarthi Palangal: துலாம், விருச்சிகம், தனுசுக்கு சனி வக்கிர நிவர்த்தியால் என்ன நடக்கப்போது? ஓர் பார்வை
Sani Vakra Nivarthi 2023 Palangal: சனி வக்கிர நிவர்த்தி காரணமாக துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு வாழ்வில் என்ன மாற்றம் நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.
சனி பகவானின் சனி வக்கிர நிவர்த்தி(Sani Vakra Nivarthi) இன்று(நவம்பர் 4-ஆம் தேதி) நடந்துள்ளது. சனி வக்கிர நிவர்த்தி வந்துள்ளதால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் வாழ்வில் ஏராளமான மாற்றங்கள் நடைபெற உள்ளது. துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வக்கிர நிவர்த்தி எந்த வித தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை கீழே காணலாம்.
துலாம் ராசி : 85% வெற்றி உறுதி
அன்பார்ந்த துலா ராசி நேயர்களே.
கடந்த ஒன்றரை வருடங்களாக உங்களுடைய ராசியிலேயே கேது பகவான் அமர்ந்து பல துன்பங்களையும் கஷ்டங்களையும் கொடுத்திருப்பார். இந்த சனி வக்கிர நிவர்த்தியின் மூலமாக உங்களுக்கு பஞ்சமஸ்தானத்தில் வரும் சனி பகவான் அதிர்ஷ்டத்தை கொண்டு வரப் போகிறார். வாழ்க்கையில் பல மாற்றங்களை சந்தித்து இது என்னடா வாழ்க்கை? என்று வெறுத்துப் போய் இருக்கும் உங்களுக்கு சனி பகவானின் வக்கிர நிவர்த்தி நற்செய்தியாக வந்திருக்கிறது.
ஐந்தாம் இடத்தில் இருக்கும் சனி பகவான் பூர்வ புண்ணிய காரியங்களில் வெற்றியடைய செய்வார். குலதெய்வ கோவிலுக்கு சென்று வரச் செய்வார். பிள்ளைகள் வழியில் வெற்றியை கொடுப்பார். வீடு வண்டி வாகனத்தில் பெருத்த லாபத்தை கொடுப்பார். குறிப்பாக ட்ரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தும் நபர்களுக்கு இது ஒரு அமோகமான காலகட்டம். நான்காம் இடத்திற்கு இரண்டாம் இடமான ஐந்தாம் இடத்தில் சனி அமர்வதால் வீடு வாடகைக்கு விட்டிருப்போர், வாகனத்தை வாடகைக்கு விட்டிருப்போர், வாகனம் மூலமாக வருமானம் வைத்து சம்பாதிப்போம். அனைவருக்குமே இது ஏற்றமான காலகட்டம்.
திருமணத்திற்காக காத்திருக்கிறவர்களுக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் அமோகமாக நடக்கும். சனியின் ஆதிக்கம் உங்களின் ஐந்தாம் பாவத்தில் விழுவதால், மனது புத்துணர்ச்சி அடையும், சிந்தனை தெளிவாகும். எடுக்கும் காரியத்தில் வெற்றி அடைவீர்கள். உங்களது பிரம்மாண்ட அறிவை பார்த்து பலர் வியந்து போவார்கள். வழக்குகளில் வெற்றி அடைவீர்கள், கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும், தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். இப்படி அனைத்துமே ஏற்றமாக இருந்தாலும், அடி வயிறு சம்பந்தமாக சில உடல் உபாதைகள் தோன்றலாம், உடல் நலனில் சிறிது அக்கறை தேவை. மொத்தத்தில் இந்த சனி வக்கிர நிவர்த்தி துலா ராசிக்கு அமோகமான காலகட்டம் உங்களுடைய அடுத்த கட்ட நகர்வு வெற்றியை நோக்கிய இருக்கும். வாழ்த்துக்கள்.
அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்டமான எண் : 4, 7
வணங்க வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி
விருச்சக ராசி : 60% நிதானம் தேவை
அன்பார்ந்த விருச்சக ராசி நேயர்களே
உங்களுடைய ராசிக்கு நான்காம் பாவகத்தில் வக்கிரம் பெற்றிருந்த சனி பகவான் தற்போது வக்கிர நிவர்த்தி அடைந்து கும்ப ராசியில் நான்காம் இடத்தில் வீற்றிருக்கிறார். நான்காம் இடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இடம் என்றாலும், விருச்சிகத்திற்கு நான்காம் இடம் சனி பகவானாகவே வருவதால் பெரிதாக ஒன்றும் பாதிப்பை ஏற்படுத்தி விட மாட்டார்.
இயற்கையாகவே நான்காம் இடத்தை சனியின் வீடாக வைத்திருக்கும் உங்களுக்கு நான்கில் வரக்கூடிய சனி புதிய முயற்சிகளில் வெற்றி அடையச் செய்வார். மனச்சோர்வை எடுத்துப் போடுவார். வண்டி வாகனங்களை புதிதாக வாங்கச் செய்வார், புதிய வீட்டுமனையை ஏற்படுத்திக் கொடுப்பார். பிள்ளைகள் வழியில் சில செலவுகளை ஏற்படுத்துவார். இருக்கும் இடத்திலிருந்து தொலைதூரத்திற்கு நகர்த்திச் செல்வார். வெளிநாட்டில் வசிக்க வைப்பார். அண்டை மாநிலமாவது செல்ல வைத்து, அதில் நன்மையை வாரி வழங்குவார்.
மேல்படிப்புக்காக அயல்நாடு செல்வீர்கள். புதிய வேலையை ஏற்படுத்திக் கொடுப்பார். உங்களுக்கு ஐந்தாம் ராகு இருப்பதால் பிள்ளைகள் வழியில் சிறு மனக்கசப்புகளை உண்டாக்க நேரிடலாம். ஆனால் நான்காம் பாவகத்தில் இருக்கும் சனி பகவான் அவற்றை தடுத்து நல்ல பலன்களை வழங்குவார். இருக்கும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் சனியின் கெடு பலன்கள் குறைந்து நல்ல பலன்களே நடக்கும் . வாழ்க்கையில் வெற்றி பெற விநாயகர் வழிபாடு நல்லது. தலைவலி உடல் சோர்வு மூட்டு வலி போன்ற நோய்கள் வரலாம் மருத்துவரை அணுகினால் சிக்கல் இல்லை சுகமே . பொறுமையுடன் இருந்து வெற்றி காண வேண்டிய நேரம் இது.
அதிர்ஷ்டமான நிறம் : பச்சை
அதிர்ஷ்டமான எண் : 4, 6
வழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர்
தனுசு ராசி : 95% வெற்றி உறுதி
அன்பார்ந்த தனுசு ராசி நேயர்களே,
அப்பாடா ஏழரை சனி முடிந்தது என்று பெருமூச்சு விட்ட உங்களுக்கு, கடந்த ஜூன் மாதத்தில் சனி வக்கிரம் பெற்று மீண்டும் பாத சனியாக வந்து அமர்ந்து சில சில சிக்கல்களை கொடுத்திருப்பார் தற்போது நடைபெற்ற சனி வக்கிர நிவர்த்தி பயிற்சியில் உங்களுக்கு மூன்றாம் இடமான கும்பத்தில் நேர் கதியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் எல்லா வளங்களையும் வாரி வழங்க போகிறார். குறிப்பாக குழந்தை பேரு கிடைக்கப் போகிறது.
வெற்றி ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் தொட்ட காரியங்கள் வெற்றி அடையும். இரண்டுக்கும் மூன்றுக்கும் அதிபதியான சனி பகவான் உங்களின் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி பொங்கும். நீண்ட தூர பிரயாணம் மேற்கொள்வீர்கள். சுபச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும் திருமணம் கைகூடி வரும். வீடு, மனை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு எதிர்காலம் சிறப்பாக அமையும் கலைத்துறையினருக்கு ஏற்றமான காலகட்டம்.
பணத்தட்டுப்பாடு நீங்கி தாராளமாக பண வரவு இருக்கப் போகிறது. உங்களது ஐந்தாம் வீட்டிலும் பதினோராம் வீட்டிலும் இருந்த ராகு கேதுக்கள் விலகி நான்கு மற்றும் 10 ஆம் வீட்டில் அமர்வதால், தொழிலில் முன்னேற்றம் தொழிலால் லாப மேன்மை தடைபட்ட காரியங்கள் உடனே நடந்தேறும். வரக்கூடிய காலகட்டம் அற்புதமான காலகட்டம். எதிர்காலம் சிறப்பாக அமையும் வெற்றி வாழ்த்துக்கள் .
அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்டமான எண் : 3
வணங்க வேண்டிய தெய்வம் : தக்ஷிணாமூர்த்தி