Sani Peyarchi 2023: விருச்சிக ராசிக்காரர்களே.. இந்த சங்கடம் வரலாம்.. கவனம்.. சனிப்பெயர்ச்சி பலன்கள் இதோ!
Sani Peyarchi 2023 to 2025 Viruchigam: ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் உங்களின் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். எந்தவொரு வேலையையும் அன்றைய தினத்தில் செய்து முடித்துக் கொள்வது நல்லது.
வரும் சுபகிருது ஆண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி தை 3ஆம் தேதி அதாவது 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். அதே போல் 2023ஆம் ஆண்டு பங்குனி மாதம் 15ஆம் நாளான மார்ச் மாதம் 29ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படியும் சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.
சனிப்பெயர்ச்சி:
சூரிய பகவானின் புத்திரரான சனி பகவான் நம் வாழ்வில் நாம் செய்யும் நற்செயல்கள், தீய செயல்களுக்கு ஏற்றார் போல் நன்மை தீமைகளை வழங்கக்கூடியவர். சனியானவர் கும்ப ராசியான தனது ஆட்சி வீட்டில் நின்று தான் நின்ற நிலைக்கு ஏற்ப பல சுபச்செயல்களை இனி வருகின்ற இரண்டரை ஆண்டுகள் அளிக்கவுள்ளார்.
சனி தான் நின்ற ராசியிலிருந்து, மூன்றாம் பார்வையாக மேஷ ராசியான ஜென்ம ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான புத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான அஷ்டம ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.
இந்தச் சூழலில் வீரியத்துடன் அனைத்து செயல்களிலும் ஈடுபடும் விருச்சிக ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களைப் பார்க்கலாம்!
விருச்சிக ராசி அன்பர்களே...!
சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக சத்ரு ஸ்தானத்தை பார்ப்பதினால் புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் தொடர்பான விஷயங்களில் தெளிவும், முடிவும் கிடைக்கும். செல்லப் பிராணிகளிடம் நிதானத்தை கையாளவும். போட்டித் தேர்வுகளில் உழைப்பிற்கு உண்டான முடிவும், ஊதியமும் கிடைக்கும்.
சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான தொழில் ஸ்தானத்தை பார்ப்பதினால் சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் உங்களின் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். எந்தவொரு வேலையையும் அன்றைய தினத்தில் செய்து முடித்துக் கொள்வது நல்லது.
சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான ஜென்ம ஸ்தானத்தை பார்ப்பதினால் இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் மனதில் சோர்வும், செயல்பாடுகளில் ஒருவிதமான காலதாமதமும் ஏற்படும். வேலை தவறாது உணவு எடுத்துக்கொள்வது பல விரயங்களை குறைக்கும்.
மற்றவர்களுடனான கருத்துக்கள் பரிமாற்றத்தில் விழிப்புணர்வு வேண்டும். மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறுவதில் பல தடைகள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் செயல்படும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நல்லது. சகோதரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் ஏற்படும்.
சனி ராசிக்கு நான்காம் பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் பயனற்ற அலைச்சல்கள் குறைந்து காணப்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். வாகன மாற்றம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.
சூழ்நிலைகளை அறிந்து விவேகமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும்.
வாழ்க்கை துணைவர் இடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவது அவர்களின் மீதான புரிதலை அதிகப்படுத்தும்.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மறதி தொடர்பான சில இன்னல்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். நண்பர்களின் மூலம் அலைச்சலும், விரயமும் உண்டாகும்.
தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தி எதிர்காலத்தில் நிலைத்து நிற்கும்படியான செல்வாக்கை உருவாக்குவீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை புரிந்து கொண்டு நிலைத்தன்மையை ஏற்படுத்துவீர்கள். முயற்சிகளுக்கேற்ப வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
வியாபாரத்தில் இடமாற்றத்தினை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். கால்நடை வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பகைமை குறையும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவதில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும்.
பொருளாதாரம்
குடும்ப வருமானத்தை மேம்படுத்துவீர்கள். புதிய நிலையான சொத்துக்களின் சேர்க்கை சேரும். குறுக்கு வழிகளில் ஈடுபடாமல் நேர்மையான முறையில் சேமிக்கும் சிந்தனைகள் பல சிக்கல்களை குறைக்கும். நிபுணர்களின் ஆலோசனைகள் புதிய பாதையை தெளிவுப்படுத்தும். பங்கு வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
உடல் ஆரோக்கியம்
உடல் சோர்வு உண்டாகும். வளர்ப்பு பிராணிகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
நன்மைகள்
நடைபெற இருக்கின்ற சனிப்பெயர்ச்சியில் பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் இருந்துவந்த தடைகள் விலகும். மேலும் தந்தையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும்.
கவனம்
நடைபெற இருக்கின்ற சனிப்பெயர்ச்சியில் முடிவுகள் எடுப்பதில் கலந்து ஆலோசித்து செயல்படவும். மேலும் நெருக்கமானவர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். அவசரமின்றி செயல்படுவது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பதவிகளில் இருக்கக்கூடியவர்கள் கவனத்துடன் செயல்படவும்.
வழிபாடு
சிவபெருமானை ஞாயிற்றுக்கிழமைதோறும் வழிபட தொழிலில் புதிய வாய்ப்புகளும், தடைகளும் விலகும். திருச்செந்தூர் முருகரை வழிபாடு செய்து வர சிந்தனைகளில் தெளிவும், உத்தியோக பணிகளில் முன்னேற்றமும் ஏற்படும்.
பொதுப்பலன்களான இவற்றில் திசாபுத்திக்கு ஏற்ப மாற்றம் உண்டாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.