Rasi palan May 8: மேஷத்திற்கு செலவு… கும்பத்திற்கு நிறைவு.. இன்றைய ராசி பலன்கள்.. !
Rasi palan Today,May 8: இன்றைய ராசிபலன் 8 மே 2022: இன்று எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள்? என்று கீழே காணலாம்.
நாள்: 08.05.2022
நல்ல நேரம் :
காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை
மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
மாலை 1.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை
இராகு :
மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
குளிகை :
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
எமகண்டம் :
மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் –மேற்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, இன்று கடினமான நாளாக இருக்கும். உங்கள் பொறுமை இழப்பீர்கள். பணிகளை திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். உங்கள் வீட்டின் புனரமைப்பிற்கான வகையில் கட்டாய பணச் செலவு செய்ய நேரும். உங்கள் செலவுகளை திட்டமிட வேண்டும்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, இன்று உற்சாகமான நாள். இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு முயற்சி எடுக்கலாம். பண வரவு அதிகரித்து காணப்படும். தொலை தூரத்திலிருந்து பணம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்களிடம் காணப்படும் தைரியம் காரணமாக உங்கள் மன நிலையும் உடல் நிலையும் ஆரோக்கியமாக இருக்கும்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, இன்று சற்று மந்தமான உணர்வுகள் காணப்படும். அதனை தவிர்த்தல் நலம். இன்று அதிக பணிகள் இருப்பதாக உணர்வீர்கள். கையாள கற்றுக் கொள்ளுங்கள். அதிக செலவினங்கள் காணப்படுகின்றது. பணம் இழக்காமலிருக்க சாதுர்யமாக திட்டமிட்டு செலவு செய்யுங்கள்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, இன்று அதிக பொறுப்பும் பதட்டமும் காணப்படும். விவேகமான, முறையான அணுகுமுறை மேற்கொள்வது சிறந்தது.உங்கள் வீட்டின் சீரமைப்பிற்காகவும் புனர் நிர்மானத்திற்காகவும் பணம் செலவு எதிர்கொள்ள நேரும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, இன்று காணப்படும் சிறிய பிரச்சனைகளை கையாள கடின முயற்சி தேவை. பணி வளர்ச்சியைப் பொருத்தவரை இன்று உகந்த நாள் அல்ல. இன்று பணிச்சுமை காணப்படும். பணியை திட்டமிட்டு ஆற்ற வேண்டும்.நிதி சம்பந்தமான முக்கிய முடிவுகள் இன்று எடுப்பதை தவிர்க்கவும். பெரிய முதலீடுகள் முயற்சி இன்று ஏற்புடையதல்ல.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, இன்று அனைத்து விதத்திலும் முன்னேற்றம் காணப்படும். உங்களிடம் ஆற்றல் மற்றும் உறுதி காணப்படும். நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.நீங்கள் சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள். குறைந்த நேரத்தில் விரைந்து பணிகளை ஆற்றுவீர்கள்.இன்று பண வரவு காணப்படும். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பீர்கள்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, உங்கள் செயல்களை சிறந்த முறையில் ஆற்றுவதற்கு உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். கடின உழைப்பு மற்றும் உறுதி மூலம் நீங்கள் வெற்றி பெறலாம். இன்று நிதிநிலை சிறப்பாக இருக்கும். உங்கள் வங்கியிருப்பு அதிகமாக காணப்படும். பங்கு வர்த்தகம் லாபகரமானதாக இருக்கும் என்பதால் அதில் பங்கு கொள்ளலாம்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, நீங்கள் செய்த தவறுகளை இன்று சரி செய்ய வேண்டும். உங்கள் செயல்களை முறையாக ஏற்பாடு செய்து ஒரு கட்டுப்பாட்டோடு செய்யுங்கள்.இன்று செலவுகள் அதிகரிக்கக் காண்பீர்கள். அதற்கு தகுந்தாற்போல பணத்தை திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, இன்று வெற்றி பெறுவதற்கு அதிக முயற்சி எடுக்க வேண்டும். திட்டமிடுதலும் முயற்சியும் இன்று மிகவும் தேவை.அஜாக்கிரதை காரணமாக பணத்தை இழக்க நேரலாம். இன்று சிறந்த முறையில் பணத்தை கையாள இயலாது. அமைதியாக இறைவழிபாட்டில் ஈடுபட்டு உங்கள் பணிகளை ஆற்றுங்கள். அதனால் வெற்றியும் நல்ல பெயரும் கிடைக்கும்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, உங்களிடம் போதிய தைரியம் காணப்படும். உங்கள் முயற்சிகள் நல்ல பலன்களை அளிக்கும். பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.உங்கள் பணியும் மூலம் வெற்றி கிடைக்கும். உங்கள் ஆற்றல் உங்களுக்கு தெரிய வரும் நாள் இது. உங்களிடம் இன்று தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். பணப்புழக்கம் இன்று திருப்திகரமானதாக இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு ஊக்கத் தொகை மற்றும் சலுகை போன்ற கூடுதல் பணம் கிடைக்கும்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, இன்றைய நாளை உங்களின் சுய மேம்பாட்டிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.இன்று பணிகள் விருப்பமானதாக இருக்கும். என்றாலும் வெற்றி பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும்.இன்று பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்க அது உதவும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, நீங்கள் கடினமான பணிகளையும் எளிதாக செய்வீர்கள். என்றாலும் சிறந்த முறையில் திட்டமிட வேண்டும்.பணியில் பொறுமை இழந்து காணப்படுவீர்கள். தொழில் சார்ந்த அணுகுமுறையால் பணிகளை சரிவர ஆற்ற இயலும். பண வரவும் செலவும் காணப்படுகின்றது. எதிர் காலத்திற்காக பணத்தை சேமிக்க வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்