மேலும் அறிய

Rasipalan 2nd August, 2023: மிதுனத்துக்கு அமைதி.. சிம்மத்துக்கு நட்பு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

RasiPalan Today August 02: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

RasiPalan Today July 02:

நாள்: 02.08.2023 - புதன்கிழமை

நல்ல நேரம் :

காலை 9.15 மணி முதல் மதியம் 10.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

இராகு :

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

குளிகை :

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

எமகண்டம் :

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

சூலம் - வடக்கு

இன்றைய ராசிபலன்கள் 

மேஷம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். வருமானத்தை உயர்த்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நுட்பமான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.

ரிஷபம்

பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய மனை சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். உயர் அதிகாரிகளிடத்தில் அளவுடன் இருக்கவும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். லாபம் நிறைந்த நாள்.

மிதுனம்

பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உடன்பிறந்தவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் தாமதமாகி நிறைவேறும். புதிய தொழில்நுட்பக் கருவிகளில் கவனம் வேண்டும். மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்பும், அலைச்சலும் அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள்.

கடகம்

தவறிய சில ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த வரவுகள் கிடைக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.

சிம்மம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சமூகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். அரசு பணிகளில் அனுகூலம் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நட்பு நிறைந்த நாள்.

கன்னி

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உத்தியோக பணிகளில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் உண்டாகும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வியாபார பணிகளில் சில மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.

துலாம்

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்பு ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனதளவில் புதுவிதமான தெளிவு ஏற்படும். தனம் தொடர்பான நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். எதிர்பார்த்த சில விஷயங்கள் நிறைவேறும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். சலனம் நிறைந்த நாள்.

விருச்சிகம்

வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். புதிய வாகனம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். கவனம் வேண்டிய நாள்.

தனுசு

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் தடைபட்ட வரவுகள் வசூலாகும். இழுபறியான வேலைகளை சாதுரியமாக செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களிடமிருந்து எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உதவி கிடைக்கும் நாள்.

மகரம்

சில பிரசனைகளுக்கு முடிவு எடுப்பதில் குழப்பம் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகள் வந்து போகும். நுட்பமான விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். பழைய நினைவுகளால் சோர்வு ஏற்படும். குழந்தைகளை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் நேரம் விரயமாகும். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். தேர்ச்சி நிறைந்த நாள்.

கும்பம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணம் தொடர்பான விஷயங்களில் அனுபவம் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். மற்றவர்கள் மீதான கருத்துகளில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வாழ்க்கைத் துணைவருடன் அனுசரித்துச் செல்லவும். கல்வியில் புதுமையான வாய்ப்புகள் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.

மீனம்

செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை ஏற்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். நெருக்கமானவர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை;  இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை; இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
Embed widget