Rasi Palan Today: கன்னிக்கு பக்தி... விருச்சிகத்துக்கு ஓய்வு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்..
RasiPalan Today February 26: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 26.02.2023 - ஞாயிறு கிழமை
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மதியம் 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
மதியம் 01.30 மணி முதல் மதியம் 02.30 மணி வரை
இராகு :
மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
குளிகை :
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
எமகண்டம் :
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
மனதளவில் இருந்துவந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். பேச்சுக்களால் ஆதாயம் அடைவீர்கள். போட்டிகள் நிறைந்த நாள்.
ரிஷபம்
பலதரப்பட்ட சிந்தனைகளால் செயல்பாடுகளில் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்களில் புதிய அனுபவம் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில பணிகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். சமூக பணிகளில் இருப்பவர்கள் பொறுப்புகளை அறிந்து செயல்படவும். மதிப்பு மேம்படும் நாள்.
மிதுனம்
விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் விவாதங்களை தவிர்க்கவும். மனதளவில் பக்குவமும், புரிதலும் அதிகரிக்கும். உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். அரசு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். வேலையாட்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். உதவிகள் கிடைக்கும் நாள்.
கடகம்
தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். காப்பீடு சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். சமூக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் நற்பெயர் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.
சிம்மம்
முன்னேற்றத்திற்கான சிந்தனைகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். அரசு பணிகளில் இருந்துவந்த தாமதம் குறையும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றங்கள் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். நன்மை நிறைந்த நாள்.
கன்னி
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத வரவுகள் திருப்தியை ஏற்படுத்தும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உயர் அதிகாரிகளை பற்றிய புரிதல் மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.
துலாம்
வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். உடன்பிறந்தவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். இணையம் சார்ந்த முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். முயற்சிகள் மேம்படும் நாள்.
விருச்சிகம்
உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபார பணிகளில் புதிய அறிமுகம் கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். மனை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.
தனுசு
முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை புரிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்களால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான ஒப்பந்தங்கள் கைகூடும். கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.
மகரம்
வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனதை உறுத்திய பிரச்சனைகள் குறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நண்பர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
கும்பம்
உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நெருக்கடியான சூழ்நிலைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கலை பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகத்தில் தவறிய பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும். புத்துணர்ச்சியான சிந்தனைகளின் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். இன்னல்கள் குறையும் நாள்.
மீனம்
போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். அனுபவமிக்க வேலையாட்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். ஆதரவு மேம்படும் நாள்.