மேலும் அறிய

Rasipalan Today, July 22: தனுசு பொறுமை வேண்டும்... விருச்சிகம் போட்டி நிறைந்த நாள் - இன்றைய ராசிபலன்!

Rasi Palan Today, July 22 : இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 22.07.2022

நல்ல நேரம் :

காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 12.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை

மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை

இராகு :

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

குளிகை :

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

எமகண்டம் :

மதியம் 3.00 மணி முதல் மதியம் 4.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே,

வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும்.  அலைச்சல்களின் மூலம் சோர்வு அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். கால்நடை தொடர்பான விஷயங்களில் சற்று பொறுமையுடன் செயல்படவும். இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பணிகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முதலீடுகளை மேற்கொள்வது நல்லது. இன்பம் நிறைந்த நாள்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே,

சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது கவனம் வேண்டும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. சுகம் நிறைந்த நாள்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே,

சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். குடும்பத்தில் உங்கள் மீதான பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். ஆக்கப்பூர்வமான நாள்.

கடகம் :

கடக ராசி நேயர்களே,

வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் பிறக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். பயணங்கள் சார்ந்த விஷயங்கள் கைகூடும். அங்கீகாரம் கிடைக்கும் நாள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே,

புதிய முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். திட்டமிட்ட பணிகள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவுபெறும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கும், அறிமுகமும் கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய பொறுப்புகள் உண்டாகும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே,

எண்ணிய சில பணிகளில் எதிர்பார்த்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் இருக்கும் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்து கொள்வது நல்லது. பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே,

காப்பீடு தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே,

போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். போட்டி நிறைந்த நாள்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே,

எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பொறுமை வேண்டிய நாள்.

மகரம் :

மகர ராசி நேயர்களே,

குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். தாய்மாமன் வழியில் ஆதரவு கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களின் தன்மையை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சிந்தனைகள் ஏற்படும். இனிமை நிறைந்த நாள்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே,

உறவினர்களிடத்தில் எதிர்பார்த்திருந்த உதவி சாதகமாக அமையும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். கலை சார்ந்த அறிவு மேம்படும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான உதவி கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

மீனம்:

மீன ராசி நேயர்களே,

சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். மனதிற்கு பிடித்த உணவினை உண்டு மகிழ்வீர்கள். வித்தியாசமான கற்பனையின் மூலம் தூக்கமின்மை ஏற்படும். இயந்திரம் தொடர்பான பணியில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். பாராட்டுகள் நிறைந்த நாள்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Vijay Sethupathi :
Vijay Sethupathi : "இது என் படத்தோட ப்ரோமோஷன்..அத பத்தி ஏன் பேசனும்?" சூடான விஜய் சேதுபதி
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு  விளக்கம்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
Embed widget