மேலும் அறிய
Rasi Palan Today, Sept 13: விருச்சிகத்துக்கு புதிய நபரின் அறிமுகம் உண்டு; துலாமுக்கு கவனம் தேவை.! உங்கள் ராசிக்கான பலன்.!
Rasi Palan Today, September 13: செப்டம்பர் மாதம் 13ஆம் நாள் வெள்ளிக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்
Source : abp
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today September 13, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
மனதில் ஆடம்பரமான எண்ணங்கள் அதிகரிக்கும். தோற்றப்பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு புதுமைகள் ஏற்படும். மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். இளைய சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.
ரிஷப ராசி
மனதில் ஆடம்பரமான எண்ணங்கள் அதிகரிக்கும். தோற்றப்பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு புதுமைகள் ஏற்படும். மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். இளைய சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.
மிதுன ராசி
வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையை தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும். பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். முயற்சிகள் நிறைந்த நாள்.
கடக ராசி
பணி நிமித்தமான புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். வெளி வட்டாரங்களில் மதிப்பு உயரும். பழைய பிரச்சனைகள் குறையும். வியாபாரம் இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கீர்த்தி நிறைந்த நாள்.
சிம்ம ராசி
வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். உயர் கல்விகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். அரசு பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். எண்ணிய சில பணிகள் நினைத்தபடி நிறைவேறும். பெருந்தன்மையான செயல்களின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.
கன்னி ராசி
குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் கைகூடும். புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். மனதில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தைவழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.
துலாம் ராசி
எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனத்துடன் செயல்படவும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துகளை வெளிப்படுத்தவும். உத்தியோக பொறுப்புகளால் சோர்வு ஏற்பட்டு நீங்கும். கவனம் வேண்டிய நாள்.
விருச்சிக ராசி
வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு மேம்படும். சகப்பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரிய செயல்கள் சாதகமாக முடியும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் தன்னம்பிக்கை ஏற்படும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.
தனுசு ராசி
ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசு பணிகளில் ஆதாயம் ஏற்படும். தன நெருக்கடிகள் குறையும். மாறுபட்ட அணுகுமுறைகளால் புதுமைகளை செயல்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகள் மூலம் சில விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். லாபம் நிறைந்த நாள்.
மகர ராசி
வருமானம் முன்னேற்றத்தை பற்றி சிந்திப்பீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.
கும்ப ராசி
கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் ஏற்படும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
மீன ராசி
உத்தியோகப் பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். பூர்வீகத்தில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். இடமாற்றம் தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். பத்திரம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion