மேலும் அறிய

Rasi Palan Today, Oct 9: மேஷத்துக்கு பிரயாணம்; ரிஷபத்துக்கு செலவு! - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்

Rasi Palan Today, October 9: அக்டோபர் மாதம் 9ஆம் நாள் புதன் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today October 9, 2024: 

 அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....

மேஷ ராசி
 
துணைவர் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் அதற்கான உதவிகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை ஏற்படும். புதுவிதமான சிந்தனைகள் மூலம் புத்துணர்ச்சியான தருணங்கள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மேன்மை உண்டாகும். பிரயாணம் நிறைந்த நாள்.
 
ரிஷப ராசி
 
தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் பொறுப்பும், பணிகளும் அதிகரிக்கும். வியாபார பயணங்களில் வீண் அலைச்சல்களும், விரயமும் ஏற்படும். வித்தியாசமான கற்பனைகள் மூலம் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். செலவு நிறைந்த நாள்.
 
மிதுன ராசி
 
நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். பழகும் தன்மையில் சில மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் சாதகமான சூழ்நிலை உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.
 
 கடக ராசி
 
வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் ஈடேறும். நெருக்கமானவர்கள் மூலம் அலைச்சலும், புரிதலும் உண்டாகும். செயல்களில் இருந்துவந்த தடைகள் விலகும். உத்தியோகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். சிந்தனை மேம்படும் நாள்.
 
 சிம்ம ராசி
 
தொழில் சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். குழந்தைகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பாராட்டு நிறைந்த நாள்.
 
 கன்னி ராசி
 
உறவினர்களின் வழியில் புரிதல் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் மாற்றமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைப்போக்கில் கவனம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.
 
 துலாம் ராசி
 
பணிகளில் இடமாற்றங்கள் சாதகமாக அமையும். திறமைக்கு உண்டான மதிப்பு அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் பற்றிய கவலைகளை தவிர்ப்பது நல்லது. செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். வியாபாரப் பணிகளில் அலைச்சல்கள் மேம்படும். சோதனை மறையும் நாள்.
 
விருச்சிக ராசி
 
நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். மூத்த கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.  செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். பொருளாதார உயர்வை பற்றிய சிந்தனைகள் மேம்படும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். ஆக்கப்பூர்வமான நாள்.
 
தனுசு ராசி
 
திடீர் சுப செய்திகள் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மற்றவர்களின் பணிகளை சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். அதிகார பதவிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். சமூகப் பணிகளில் கோபமின்றி பொறுமையுடன் இருக்கவும். வர்த்தகப் பணிகளில் நிதானம் வேண்டும். சாதனை நிறைந்த நாள்.
 
மகர ராசி
 
உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் கனிவு வேண்டும். இறை வழிபாடுகள் புதிய தெளிவை ஏற்படுத்தும். ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். வாகன பயணங்களில் நிதானம் அவசியம். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். ஆசை மேம்படும் நாள்.
 
கும்ப ராசி
 
மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். வேலையாட்களின் ஆதரவு மேம்படும். சுபகாரியங்களை முன்நின்று செய்து முடிப்பீர்கள். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். விவசாயப் பணிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். உடலளவில் இருந்துவந்த சோர்வு நீங்கும். அனுபவம் மேம்படும் நாள்.
 
மீன ராசி
 
மனை தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான சிந்தனைகள் மேம்படும். நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். மற்றவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வெளிப்படையான செயல்பாடுகள் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். சாந்தம் வேண்டிய நாள்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
Embed widget