மேலும் அறிய
Advertisement
Rasi Palan Today, Oct 7: மகரத்துக்கு திருமண செய்தி, தனுசு போட்டிகளை சமாளிப்பீர்கள் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, October 7: அக்டோபர் மாதம் 7ஆம் நாள் திங்கள் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today October 7, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
குழப்பமான சிந்தனைகளால் சோர்வு உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். குழந்தைகளின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கல்வி பணிகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
ரிஷப ராசி
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர் வழியில் உதவிகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உயர் கல்வியில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பக்தி நிறைந்த நாள்.
மிதுன ராசி
எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்புகள் வரும். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். அரசு வழியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். நீண்ட நாள் சிக்கல்கள் குறையும். வெற்றி நிறைந்த நாள்.
கடக ராசி
குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். சகோதரர்களிடம் ஒற்றுமை ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். இலக்கியப் பணிகளில் ஆர்வம் மேம்படும். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.
சிம்ம ராசி
எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். பயணங்களின் மூலம் அனுபவம் மேம்படும். நெருக்கமானவர்களின் சந்திப்புகள் உண்டாகும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சக ஊழியர்களின் வழியில் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த சில பணிகள் நிறைவேறும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
கன்னி ராசி
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். நிர்வாகத் துறைகளில் மதிப்பு மேம்படும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கனிவான செயல்பாடுகளால் மதிப்பு மேம்படும். வியாபாரத்தில் புதிய யுத்திகள் கைகூடும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அனுபவம் மேம்படும் நாள்.
துலாம் ராசி
பூர்வீக பிரச்சனைகள் குறையும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் பிறக்கும். பணியாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பாராட்டு நிறைந்த நாள்.
விருச்சிக ராசி
குடும்பத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். அணுகு முறையில் சில மாற்றங்கள் உண்டாகும். தெளிவான சில முடிவுகளால் தெளிவு பிறக்கும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அளவாக இருக்கவும். உடனிருப்பவர்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். குழப்பம் நிறைந்த நாள்.
தனுசு ராசி
காது தொடர்பான இன்னல்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ரகசியமான சில முதலீடுகள் மேம்படும். மறைமுகமான போட்டிகளை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் நயமான பேச்சுக்களால் நன்மை உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். ஆரோக்கியம் மேம்படும் நாள்.
மகர ராசி
உறவினர்களால் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் குறித்த எண்ணம் மேம்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நினைத்த பணிகள் ஈடேறும். ஆர்வம் நிறைந்த நாள்.
கும்ப ராசி
நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களால் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். அலுவலகத்தில் அதிகாரம் மேம்படும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
மீன ராசி
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைபட்ட சில வேலைகள் முடியும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த சோர்வு குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
செய்திகள்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion