மேலும் அறிய
Rasi Palan Today Oct 16: தனுசுக்கு குடும்பத்தினரிடம் ஒத்துழைப்பு; மகரத்துக்கு வெற்றி- உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today, October 16: அக்டோபர் மாதம் 16ஆம் நாள் புதன் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.

ராசிபலன்
Source : abp
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today October 16, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். வியாபாரப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொதுமக்கள் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நன்மை நிறைந்த நாள்.
ரிஷப ராசி
வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பூர்வீக சொத்துக்களின் வழியில் லாபம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். மனை சார்ந்த பணிகளில் லாபம் மேம்படும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். பாசம் நிறைந்த நாள்.
மிதுன ராசி
எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பொதுமக்கள் துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். நீண்ட கால முதலீடுகள் குறித்த ஆலோசனை கிடைக்கும். விவசாயப் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாமதம் விலகும் நாள்.
கடக ராசி
செய்யும் முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்களின் மறைமுகமான ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் உயர்வான சூழ்நிலை ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வியாபாரப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். நட்பு நிறைந்த நாள்.
சிம்ம ராசி
பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். நண்பர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் நிதானம் வேண்டும். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். மனதில் தோன்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலையறிந்து செயல்படும். எதிர்பாராத சில செய்திகள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
கன்னி ராசி
சுபகாரிய பேச்சுக்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அதிகாரிகளிடத்தில் உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். வியாபாரப் பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.
துலாம் ராசி
பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்கள் பற்றி புரிந்து கொள்வீர்கள். வரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் குறையும். தனிப்பட்ட செயல்களில் கவனம் வேண்டும். கால்நடைகள் மூலம் ஆதாயம் ஏற்படும். பேச்சுக்கள் மூலம் ஆதாயமடைவீர்கள். கலை சார்ந்த பணிகளில் ஈர்ப்பு ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள்.
விருச்சிக ராசி
குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பணவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உயர்கல்வி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். எதிலும் சிக்கனத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
தனுசு ராசி
அரசு பணிகள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவேறும். கடன் பிரச்சனைகளில் பொறுமை வேண்டும். ஆரோக்கிய சிக்கல்கள் குறையும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை ஏற்படும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு நம்பிக்கையை தரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.
மகர ராசி
பேச்சு வன்மையால் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பாகப்பிரிவினை குறித்த சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். நலம் நிறைந்த நாள்.
கும்ப ராசி
பயணம் மற்றும் செயல்பாடுகளில் நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது. நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். அமைதியான பேச்சுக்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
மீன ராசி
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். உடல் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில பணிகள் நிறைவு பெறும். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் அனுபவம் கிடைக்கும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படுவது அவசியம். மூத்த உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
மேலும் படிக்கவும்
Advertisement


992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
விழுப்புரம்
அரசியல்
அரசியல்
மதுரை
Advertisement
Advertisement