மேலும் அறிய
Advertisement
Rasipalan Today Nov 6: துலாமுக்கு நெருக்கடிகள் குறையும் ; விருச்சிகத்துக்கு பிரச்னைகள் மறையும்- உங்கள் ராசிக்கான பலன்?
Rasi Palan Today, November 6: நவம்பர் மாதம் 6ஆம் நாள் புதன் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today November 6, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
சமூகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். தர்ம காரியங்களில் ஈடுபட்டு மனமகிழ்வீர்கள். திட்டமிட்ட பணிகள் இனிதே நிறைவு பெறும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபடுவது மன அமைதியை கொடுக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சுகம் நிறைந்த நாள்.
ரிஷப ராசி
நண்பர்களின் வழியில் அலைச்சலும், எதிர்பாராத விரயங்களும் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் பிறக்கும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் தாமதமாக முடிவு பெறும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் வெளிப்படும். அமைதி வேண்டிய நாள்.
மிதுன ராசி
பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். ஓய்வு கிடைக்கும் நாள்.
கடக ராசி
வேகத்தை விட விவேகம் பெரியது என்பதை புரிந்து கொள்வீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். விளையாட்டு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் மதிப்பு அதிகரிக்கும். பரிவு வேண்டிய நாள்.
சிம்ம ராசி
மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பங்குதாரர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோகப் பணிகளில் அமைதியான சூழல் உண்டாகும். பாசம் நிறைந்த நாள்.
கன்னி ராசி
பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சொத்து பிரச்சனைகளுக்கு தெளிவான தீர்வுகள் கிடைக்கும். உறவினர்களின் வருகை ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழ்நிலை அமையும். மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நட்பு நிறைந்த நாள்.
துலாம் ராசி
பாகப் பிரிவினையில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். தனம் வகையிலான நெருக்கடிகள் குறையும். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். இலக்கியம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.
விருச்சிக ராசி
குடும்பத்தில் சில பிரச்சனைகள் தோன்றி மறையும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.
தனுசு ராசி
மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் ஒருவிதமான சோர்வு உண்டாகும். கல்விப் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகப் பணிகளில் உழைப்புகள் அதிகரிக்கும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆதரவு நிறைந்த நாள்.
மகர ராசி
சுபகாரிய செலவுகள் உண்டாகும். பழைய சிந்தனைகள் மூலம் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். கலைத் துறைகளில் மாற்றமான சூழல் உண்டாகும். வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
கும்ப ராசி
சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ரசனைத் தன்மையில் மாற்றங்கள் ஏற்படும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
மீன ராசி
பணிபுரிவோர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். செல்வச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாக அமையும். வீடு மற்றும் மனை ஆகியவற்றால் லாபம் ஏற்படும். நிறுவனங்களில் நிர்வாக திறமை வெளிப்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தெளிவு வேண்டிய நாள்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
சென்னை
கிரிக்கெட்
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion