மேலும் அறிய
Advertisement
Rasipalan Today Nov 13: துலாமுக்கு மகிழ்ச்சி! விருச்சிகத்துக்கு புதிய வேலை- உங்கள் ராசிக்கான பலன்?
Rasi Palan Today, November 13: இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today November 13, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
கணவன், மனைவிக்குள் அனுசரித்துச் செல்லவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் வழியில் அலைச்சல் ஏற்படும். புதிய முதலீடு சார்ந்த உதவிகள் கிடைக்கும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வரவு நிறைந்த நாள்.
ரிஷப ராசி
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். கலைப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். திறமையான பேச்சுக்கள் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். தாமதம் மறையும் நாள்.
மிதுன ராசி
வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். உடனிருப்பவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குழந்தைகளால் அனுகூலம் உண்டாகும். மனதில் வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களுடன் அளவுடன் இருக்கவும். வர்த்தகப் பணிகளில் வரவுகள் மேம்படும். செலவு நிறைந்த நாள்.
கடக ராசி
வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். நுட்பமான சில விசயங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். பழைய வாகனங்களை மாற்றி அமைப்பீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.
சிம்ம ராசி
உயர் அதிகாரிகளால் அலைச்சல் ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் குழப்பம் உண்டாகும். வியாபாரம் சார்ந்த செயல்களில் பொறுமை வேண்டும். முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். ஆர்வமின்மையான நாள்.
கன்னி ராசி
தவறிய சில ஆவணங்கள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை ஏற்படும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சிந்தனைப் போக்கில் இருந்துவந்த குழப்பம் விலகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
துலாம் ராசி
கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். தாய்மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும். தூரத்து உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். வழக்குகளில் நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உண்டாக்கும். வருத்தம் மறையும் நாள்.
விருச்சிக ராசி
அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு மேம்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலைப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். புதிய ஒப்பந்தம் சாதகமாக அமையும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு காரியத்தை சாதிப்பீர்கள். பணி மாற்ற சிந்தனைகள் ஏற்படும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
தனுசு ராசி
வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். நண்பர்களின் வழியில் குதூகலமான சூழல் ஏற்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய் வழியில் அனுசரித்துச் செல்லவும். நிலுவையில் இருந்துவந்த சரக்குகள் விற்பனையாகும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். ஆர்வம் நிறைந்த நாள்.
மகர ராசி
மின்னணு சாதனங்களில் சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். சகோதரர் வகையில் நன்மை உண்டாகும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோகப் பணிகளில் திருப்தி உண்டாகும். சொத்து பிரச்சனைகளுக்கு முடிவுகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
கும்ப ராசி
பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். பொருளாதார விஷயங்களில் மேன்மை ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். கனிவான பேச்சுக்களால் நன்மை உண்டாகும். மற்றவர்களின் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவீர்கள். தானிய வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
மீன ராசி
பெற்றோர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். விதண்டாவாத பேச்சுக்களை தவிர்க்கவும். கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். நண்பர்களிடத்தில் எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உயர் அதிகாரிகளிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். உயர்வு நிறைந்த நாள்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion