மேலும் அறிய
Advertisement
Rasipalan December 18: மேஷத்திற்கு அமைதியான நாள்: ரிஷபத்திற்கு குழப்பம் நீங்கும்- உங்க ராசி பலன்?
Rasi Palan Today, December 18: இன்று மார்கழி மாதம் 3ஆம் நாளில், எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today December 18, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
எதிர்பார்த்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அதிரடியான சில செயல்கள் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். உறவினர்களிடம் ஒத்துழைப்புகள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் அமைதி ஏற்படும். உழைப்பால் முன்னேற்றத்தை உருவாக்குவீர்கள். பயணம் சார்ந்த விஷயங்கள் கைகூடும். யோகம் நிறைந்த நாள்.
ரிஷப ராசி
மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். முயற்சிக்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். தந்திரமான சில செயல்கள் மூலம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பெருமை நிறைந்த நாள்.
மிதுன ராசி
குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். சாதுரியமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.
கடக ராசி
எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் அமைதியின்மை ஏற்படும். சமூகப் பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். கற்றல் பணியில் புதுமையான சூழ்நிலை உருவாகும். சோதனை மறையும் நாள்.
சிம்ம ராசி
உடன் இருப்பவர்களுடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்கள் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். மனதிற்கு பிடித்த உடைகளை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிக செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிரமம் மறையும் நாள்.
கன்னி ராசி
வியாபார இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில காரியங்களில் சாதகமான சூழல் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிம்மதி நிறைந்த நாள்.
துலாம் ராசி
உறவுகள் வழியில் ஆதாயம் உண்டாகும். உற்பத்தி தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசுப் பணிகள் மூலம் லாபகரமான சூழல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வழக்கு பணிகளில் இழுபறியான சூழ்நிலை காணப்படும். அமைதி நிறைந்த நாள்.
விருச்சிக ராசி
ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் தடைப்பட்ட காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
தனுசு ராசி
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். பணிபுரியும் இடங்களில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். காப்பீடு தொடர்பான செயல்களில் ஆர்வம் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கையில் சில தடுமாற்றம் ஏற்படும். குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். மற்றவர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். அமைதி வேண்டிய நாள்.
மகர ராசி
நண்பர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் மேம்படும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வியாபாரம் நிமித்தமான பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். எதிர்காலம் சார்ந்த சில பணிகளை செய்வீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் காணப்படும். பக்தி நிறைந்த நாள்.
கும்ப ராசி
எதிர்பாராத வரவுகள் உண்டாகும். பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. உறவினர்களின் வருகை உண்டாகும். கமிஷன் தொடர்பான பணிகளில் லாபம் ஏற்படும். பயணங்கள் மூலம் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வெற்றி நிறைந்த நாள்.
மீன ராசி
நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். செய்தொழிலில் சில நுட்பங்களை அறிந்துகொள்வீர்கள். வழக்குகளில் சில திருப்பமான சூழல் உண்டாகும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். புதிய வகை உடைகளை வாங்கி மகிழ்வீர்கள். கடினமான வேலைகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion