Rasipalan Today, June 26 : 12 ராசிகளுக்கும் பலன்.. எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்...!
Rasi palan Today,June 26: இன்றைய ராசிபலன் 26 ஜூன் 2022: இன்று எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் என்று கீழே காணலாம்.
நாள்: 26.06.2022
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
மாலை 1.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை
இராகு :
மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை
குளிகை :
மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
எமகண்டம் :
நண்பகல் 12 மணி முதல் காலை 1.30 மணி வரை
சூலம் – கிழக்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பயனற்ற செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் நெருக்கடிகள் குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எண்ணங்கள் ஈடேறும் நாள்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். வீடு மற்றும் மனை சார்ந்த செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். தோற்றப்பொலிவு பற்றிய செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, வியாபார பணிகளில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் காலதாமதமாக கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய சிந்தனைகளை மாறுபட்ட முயற்சிகளின் மூலம் செய்து முடிப்பீர்கள். அமைதி வேண்டிய நாள்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, தடைபட்ட பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். நண்பர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். புத்துணர்ச்சியான நாள்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். புரிதல் உண்டாகும் நாள்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, வியாபார பணிகளில் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆன்மிகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். புதுவிதமான தேடல் அதிகரிக்கும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சமூகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து முடிவு எடுக்கவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். வாகன பயணங்களில் விவேகத்துடன் செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவும், சுறுசுறுப்பும் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பொறுமை வேண்டும். வெளியூர் பயணங்கள் தொடர்பான வாய்ப்புகள் கைகூடும். அறிமுகம் கிடைக்கும் நாள்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் உள்ள புதிய யுக்திகளை அறிந்து கொள்வீர்கள். வேலை நிமிர்த்தமான வெளியூர் பயணங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. அலுவலக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். கடன் சார்ந்த உதவி சாதகமாக அமையும். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். அமைதியான நாள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி காலதாமதமாக கிடைக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். வாகன மாற்றம் தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். புதுமை நிறைந்த நாள்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் திருப்திகரமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் ஏற்படும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய முயற்சியில் உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். குழப்பம் அகலும் நாள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்