Pillaiyarpatti: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்திவிழா!
Pillaiyarpatti: விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பக்தர்கள் வருகை முற்றிலுமாக தடை இருந்தாலும் உள்ளுர் மக்கள் முக்கிய பிரமுகர்கள் கட்டுப்படுகளுடன் கோயில் வாயிலில் நின்று தரிசனம் செய்ய அனுமதிகப் பட்டனர்.
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்திவிழா - குறைந்தளவு பக்த்தர்களுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள உலகப் புகழ் பெற்ற பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயிலில் சதுர்த்தி பெருவிழா ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். இறுதி நாளான இன்று விநாயகர் சதுர்த்தி அன்று உற்சவருக்கு விசேஷ பூஜைகள், தீர்த்தவாரி, கொலுக்கட்டை படையல் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றது .
இதனைக் காண தமிழகத்தில் அனைத்து மாவடங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர்கள். தற்போது, கொரானா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது . கடந்த ஆண்டும் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் இன்றி விநாயகர் சதுர்த்தி பெரு விழா நடந்தது . அதே போல இந் தாண்டும் விநாயகர் சதுர்த்தி பெரு விழாவிற்கு நிர்வாகம் பக்தர்கள் வருகை முற்றிலுமாக தடை விதித்தது. இருந்தாலும் உள்ளுர் கிராம மக்கள் முக்கிய பிரமுகர்கள் கட்டுப்படுகளுடன் கோயில் வாயிலில் நின்று தரிசனம் செய்ய அனுமதிகப் பட்டனர். மேலும் பிள்ளையார்பட்டியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவின் தீர்த்தவாரி, கொழுக்கட்டை படையல் போன்ற முக்கிய நிகழ்வுகள் பக்தர்கள் இல்லாமல், கோயில் குருக்கள் , பண்டிதர்கள், கோவில் நிர்வாகிகள் மட்டும் பங்கேற்று நடைபெற்றது.
இன்று காலை 9.15 மணிக்கு கோயில் வளாகத்தில் உற்சவ விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் முன்புறம் அமைந்துள்ள திருக்குளத்தில் அங்குச தேவருக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று குளத்தில் நீராடினார். பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால் கோயிலின் வெளியில் நின்று தீர்த்தவாரி நிகழ்ச்சியை கண்டு களித்தனர் . சுற்றுப்புற கிராம மக்கள் சுமார் 1000 ற்கும் மேற்பட்டோர் நேரடி தரிசனத்திற்காக வந்திருந்தனர். அவர்கள் கோயில் வாயிலில் நின்று தரிசனம் செய்தனர். கோெில் நிர்வாக முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தவிர வெளி நபர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை.
விழா நிகழ்வுகளை வீடியோவாக பார்க்க...