Love Horoscope Today: காதல் மட்டுமல்ல.. மதிப்பும் ரொம்ப முக்கியம் பாஸ்! ஜாலியா படிங்க இன்றைய லவ் ராசி பலன்..
Love Horoscope Today in Tamil, September 19th 2022:காதலில் ஒவ்வொரு சுவாரஸ்யமான விசயங்களையும் ஜாலியான லவ் ராசிபலன்களாக இங்க படிச்சு தெருஞ்சுக்காங்க...
காதலின் அடிப்படை வாதங்கள் எவை எல்லாம் என்று என் நட்பு வட்டத்தில் கேட்டபோது, அவர்களில் பெரும்பாலும் கூறியது, 'காதல்' எனும் பதில் தான். காதலில் காதல் இல்லாமல் இருக்குமா? சாத்தியமா? என்றெல்லாம் எனக்குள் கேள்விகள் எழுந்தது. அது தொடர்பாக நான் அவர்களிடத்தில் மேலும் கேள்வி எழுப்பினேன். அவர்களிடம் மேற்கொண்டு பேசியதில் விளங்கிக்கொண்டது இதுதான். காதலின் ஒவ்வொரு படிநிலையிலும் காதல் வளர்ந்து கொண்டே போக வேண்டிய காதல் வளராமல் ஒரு இடத்தில் நிலை கொண்டுவிட காரணம் என்ன என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
ஒரு தலைக்காதலாக இருக்கும் வரை காதல் எந்தவிதமான எல்லைகளையும் சிந்திப்பது கிடையாது. காதலர் ஒருவர் தனது காதலரின் மகிழ்ச்சி தான் முக்கியம், அவர்களின் விருப்பத்திற்கு தான் முன்னுரிமை என்றெல்லாம் நினைப்பார்கள். ஆனால் காதல் கைகூடிய பின்னரும் கூட கொஞ்ச காலத்திற்கு இதே நிலை தொடருகிறது தான். அதன்பின்னர் காதலில் காதல் மெல்ல குறைந்து, தனது காதலரை எதிரியாகவோ அல்லது தனது அடிமையாகவோ கருதும் போக்கும் அவர்களை அவ்வாறே அணுகும் போக்கும் எங்கிருந்து வருகின்றது என்பது மில்லியன் டாலர் கேள்வி. காதலில் காதல் இல்லாமல் வெறுமனே பரஸ்பர பேச்சுவார்த்தையை எவ்வாறு காதல் என்று கூறிவிட முடியும். காதலோ , காதல் திருமணமோ நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் உங்களின் பார்ட்னரை உங்களின் காதலாக கருதுவதும் அவர்களை அவ்வாறு நடத்துவதும் தான் முதல் செய்யவேண்டியது. காதலில் ஒவ்வொரு சுவாரஸ்யமான விசயங்களையும் ஜாலியான லவ் ராசிபலன்களாக இங்க படிச்சு தெருஞ்சுக்காங்க...
மேஷம்
இன்னைக்கு மட்டும் இல்ல இந்த வாரம் முழுக்க உங்களுக்கு நல்ல வாரம் தான். ஜாலியா இருங்க. முடுஞ்சா இன்னைக்கு வொய்லட் கலர் டிரை பண்ணுங்க. உங்க ரூட் க்ளையரா இருக்கு.
ரிஷபம்
நல்லா மழை பெய்யுது கொஞ்சம் நனையலாம் வாயேன்னு உங்க ஆள கூப்ட்டா, சளி புடுச்சுக்கும், அம்மா திட்டுவாங்க, ஐயோ ஊசி போட முடியாதுனு சொல்லுவாங்க. மக்கு பார்டனர வெச்சுக்கிட்டு என்ன செய்யறதுனு முழிப்பீங்க. மக்கா இருந்தாலும் சொக்க தங்கம்னு நீங்களே மனசுல பாராட்டிக்குவீங்க. நம்பிக்கையான நாள்.
மிதுனம்
இந்த நாள் உங்களுக்கு சோகமான நாள். என் விதிய எழுதயிலே அந்தச் சாமி உறங்கியதே-னு
ஸ்டேட்டஸ் போட்டுட்டு ஃபீல் பண்ணீட்டு இருங்க. வேற வழி இல்ல. உங்க ஆள் உங்கள இன்னைக்கு கண்டுக்கவே மாட்டாங்க.
கடகம்
கோழில இருந்து முட்டை வந்துச்சா இல்ல முட்டையில இருந்து கோழி வந்துச்சாங்கற கேள்விக்கு கூட பதில் கண்டுபுடுச்சுடலாம். ஆனா சண்டைக்கு நீங்க காரணமா இல்ல உங்க லவ்வர் காரணமானு கண்டுபிடிக்க முடியாது. டு டே தான் உங்களுக்கு சண்'டே, தான் உடையபோகுது மண்ட.
சிம்மம்
நீங்க ஒரு குட் ஹார்ட், நல்ல ஹியூமன் பீன், உங்ககிட்ட பேசுனா மனசுக்கு ரிலாக்ஸா இருக்குனு உங்க ப்ரெண்ட்ஸ் உங்க லவ்வர் எல்லாம் சொல்லுவாங்க. ஆனா உங்க லவ்வர் வீட்டுல வேஸ்ட் ஃபெல்லோவா பாப்பாங்க. ஆனா வெளிய சொல்ல மாட்டாங்க. உங்க அண்டர் எஸ்டிமேட் பண்ணுவாங்க. தைரியமா இருக்க வேண்டிய நாள்.
கன்னி
ஒரு நல்ல லவ் சினிமாவ பாத்துட்டு அதுல வர்ற கேரக்டர் மாதிரியே லவ்வர் கெடச்சிருந்தா பரவலயேனு கமிட் ஆன உங்க ப்ரெண்ட்ஸ் எல்லாம் ஃபீல் பண்ணீட்டு இருக்கும்போது, அந்த கேரக்டர்ல நடுச்சவங்களே நமக்கு லவ்வரா கெடச்சா நல்லா இருக்கும்னு ஃபீல் பண்ணீட்டு இருப்பீங்க. இந்த எண்ணத்த விடற வரைக்கும் நீங்க சிங்கிள் தான்.
துலாம்
வீட்டுலதான் ஒரே சண்டையா இருக்குனு உங்க லவ்வர் கூட டைம் ஸ்பெண்டலானு போன உங்களுக்கு உங்க லவ்வர் செம சர்ப்ரைஸோட இருப்பாங்க. அவங்கிட்ட பேசுனா ரிலாக்ஸ் ஆகும்னு நெனச்சு பேச ஆரம்பிப்பீங்க, ஆனா உங்க லவ்வரும் சண்டைக்கு லிஸ்ட் போட்டு வைய்ட் பண்ணீட்டு இருப்பாங்க. பரிதாபமான நாள்.
விருச்சிகம்
குடும்பமா உக்காந்து உங்க கல்யாண விசயத்த பேசீட்டு இருப்பாங்க. எதுக்கும் யாராயாவது லவ் பண்றீங்களானு கேட்டுக்கலாம்னு கேட்டா நீங்க லவ் பண்றீங்களோ இல்லையோ ஆமாம்னு சொல்லிடுங்க. ஒரு ஆறு மாசத்துக்கு இந்த பேச்சு ஸ்டார்ட் ஆகாது. "அந்த கல்யாணம் மட்டும் லேட்டா யோசி வொற்றிகள் குவியுமடா" தான் இன்றைக்கு உங்களுக்கான டிப்ஸ். ப்ளீஸ் வைய்ட் ஃபார் அ மேஜிக் ஏஸ்பேஸலி லவ் மேஜிக்.
தனுசு
உங்களுக்கு எதுக்கு இத்தனை கோபம். மொதல்ல உங்க கோபத்த குறைங்க அதுக்கு அப்புறம் உங்க ரெண்டு பேருக்கும் இடையில இருக்குற டிஸ்டன்ச குறைக்கலாம். தயவு செய்து ராம ஆண்டாலும் ராவண ஆண்டாலும்னு மறுபடியும் இருக்காதீங்க. அப்பறம் ரொம்ப கஷ்டம் ஆகிடும்.
மகரம்
ஒரு யுவன் ஷங்கர் ராஜா பாடல் மாதிரி போய்ட்டு இருந்த உங்க லவ்வுல, கண்ணுபட்ட மாதிரி டபள்யூ டபள்யூ எஃப் மாதிரி போய்ட்டு இருக்கு. நீங்களா பேசாத வரைக்கும் அது இப்படியே தான் தொடரும். ஒரு நல்ல லவ் சாங்கா உங்க லவ்வருக்கு அனுப்பீட்டு ஒரு கிஸ் எமோஜியும் சேத்து அனுப்புங்க. மீண்டும் உங்கள் காதல் தீபம் நல்லா பிரகாசமா ஒளிரும். வாழ்த்துகள்.
கும்பம்ஒன் சைடு லவ்வர்ஸ்க்கு நல்ல நல்ல ஐடியாவா தருவீங்க. அதேமாதிரி ப்ரேக்அப் ஆனவங்களுக்கு ஓவர்கம் ஆக அட்வய்ஸ்சும் தருவீங்க. எல்லாரும் நீங்க ஏன் லவ் பண்ண கூடாதுனு யாராவது கேட்டா கோச்சஸ் வுட் நாட் ப்ளே த மேட்ச்னு சொல்லீட்டு, கெத்து காட்டீட்டு அழுவுறனே பாட்ட ரிப்பீட் மோட்ல கேட்டுட்டு இருப்பீங்க.
மீனம்
என்னோட ஆளோட இந்த பிரச்சனை, அந்த பிரச்சனைனு உங்க ப்ரெண்ட்ஸ் வந்து பொலம்புவாங்க. நீங்களும் எதையோ உளறி உடுவோம் உளறுவீங்க. அந்த பிரச்சனை தீந்ததுக்கு நீங்க தான் காரணம்னு சொல்லி,
உங்கள லவ் சாமியார்னு கான்டாக்ட் லிஸ்ட்ல ப்ரோமோட் பண்ணுவாங்க. அதனால உங்க லவ்வுக்கு எந்த யூஸ்யும் இல்லயோ அதுமாதிரி தான் டு டேவும் உங்க லவ்வுக்கு யூஸ்புல்லான டே கிடையாது.