கரூர் : கனககிரி வேலாயுத சுவாமி ஆலயத்தில் பக்தர்களின்றி நடைபெற்ற வைகாசி கிருத்திகை பூஜை

கரூர் அரவக்குறிச்சி மலையூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண கனககிரி வேலாயுத சுவாமி ஆலயத்தில் வைகாசி மாத கிருத்திகை  பக்தர்கள் இன்றி நடைபெற்ற சிறப்பு பூஜை நடைபெற்றது

தமிழகத்தில்  கொரோனா தொற்று  இரண்டாவது அலை காரணமாக பல்வேறு ஆன்மீக தளங்களுக்கு அரசு கட்டுப்பாடு விதித்து பூஜைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உலகப் புகழ்பெற்ற ஆலயங்களில் தமிழக அரசு உத்தரவிற்கிணங்க பூஜைகள் மட்டுமே ஆலயத்தில் பணிபுரியும் சிவாச்சாரியார் மற்றும் உதவியாளர்கள் மட்டுமே பங்குகொண்டு பூஜைகள் மற்றும் புனஸ்காரங்கள் செய்து வருகின்றனர். கரூர் : கனககிரி வேலாயுத சுவாமி ஆலயத்தில் பக்தர்களின்றி நடைபெற்ற வைகாசி கிருத்திகை பூஜை

கரூர் மாவட்டம் , அரவக்குறிச்சி வட்டம் ,மறையூர் கிராமத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண கனககிரி வேலாயுத ஸ்வாமி ஆலயத்தில் வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு இன்று சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பஞ்சாமிர்தம், பால் ,தயிர், இளநீர், எலுமிச்சைச் சாறு, கரும்புச் சாறு, திரு மஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.கரூர் : கனககிரி வேலாயுத சுவாமி ஆலயத்தில் பக்தர்களின்றி நடைபெற்ற வைகாசி கிருத்திகை பூஜை

பின்னர் ஆலய சிவாச்சாரியார் அழகன் முருகனுக்கு வெண்பட்டாடை உடுத்தி, வெள்ளிக் கவச அலங்காரம் செய்த பிறகு, அழகன் அழகு முகத்திற்கு சந்தனகாப்பு அலங்காரத்தில் பல்வேறு வண்ண மாலைகள் அணிவித்து பிறகு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். அதைத் தொடர்ந்து ஸ்ரீ கல்யாண கனககிரி வேலாயுத சுவாமி உதிரிப்பூக்கள் நாமாவளிகள் கூறிய பிறகு, சுவாமிக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு, நெய்வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூரத்துடன், மகா தீபாராதனை நடைபெற்றது. ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி மாத கிருத்திகை பூஜையின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். கரூர் : கனககிரி வேலாயுத சுவாமி ஆலயத்தில் பக்தர்களின்றி நடைபெற்ற வைகாசி கிருத்திகை பூஜை

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ காரணமாக ஆன்மீக தலங்கள் திறக்காமல் ஆலயத்தில் உள்ள மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காலை, மாலை நித்திய பூஜைகளை செய்ய அனுமதி வழங்கியுள்ளனர். இந்த நிலையில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், மலையூர், அருள்மிகு ஸ்ரீ கல்யாண கனககிரி வேலாயுத சுவாமி ஆலயத்தில் வைகாசி மாத கிருத்திகை பூஜை நடைபெற்ற நிலையில் பக்தர்கள் இன்றி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. கடந்த பல்வேறு மாதங்களாக பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் பூஜையில் ஆலய சிவாச்சாரியார் மற்றும் உதவியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: karur swami Malaiyoor Sri Kalyana Kanagagiri Velayutha

தொடர்புடைய செய்திகள்

தமிழ்நாட்டில் கோயில்களையும் சிலைகளையும் பாதுகாக்க நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் கோயில்களையும் சிலைகளையும் பாதுகாக்க நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

வீரபாண்டி ஈஸ்வரர் கோயில் வைகாசி மாத பிரதோஷ விழா

வீரபாண்டி ஈஸ்வரர் கோயில் வைகாசி மாத பிரதோஷ விழா

வரலாற்று பக்கங்களின் பொக்கிஷம் முக்தியாலீஸ்வரா் கோயில்!

வரலாற்று பக்கங்களின் பொக்கிஷம் முக்தியாலீஸ்வரா் கோயில்!

இன்றைய ராசி பலன்கள்: எந்த ராசிக்கு பொறுமை வேண்டும்?

இன்றைய ராசி பலன்கள்: எந்த ராசிக்கு பொறுமை வேண்டும்?

இன்றைய ராசி பலன்கள்: மகிழ்ச்சியான செய்தி தேடி வரப் போவது யாருக்கு?

இன்றைய ராசி பலன்கள்: மகிழ்ச்சியான செய்தி தேடி வரப் போவது யாருக்கு?

டாப் நியூஸ்

Tamil Nadu Corona LIVE: கர்நாடகாவில் 9 ஆயிரத்து 808 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu Corona LIVE: கர்நாடகாவில் 9 ஆயிரத்து 808 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

கோவேக்சினை விட கோவிஷீல்டு ‛செம்ம’ : ஆய்வில் தகவல்!

கோவேக்சினை விட கோவிஷீல்டு ‛செம்ம’ : ஆய்வில் தகவல்!

Twitter Trending | கலகலப்பும், கலாயுமாக மாறிய ட்விட்டர்.. களமிறங்கிய முதலை, தேவாங்கு!

Twitter Trending | கலகலப்பும், கலாயுமாக மாறிய ட்விட்டர்.. களமிறங்கிய முதலை, தேவாங்கு!

TN School Education : 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

TN School Education : 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!