மேலும் அறிய

Unexpected Person In Dream: நினைக்காத நபர் கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா?

Unexpected Person In Dream: அதிகப்படியான கனவுகள் வந்து தொந்தரவு அளிக்கும்போது, அந்த கனவில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

அன்பார்ந்த abp நாடு வாசகர்களே  நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது உங்களுடைய ஆழ்மனது விழித்துக் கொள்கிறது. அந்த சமயத்தில் பல என்ன ஓட்டங்கள் கனவின் வாயிலாக உங்களுக்கு வெளிப்படுகிறது.  இதுபோன்ற சூழ்நிலையில் தெரிந்த முகங்கள் அடிக்கடி கனவில் வருவது ஒன்றும் புதிதல்ல.  ஆனால் தெரியாத முகங்கள் கனவில் வந்தால்  உங்களுக்கு எப்படி இருக்கும்.  அப்படி வந்தால் என்ன பலன் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

நினைக்காத நபர் கனவில்:

தெரிந்த நபராக இருப்பார், ஆனால் அதிகம் பழகிய நபராக இருக்க  மாட்டார்,  இப்படியான சூழ்நிலையில் அந்த நபர் உங்கள் கனவில் வரும் போது உங்களுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் இருக்கலாம்.  இரவு கனவு வந்திருக்கலாம் காலையில் கண்விழிக்கும் போது  எதற்காக அந்த நபர் என் கனவில் வந்தார் என்ன சொல்ல விரும்புகிறார் என்று புரியாமல் நீங்கள்  தத்தளித்து  இருக்கலாம்.  இதற்கான விடை சுலபம்  நீங்கள் அந்த நபரைப் பற்றி நீங்கள்  பெரிதாக நினைக்கவில்லை.

ஆனால் அந்த நபர் உங்களை ஏதோ ஒரு வகையில் நினைத்துக் கொண்டிருக்கிறார் அல்லது நினைத்திருப்பார் என்று அர்த்தம்.  இந்த பூமியே அலைகளினால் ஆனது .  அந்த அலை  மின்காந்த அலையாக இருக்கலாம்,  மின்சார அலையாக இருக்கலாம்.

 உங்களுக்கு முக்கியமாக படாத அந்த நபருக்கு நீங்கள் முக்கியமாக பட்டிருக்கலாம் என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.  கனவை வைத்துக்கொண்டு நிஜத்தில் வாழ்வது கடினம்  அதைப் பற்றி வெளியில் கூறினாலும் நம்மை பைத்தியம் என்பார்கள்.  உதாரணத்திற்கு கனவில் உங்களிடம் யாரோ ஒரு நண்பர் நடிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் காலையில் கண்விழித்ததும் அந்த நபரிடம் சென்று ஏன் என்னை ஏமாற்றுகிறாய் என்று உங்களால் கேட்க முடியுமா ?  முடியாது அல்லது செய்யக்கூடாது.  அதேபோல் தான் தெரியாத நபர்கள் கனவில் வரும்போது அந்த நபர்களிடம் நட்பு ரீதியாக ஏதோ ஒரு வகையில் பேசும் பொழுது நீங்கள் ஏன் கனவில் வந்தீர்கள் என்று தான் கூற வேண்டுமே தவிர எதற்காக வந்தீர்கள் என்று கேட்கக் கூடாது.

”எண்ணங்கள் பிரதிபலிக்கலாம்”

ஒருவேளை தெரிந்த நபர் கனவில் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம் அவரிடம் உங்களால் பேச முடியும் என்றால் கூட… அவரிடம்  நீங்கள் எப்போதாவது என்னைப் பற்றி சமீபத்தில் நினைத்தீர்களா என்று கேட்கலாம்…?  அதற்கு அவர் ஆம் என்று பதில் சொல்லிவிட்டால் உண்மையாகவே உங்களுக்கு ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று தான் அர்த்தம்.  ஆழ் மனதின் எண்ணங்கள்  மறைந்திருக்கும் நபர்களின் எண்ணங்களை  காற்றில் கலக்க விடும் பொழுது  நிச்சயமாக அந்த எண்ணங்கள் உங்களுக்கு பிரதிபலிக்கலாம்.

 காதலின் ஒரு பகுதி தான் நான் சொல்லுவதும் கூட…  ஒரு பெண் உங்களைப் பற்றி சிந்தித்து கொண்டு இருக்கிறார் என்றால் ஒரு ஆணும் அந்த  அந்தப் பெண்ணைப் பற்றி சிந்திக்கிறார் என்றால் இருவரும் ஒரே அலை வரிசையில்  கனெக்ட் ஆகி இருப்பார்கள்.  அந்த சமயத்தில் அது  சொல்லப்படாத காதலாகவே மறைந்து போகலாம்.  உதாரணத்திற்கு ஹாலிவுட் நடிகர்  ஜான் விக் படத்தில் நடித்த ஹீரோவும்  சான்றா புல்லட் என்று சொல்லக்கூடிய ஹீரோயினும்  ஒரு படத்தில் இணைந்து நடிக்கும் போது  இருவரும் காதலைப் பற்றி பேசிக்கொள்ளாமல் கண்களிலேயே ரசித்தார்கள் என்று  15 வருடங்கள் கழித்து ஒரு பேட்டியில் சொன்னார்கள்.   பேட்டி எடுக்கும் நபர் இருவரிடமும் தனித்தனியே பேட்டி எடுத்தார் அப்பொழுது இருவரும் ஒரே மாதிரி  எண்ணங்கள் இருந்ததாக கூறினார்கள் ஆனால் அதை 15 வருடங்களுக்கு முன்பாக வெளிப்படுத்தாமலேயே நாங்கள் சென்று விட்டோம் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

விடுபட செய்ய வேண்டும்:

அதேபோல்  ஒரு தலை காதல் என்றும் ஒன்று உண்டு  அது  ஒரு பெண்ணுக்கும் அல்லது ஆணுக்கும்  எதிர் முனையில் நேசிக்கும் நபரை நன்றாக பிடிக்கும்  ஆனால் நேசிக்கப்படும் நபரோ  நேசிக்கும் நபரை திரும்பி கூட பார்க்க மாட்டார்.  இப்படியான சூழ்நிலைகளில் எழுகின்ற அலைகள்  எதிர்மறையான எண்ணங்களை வெளிப்படுத்தலாம் அது  அது உங்களுக்கு ஒருவேளை புரியாமலேயே போகலாம்.

கனவிற்கு வருவோம் , அதிகம் பரீட்சையும் இல்லாத தெரியாத நபர் கனவில் வந்தால் நிச்சயமாக உங்களுடைய மனது புத்துணர்ச்சி பெறுகிறது புதிய விஷயங்களைப் பற்றி சிந்திக்கிறது எந்த ஒரு சரணமும் இல்லாமல் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.  பிரச்னைகளை சமாளிக்க கூடிய சக்தி உங்களுக்கு இருப்பதால்.  தற்போது நடைபெறக்கூடிய எந்த  நிகழ்வுகளும் உங்களை அதிகம் பாதிக்கவில்லை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும் .  அதிகப்படியான கனவுகள் வந்து தொந்தரவு அளிக்கும்போது அந்த கனவில் இருந்து விடுபட விநாயகரை வழிபட வேண்டும் .  ஆஞ்சநேயர் வழிபாடும் கனவில் இருந்து விடுபடுவதற்கு சிறந்த வழியாக இருக்கும் என கருதப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (13-08-2026): இன்னைக்கு நல்ல நேரம் எப்போது?.. உங்க ராசிக்கு என்ன நடக்கும்.. பலன்கள் இதோ!
Rasi Palan Today (13-08-2026): இன்னைக்கு நல்ல நேரம் எப்போது?.. உங்க ராசிக்கு என்ன நடக்கும்.. பலன்கள் இதோ!
Rasi Palan Today (12-08-2026): இன்று ஆடி அமாவாசை.. துலாமுக்கு இன்னைக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு?
Rasi Palan Today (12-08-2026): இன்று ஆடி அமாவாசை.. துலாமுக்கு இன்னைக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget