
Diwali Rasi Palan 2023: தீபாவளி ராசிப்பலன்! மகரம், கும்பம், மீன ராசிக்கார்களுக்கு எப்படி?
Diwali 2023 Rasi Palan: மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசியினருக்கு தீபாவளி ராசிப்பலன் எவ்வாறு இருக்கப்போகிறது என்பதை கீழே காணலாம்.

மகர ராசி : 90%
அன்பான ABP நாடு வாசகர்களே இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், நான்காம் இடத்தில் இருந்த குரு பகவான் வக்கிரம் பெற்று மூன்றாம் இடத்திற்கு வருகிறார். வெற்றி ஸ்தானத்தில் குரு பகவான் அமர்வதால் தொட்ட காரியங்கள் வெற்றியாக முடியும். மூன்றாம் இடத்திற்கு வந்த ராகுவும் கேதுவும் உங்களுக்கு நன்மையே வழங்கப் போகிறார்கள்.
நான்காம் இடத்தில் இருந்த ராகு சற்று உங்களுக்கு அலைச்சலை கொடுத்திருப்பார். இரண்டாம் இடத்தில் சனி ஆட்சியாக இருப்பதால் உங்கள் சொல் அடுத்த வருடத்தில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும். வீடு, வண்டி, வாகனம் வாங்குவது தள்ளிப் போய்க்கொண்டு இருந்தது தற்போது வெற்றியாக முடியும் . பனிரெண்டாம் அதிபதி மூன்றாம் இடத்திற்கு வருவதால் சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். பெரிய பெரிய விழாக்களை முன் நின்று நடத்துவீர்கள் .
ஐந்தாம் இடத்து குரு பகவான் :
உங்கள் ராசிக்கு மே மாதத்தில் பெயர்ச்சியாகும் குரு பகவானால் உங்கள் ராசிக்கு வெற்றி கிடைக்கப் போகிறது. புத்திர பாக்கியம் கிடைக்கும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று கூறுவீர்கள் . வம்பு வழக்குகளில் வெற்றி கிட்டும். நீண்ட நாட்களாக எந்த காரியம் நடக்க வேண்டும் என்று எண்ணியிருந்தீர்களோ அவை கண்டிப்பாக நிறைவேறும். மூன்றாம் அதிபதி ஐந்தாம் இடத்தில் இருப்பது மிகச் சிறப்பு . தொலைத்தொடர்பு மீடியா துறையில் உள்ளவர்களுக்கு மிகச் சிறப்பான காலகட்டம்.
ராகு கேது சாதகமான இடத்தில் இருக்கிறார்கள் . குருவும் சாதகமான இடத்திற்கு வருகிறார். எனவே இது பொற்காலம். வணக்கம் வாழ்த்துக்கள்.
அதிர்ஷ்டமான நிறம் : சிவப்பு
அதிர்ஷ்டமான எண் : 4, 8
வணங்க வேண்டிய தெய்வம் : பெருமாள்
கும்பம் ராசி : 85%
அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே,
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். ராசியிலேயே சனி அமர்ந்திருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. நீங்கள் ஒரு காரியத்தை செய்வதற்காக யோசித்தீர்கள் என்றால் சற்று தாமதமாகவே நடக்க வாய்ப்பு உள்ளது . அவ்வளவு இறுதியில் ஜென்ம சனி உங்களை ஒரு காரியத்தை சுலபமாக செய்ய விட மாட்டார். கவலை வேண்டாம் இந்த வருடம் முடிவதற்குள் கடைசி மூன்று மாதம் இரண்டாம் இடத்திற்கு வக்கிரம் பெற்று வந்த குரு பகவான் உங்களுக்கு நன்மையே நடைபெறும்.
கால புருஷ லக்னத்திற்கு 11 ஆம் பாவமாக வரும் உங்கள் ராசி கொடுத்து வைத்த ராசி. ஜென்மத்தில் சனிபகவான் அமர்ந்திருப்பது ஆட்சி நிலையில் என்பதால் உங்களை வெற்றியடைய செய்வார். ஆனால், அது சற்று தாமதமாகவே முடியும். எதை பேசினாலும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்துப் பேச வேண்டும். நீங்கள் பேசுவதில் குதர்க்கம் கண்டுபிடிப்பது ஜென்ம சனியால் எளிதாக முடியும். அடுத்த வருடம் மே மாதத்திற்கு பிறகு உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் பிரவேசிக்கும் குருவால் தொழில் முன்னேற்றம் ஏற்பட போகிறது. இதிலும் வெற்றி எல்லாவற்றிலும் வெற்றி காண்பீர்கள் .
நான்காம் இடத்து குரு பகவான் :
2024 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு குரு பகவான் உங்கள் நான்காம் இடமான ரிஷப ராசியில் அமர்கிறார். உங்கள் ராசிக்கு எட்டாம் பாவத்தையும் பத்தாம் பாவத்தையும் பார்ப்பார். எட்டாம் பாவத்தை பார்வையிடுவதால் மறைமுகமான எதிரிகள் விலகுவார்கள். ஆயுள் கூடும் . நன்மையான பலன்களே நடைபெறும் . பணவரவு தாராளமாக இருக்கும் . பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் . வேலை தலங்களில் பாராட்டு கிடைக்கும் . யாரும் செய்ய முடியாத வேலையை நீங்கள் எளிதாக செய்து முடிப்பீர்கள் . ஜென்மத்து சனி சில அழுத்தங்களை கொடுத்தாலும் நான்காம் இடத்து குரு உங்களுக்கு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார் .
அதிர்ஷ்டமான எண் : 4, 6
அதிர்ஷ்டமான நிறம் : பச்சை
வணங்க வேண்டிய தெய்வம் : குரு தட்சணாமூர்த்தி
மீன ராசி : 90%
அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். உங்களுடைய ராசியிலேயே ராகு பகவான் அமர்கிறார். கடந்த ஒரு வருடமாக இருந்த இடம் தெரியாமல் இருந்த உங்களுக்கு, வரப்போகுது ஒரு ஜாக்பாட். ராகு நீங்கள் எங்கு இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பதை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவார் . சுறுசுறுப்பாக இயங்க போகிறீர்கள். உங்களைப் போல ஒரு காரியத்தை விரைவாக செய்யவே முடியாது என்று பெயர் எடுக்கப் போகிறீர்கள். இந்த வருடம் முடிவதற்குள், லக்னத்தில் வக்கிரம் பெற்று வரும் குரு பகவானால் உங்களுக்கு ஏற்றமான காலகட்டமே.
உடல் உபாதைகள் அவ்வபோது ஏற்பட்டாலும் மீண்டு வருவீர்கள். புகழ் கூட போகிறது , அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கப் போகிறீர்கள். உங்கள் ராசிக்கு 12-ஆம் இடத்து சனி தூக்க நேரத்தை குறைத்தாலும் உழைப்பால் உயர்வை கொடுக்கப் போகிறார். மே மாதம் ஒன்றாம் தேதிக்கு பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் பிரவேசிக்கிறார், அது வெற்றியின் ஸ்தானம். உங்களுடைய ராசிக்கு பத்தாம் அதிபதியும் லக்னாதிபதி குருபகவான் மூன்றாம் வீட்டில் பிரவேசிப்பதால் கலைத்துறையினர் , ஊடகத்துறையில் இருப்பவர்கள் , தொலைத்தொடர்பு போன்ற துறையில் இருப்பவர்களுக்கு இது அமோகமான காலகட்டம்.
மூன்றாம் இடத்தில் குரு :
உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டை பார்ப்பதால் திருமணம் விரைவில் முடியும், பகைவர்கள் கூட நண்பர்கள் ஆவார்கள். நீங்கள் பேசுகின்ற பேச்சில் ஆற்றல் பிறக்கும். அடுத்தவர்களிடத்தில் என்ன பேச வேண்டும்? எப்பொழுது பேச வேண்டும்? எங்கே பேச வேண்டும் என்பதை நன்கு அறிந்து அதற்கேற்றார் போல் பேசுவீர்கள். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு வரக்கூடிய வெற்றியை இன்றே தந்து விடுவார் குருபகவான். ராசிக்கு ஏழாம் வீட்டை பார்ப்பதால் அங்கே கேது சிக்கல்களை கொடுத்தால் கூட பிரச்சனைகள் விலகிடும், காரணம் குரு பகவான் கேதுவின் வீட்டை பார்ப்பதால் .
லக்னத்தில் ராகு, ஏழில் கேது :
லக்னத்தில் ராகு அமர்ந்து உங்களுக்கு உற்சாகத்தை கொடுப்பார் என்று கூறினேன். அதேபோல ஏழில் கேது அமர்ந்து, மனைவி வழியிலும் நண்பர்கள் வழியிலும் சற்று சிக்கலான சூழ்நிலைகளை உருவாக்கக்கூடும். நீங்கள் அவை எல்லாவற்றையும் திறம்பட சமாளிப்பீர்கள். ஏழாம் இடத்துக்கு கேது சிக்கல்களை கொண்டு வந்தாலும், மூன்றாம் இடத்தில் இருக்கும் குரு பகவான் ஏழாம் இடத்து கேதுவை பார்ப்பதால் அந்தப் பிரச்சனைகள் கண்டிப்பாக முடிவிற்கு வரும். அனைத்துமே வெற்றி காண போகிறீர்கள். புது தொழில் அமையும், புது வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வணக்கம் வாழ்த்துக்கள் !!!
அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்டமான எண் : 3
வணங்க வேண்டிய தெய்வம் : குரு பகவான்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

