மேலும் அறிய

திருவண்ணாமலை கோயில் கோபுரத்தில் 400 ஆண்டுகள் பழமையான முருகனின் ஓவியம் கண்டுபிடிப்பு

’’திருமஞ்சன கோபுரத்தின் விதானத்தில் பாதி அழிந்த நிலையில் முருகனின் 400 வருடம் பழமையான நாயக்கர் கால ஓவியம் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது’’

திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் சுதர்சன் , உதயராஜா ஆகியோர் இணைந்து நடத்திய சமீபத்திய மீள் ஆய்வின் பொழுது அண்ணாமலையார் கோவிலின் தெற்கு ராஜ கோபுரமான திருமஞ்சன கோபுரத்தின் விதானத்தில் பாதி அழிந்த நிலையில் ஒரு ஓவியம் இருப்பது தெரியவந்துள்ளது.  

ABP NADU செய்தி நிறுவனத்திடம் மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான  ராஜ் பண்ணீர் செல்வம் பேசுகையில், நான் எண்ணுடைய நண்பர்கள் சுதர்சன், உதயராஜா ஆகியோர் நாங்கள் இணைந்து நடத்திய சமீபத்திய மீள் ஆய்வின் பொழுது அண்ணாமலையார் கோவிலின் தெற்கு ராஜ கோபுரமான திருமஞ்சன கோபுரத்தின் விதானத்தில் பாதி அழிந்த நிலையில் ஒரு ஓவியம் இருப்பது கண்டுபிடித்தோம். இதுவரை அண்ணாமலையார் கோவிலில் ராஜகோபுரம் , புரவி மண்டபம் , கல்யாண மண்டபம் மற்றும் மேற்கு திருமால் பத்தியில் உள்ள ஓவியங்களே ஆவணம் செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்ஓவியம் இதுவரை ஆவணம் செய்யப்படவில்லை.

திருவண்ணாமலை கோயில் கோபுரத்தில் 400 ஆண்டுகள் பழமையான முருகனின் ஓவியம் கண்டுபிடிப்பு
இந்த ஓவியத்தில் முருகர் மயில் மீது உத்குடிகாசனத்தில் அமர்ந்து சதுர்புஜத்துடன் காட்சி தருகிறார் , அவரின் வலது பக்கம் வள்ளியும் இடப்பக்கம் தெய்வானையும் காட்சி தருகின்றனர். முருகனின் தலையை அழகான கிரீட மகுடம் அலங்கரிக்க, காதில் குண்டலங்களும் கழுத்தில் கண்டிகை, சரப்பளி அணிந்து , மார்பின் மீது முறையே ஸ்தன சூத்திரம், முப்புரிநூல் மற்றும் உரஸ் சூத்திரம் அணிந்து மார்பின் கீழ் உதரபந்தத்துடன் காட்சி தருகிறார். வலது மேற்கரம் வஜ்ராயுதம் ஏந்தியும் , கீழ் கரம் அருள்பாலிக்கும் அபய முத்திரையிலும், இடது மேற்கரம் சக்தி குலிசம் ஏந்தியும் கீழ் இடக்கரம் வரத முத்திரையிலும் காட்சி தருகிறது. அனைத்து கைகளிலும் தோள் வளை மற்றும் கைவளைகள் அணிந்து இருபக்க தோள்களிலும் தோள் மாலை அழகுடன் காட்சி தருகிறார்.

மேலும் முருகன் தனது இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்டு , தொடைவரை ஆடை அணிந்து தனது வாகனமான மயிலின் மீது உத்குடிகாசனத்தில் அமர்ந்து "சிகிவாகனராக" நீள்வட்ட பிரபையினுள் காட்சி தருகிறார். கந்த புராணம் கூறும் முருகனின் 16 கோலங்களில் ஒன்று "சிகிவாகனர்" என்பது குறிப்பிடத்தகுந்தது. மயிலின் தலையானது முருகனைப் பார்த்துத் திரும்பிய நிலையில், அதன் வாயில் பாம்பின் வால் பகுதியைக் கவ்வி உள்ள நிலையில் பாம்பின் உடல் மயிலின் உடல் மீது ஊர்ந்து முருகனின் இடக்காலின் கீழ்  பாம்பின் தலை படமெடுத்த நிலையில் காட்சி அளிக்கிறார். 

திருவண்ணாமலை கோயில் கோபுரத்தில் 400 ஆண்டுகள் பழமையான முருகனின் ஓவியம் கண்டுபிடிப்பு

அதனை தொடர்ந்து முருகனின் வலப்புறம் உள்ள வள்ளியும் இடப்புறம் உள்ள தெய்வானையும் மிகவும் சேதமுற்று இருப்பதால் தெளிவாகக் காணக்கிடைக்கவில்லை. இடப்புறம் தெய்வானையின் அருகே பணிப் பெண் ஒருவர் அக்காலத்திய உடை மற்றும் கொண்டை அணிந்து சாமரம் வீசும் காட்சி உள்ளது. அதற்கு மேல் இடப்புறம் உள்ள ஓவியம் முற்றிலும் சிதைந்துள்ளது. அதே போல வலப்புறம் வள்ளியின் அருகே காட்டப்பட்டுள்ள சாமரம் வீசம் பணி பெண் மிகவும் சிதைந்து கால்கள் மட்டும் தெரிகிறது. அதற்குமேல் வலப்புறமும் ஓவியம் மிகவும் சேதாரமாகி உள்ளது. இவ்ஓவியத்தில் சுண்ணாம்பு, கருப்பு மை மற்றும் உலோக வண்ணங்களான சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய ஐந்து வர்ணங்களையும் சேர்த்து பஞ்சவர்ண ஓவியமாகத் தீட்டி உள்ளனர். இங்குள்ள ஓவியத்தில் தீட்டப்பட்டுள்ள வண்ணம் மற்றும் காட்டப்பட்டுள்ள ஆபரணங்கள் யாவும் தஞ்சை பெரிய கோயிலின் நாயக்கர் கால ஓவியத்துடனும், மற்றும் ஆந்திர மாநிலம் லீபாக்ஷி வீரபத்திரர் கோவில் ஓவியத்துடனும் ஒத்துப் போவதால் இதனை நாயக்கர் கால ஓவியமாகக் கருதலாம்.

திருவண்ணாமலை கோயில் கோபுரத்தில் 400 ஆண்டுகள் பழமையான முருகனின் ஓவியம் கண்டுபிடிப்பு

அதுமட்டும் அல்லாமல் இந்த ஓவியத்தின் அருகே இதே போல இரண்டு தொகுப்புகள் முற்றிலும் அழிந்து, ஆங்காங்கே வண்ணங்கள் மட்டுமே திட்டுகளாக தென்படுகிறது. மேலும் இக்கோவிலில் புரவி மண்டபத்தின் விதானத்தில் உள்ள கிரிஜா கல்யாணம், பாற்கடல் அமிர்தம் கடையும் காட்சி அடங்கிய ஓவிய தொகுப்பை இவ்ஓவியம் ஒத்துள்ளது குறிப்பிடத்தகுந்தது. திருவண்ணாமலை கோவிலின் ராஜ கோபுர திருப்பணி மற்றும் மதில்களில் எல்லாம் தஞ்சை நாயக்க மன்னரான சேவப்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டவையே ஆகும். எனவே இந்த ஓவியத்தை 16 ஆம் நூற்றாண்டின் கடை பகுதியான சேவப்ப நாயக்கர் காலத்தை ஓட்டியதாக இதனைக் கருதலாம். சுமார் 400 வருடம் பழமையான இந்த ஓவியத்தைச் சிதைவில் இருந்து மீட்டு தமிழக தொல்லியல் துறையும் இந்து சமய அறநிலையத்துறையும் முறையாக ஆவணம் செய்து, இதனை புணரமைத்து இவ் ஓவியத்தைப் பாதுகாத்திட முன் வர வேண்டும் என்று  தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget