மேலும் அறிய

Dharmapuram Aadeenam: தீபாவளி அருளாசி வழங்கிய தருமபுரம் ஆதீனம்!

தீபாவளி பண்டிகை, நம்மிடம் உள்ள அசுரத்தன்மைகள், மலமாயைத் தன்மைகள் எல்லாம் அழிந்து நல்லவர்களாக மாற வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தும் விழா என்று தருமபுரம் ஆதீனம் தனது அருளாசியில் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் தொன்மைவாய்ந்த தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இருந்து வருகிறார். இந்நிலையில் நாளை தீபாவளி பாண்டிகை கொண்டாடப்படுவதை அடுத்து அவர் தீபாவளி அருளாசி வழங்கியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

Dharmapuram Aadeenam: தீபாவளி அருளாசி வழங்கிய தருமபுரம் ஆதீனம்!

நரகாசுரன் என்ற அசுரன் என்றைக்கும் சாகா வரமும், 1008 அண்டங்களையும் 108 யுகங்கள் ஆட்சி செய்ய வேண்டி சிவபெருமானிடம் வரம் கேட்டான். கேட்டவர்க்கு கேட்ட வரம் அருளும் இறைவனும் நரகாசுரனுக்கு அந்த வரத்தினை வழங்கினார். ஆனால், யாரொருவர் பிறக்கின்றாரோ அவருக்கு இறப்பும் உண்டு. எந்த வழியிலெல்லாம் தான் அழியக்கூடாது என்று நரகாசுரன் வரம்  கேட்டானோ, அதற்கு மாற்றாக ஒரு வழியை கண்டுபிடித்த சிவபெருமான், இன்றைய நாளில் தேவர்கள் மற்றும் அனைத்து உயிர்களின் விண்ணப்பத்தினையும் ஏற்று, திருமாலிடம் சொல்லி நரகாசுரனை வதம் செய்ய வைக்கிறார்.

Dharmapuram Aadeenam: தீபாவளி அருளாசி வழங்கிய தருமபுரம் ஆதீனம்!

அப்போது நரகாசுரன் தான் இறந்த நாளில் இதுவரை துன்பப்பட்டுக் கொண்டிருந்த அனைவரும் இன்பமாக இருக்க வேண்டும் என்றும் அன்றைய நாளில் அனைவரும் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை உண்டு, வெடி வெடித்து அந்த மகிழ்ச்சியை கொண்டாட வேண்டும் என்று அவன் கேட்கிறான். அவ்வகையில்தான் ஐப்பசி மாத சதுர்த்தசி திதியில் விடியற்காலை பொழுதில் அனைவரும் எண்ணெய் தேய்த்து, வெந்நீரிலே நீராட வேண்டும். எண்ணெய்யிலே லெட்சுமி வாசம் செய்கிறார். வெந்நீரிலே அன்றைய தினம் கங்காதேவி ஆவாகனம் செய்திருக்கிறார். எனவே, அன்றைய தினம் எண்ணெய் தேய்த்து, வெந்நீரிலே நீராடி புத்தாடை அணிந்து, ஒருவருக்கொருவர் இனிப்புகளை பகிர்ந்துகொண்டு, சேர்ந்து உண்ணும் பாங்கு நமது சமயத்திலே ஏற்பட்டிருக்கிறது.

Dharmapuram Aadeenam: தீபாவளி அருளாசி வழங்கிய தருமபுரம் ஆதீனம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மிக முக்கிய விழாவாக உலகமெங்கும் கொண்டாடப்படுவது தீபாவளி பண்டிகை. வளி என்றால் வரிசை. தீபம், ஆவளி என்று பிரித்தால் தீபத்தை வரிசையாக வைத்து வழிபாடு செய்வது. தீபத்தை வரிசையாக வைத்து வழிபாடு செய்வதால் தீபாவளி என்று கொண்டாடுகின்றோம். நம்மிடம் உள்ள அசுரத்தன்மைகள், மலமாயைத் தன்மைகள் எல்லாம் அழிந்து நல்லவர்களாக மாற வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தும் விழாவாக இந்த விழா அமைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு சிறப்பாக கொண்டாட முடியாமல் போன தீபாவளி பண்டிகையை, நிகழாண்டு அரசின் சட்டதிட்டங்களுக்கு உள்பட்டு கொண்டாட நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் என அவர்தம் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
Embed widget