Love Horoscope Today: உங்க லவ்வுல இன்றைய நாள் எப்படினு தெரிஞ்சுக்க படிங்க... ஜாலியான லவ் ராசிபலன்..
Love Horoscope Today in Tamil, September 8th 2022: இன்றைய நாள் உங்களுக்கும் உங்க லவ்வருக்கும் எப்படி இருக்கப்போகுதுன்னு தெருஞ்சுக்க ஜாலியா இந்த லவ் ராசிபலன படிங்க.
இதுவரைக்கும் ரெண்டு மூனு ப்ரேக் அப் பாத்துட்டேன். இனி நோ லவ் நோ பெய்ன்னு நீங்க நெனைக்கறீங்கனா நீங்க ஏதோ தப்பு செய்யறீங்கனு அர்த்தம். இன்னும் சொல்லப்போனா இயற்கைக்கு எதிரா இருக்கீங்கனு அர்த்தம். வாழ்க்கை எப்படி பயணபடுவதை கட்டாயம் ஆக்குதோ அதுமாதிரி தான் காதலும் பயணப்பட சொல்லும். அப்படி பயணப்படாம ஏதோ ஒரு இடத்துல தேங்கீடுவேன்னு நீங்க நினைக்கறீங்கன்னா, இயற்கைக்கு எதிரா மட்டும் இல்ல உங்களுக்கு எதிராகவும் நீங்க இருக்கீங்கனு அர்த்தம். குறிப்பா உங்க மகிழ்ச்சிக்கு, உங்க சந்தோஷத்துக்கு, உங்க வாழ்க்கைக்கு. நமக்கு முன்னாடி எத்தனையோ எதிரிகள் இருந்தாலும் நம்மலால அங்கள ஜெயிச்சிட முடியும். ஆனா நமக்கு எதிரா நாமலே இருக்கும் போது அங்க நடக்கறது பெரும் தவறு தான்.
மனச திறந்து வைங்க. ரொம்பவே இலகுவா வைங்க. குறிப்பா நீங்க செய்யவேண்டியது எல்லாம் இயல்பா இருக்கறது. உங்க மனச போட்டு குழப்பிக்காம இருங்க. லவ் அப்படிங்கற ஒரு அற்புதமான உணர்வு நம்மளோட கடைசி நிமிஷம் வரைக்கும் எக்கச்சக்க தடவ வரவேண்டியது. அதுலயும் குறிப்பா ஒரு பிரிவுக்கு பிறகோ அல்லது ஒரு முறிவுக்கு பிறகோ யாராலயும் உடனே மற்றொரு காதல் அப்படிங்கறத யோசுச்சு பாக்கவே முடியாது தான். ஆனா அதுக்காக அப்படியே இருந்திடவும் கூடாது. சின்னதா ஒரு ப்ரேக் எடுத்துகிட்ட அப்பறம், நீங்களே லவ்வ தேடி போகனும்னு அவசியம் இல்ல. இயற்கையாவே உங்களுக்கான லவ் ரொம்பச் சாதாரணமா நடந்திடும். அத வெல்கம் பண்ணுங்க. அக்சப்ட் பண்ணுங்க. அதுதான் இம்பாட்ர்டண்ட். அத தவற விடாதீங்க. இயற்கை எப்பவுமே அன்பானது தான். அதுக்காக வாய்ப்புகள அதிகப்படியா வழங்கக்கூடிய பழக்கம் இயற்கைட்ட கிடையாது. சோ... நீங்க ஜாலியா இருக்க லவ் பண்ணுங்க பாஸ்... அதுல உங்களுக்கு எதாவது சிக்கல்னா உங்க ராசிக்கான ஜாலியான லவ் ராசிபலன் நாங்க தர்றோம் நீங்க படுச்சு தெருஞ்சுக்காங்க. பட் கப்பு முக்கியம் பிகிலுனு சொல்ற மாதிரி லவ்வு முக்கியம். சோ எப்பவுமே லவ் பண்ணுங்க. லைஃப வின் பண்ணுங்க.
மேஷம்
ஒரு இளையராஜா பாடல் மாதிரி போய்ட்டு இருந்த உங்க லவ்வுல, கண்ணுபட்ட மாதிரி ஒரே மனஸ்தாபங்களா போய்ட்டு இருக்கு. நீங்களா பேசாத வரைக்கும் அது இப்படியே தான் தொடரும். ஒரு நல்ல லவ் சாங்கா உங்க லவ்வருக்கு அனுப்பீட்டு ஒரு ரோஜா எமோஜியும் சேத்து அனுப்புங்க. மீண்டும் உங்கள் காதல் தீபம் நல்லா பிரகாசமா ஒளிரும். வாழ்த்துகள்.
ரிஷபம்
என் ஆளோட இந்த பிரச்சனை, அந்த பிரச்சனைனு உங்க ப்ரெண்ட்ஸ் வந்து பொலம்புவாங்க. நீங்களும் எதையோ உளறி உடுவோம் உளறுவீங்க. அந்த பிரச்சனை தீந்ததுக்கு நீங்க தான் காரணம்னு சொல்லி, உங்கள லவ் சாமியார்னு கான்டாக்ட் லிஸ்ட்ல ப்ரோமோட் பண்ணுவாங்க. அதனால உங்க லவ்வுக்கு எந்த யூஸ்யும் இல்லயோ அதுமாதிரி தான் டு டேவும் உங்க லவ்வுக்கு யூஸ்புல்லான டே கிடையாது.
மிதுனம்
மத்தவங்களுக்கு ஹெலப் செய்யறதுக்குனே பொறந்து வந்துருக்கேன்னு ப்ரெண்டுக்கு ஹெல்ப் பண்றேன்னு போன நீங்க, இன்னைக்கு லவ்வருக்கு மெசேஜ் அனுப்பாம திட்டு வாங்குவீங்க. கடைசில ப்ரெண்டுக்கும் ஹெல்ப் பண்ண முடியாம லவ்வர்ட்டையும் திட்டு வாங்கீட்டு இருப்பீங்க. எது செஞ்சாலும் யோசுச்சு செய்ங்க.
கடகம்
ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேட்க மாட்டேன் அப்படிங்கறது யாருக்குமே லவ்வுக்கு செட் ஆகாது. ஆனா உங்களுக்கு செட் ஆகுது. உங்க காட்டுல மழை தான். ஜாலியா இருங்க. செம்ம டே.
சிம்மம்
உங்களுக்கு தெரியும் நேத்து போட்ட சண்டை இன்னும் திறலனு. ஆனாலும் காலையில எழுந்ததும் முதல் வேலையா உங்க ஆளுக்கு குட் மார்னிங்னு மெசேஜ் அனுப்புவீங்க. உங்கள நெனச்சா உங்களுக்கே பாவமா தெரியலாம். ஆனா நீங்க செம்மயான லவ் மெட்டீரியல்னு உங்க ஆள் உங்கள பாராட்டுவாங்க. ஜாலியான நாள். கன்னி
ஃபெஸ்டிவல் சேல்ல ஆன்லைன்ல ஆர்டர் செஞ்சது ஒன்னு வந்தது ஒன்னா இருந்தா எப்படி இருக்குமோ அப்படி தான் இருக்கும். இன்னைக்கு உங்க நிலம எளவு காத்த கிளி மாதிரி தான். ஏமாற்றமான நாள்.
துலாம்
நேரடியா விசயத்துக்கு வரமா, மெட்டிஒலி சீரியல பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ணீட்டு இருப்பீங்க. இன்னைக்கு உங்களால உங்களுக்கும் பிரயோஜனம் இல்ல உங்க லவ்வருக்கும் பிரயோஜனம் இல்ல. தயக்கத்துலயே இந்த நாள கடப்பீங்க. யூஸ் லஸ் டே.
விருச்சிகம்
யாருனே தெரியாதவங்க கல்யாணத்துல போய் நல்லா திருப்தியா சாப்டுட்டு வரலாமானு யோசுச்சு இருக்க உங்கிட்ட உங்க சொந்தகாரங்க நீ எப்போ கல்யாண சாப்பாடு போடுவனு கேப்பாங்க. லவ்வு கிவ்வு பண்ணா சொல்லு வீட்டுல நான் பேசறேனு சொல்லுவாங்க. நம்பீடாதீங்க. அம்புட்டும் வெசம். ஜாக்கரதையா இருங்க.
தனுசு
உனக்கென்னப்பா நீ பைத்தியம்னு சொல்ற அளவுக்கு லவ்வுல நீங்க செம கமிட்டெட்டா இருப்பீங்க. உண்மைய சொல்லப்போனா இன்னைக்கு தான் உங்களுக்கு லவ்வர்ஸ் டேனு உங்களுக்கு ஃபீல் ஆகற அளவுக்கு செம்மயா இருக்க போகுது.
மகரம்
எனக்கு நல்ல சாங்னு தோனுறது எல்லாம் நம்ம ஆளுக்கு மொக்க சாங்னு சொல்லீட்டு இருக்காங்களே. நமக்கு ஏன் இவங்கள புடுச்சதுனு புரண்டு புரண்டு யோசிப்பீங்க. கன்புஷனான டே. கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்படி ஜீவா ஓடும்னு கருணாஸ் கேட்கற மாதிரி, உங்க ஆள்ட்ட கேட்பீங்க.
கும்பம்
தக்காளி சாப்பாடு கெடச்சா போதும்னு நெனைக்கறவங்களுக்கு பிரியாணி கெடச்சா எப்படி இருக்குமோ அப்படி இருக்க போகுது உங்க லவ் டே. நீங்க எதிர்பார்க்கறத விடவே சூப்பரா போககூடிய நாள்.
மீனம்
கோழில இருந்து முட்டை வந்துச்சா இல்ல முட்டையில இருந்து கோழி வந்துச்சாங்கற கேள்விக்கு கூட பதில் கண்டுபுடுச்சுடலாம். ஆனா சண்டைக்கு நீங்க காரணமா இல்ல உங்க லவ்வர் காரணமானு கண்டுபிடிக்க முடியாது. டு டே உங்களுக்கு சண்'டே, தான் உடையபோகுது மண்ட.