மேலும் அறிய

Love Horoscope Today: ராசிபலனில் உங்க லவ்வருக்கு என்னனு தெருஞ்சுக்கனுமா? இதுதான்  உங்களுக்கான ஜாலியான லவ் ராசிபலன்..

Love Horoscope Today in Tamil, September 2 nd 2022: சொதப்பல் ஏற்படாமல் இருக்க உங்க ராசிக்கான ஜாலியான லவ் ராசி பலன்களை ஜோடியா படிங்க...

கொஞ்ச தூரம் நடக்கலாமா? கை புடிச்சு நடக்கலாமா? நிஜமாவே என்ன காதலிக்கறியா என்ற கொஞ்சம் ப்ரியங்களை தாங்கிய கேள்விகளை எதிர்கொள்ளாத காதலே இருக்காது. காதலின் கை பிடித்து நடக்கையில் மனதுக்கு மட்டுமல்ல வாழ்வுக்கும் அது ஒரு இதமான காலம். கரங்கள் கோர்ப்பது என்பது ஏதோ விளையாட்டாய் நிகழ்வது கிடையாது. அது உள்ளூற நிகழ்வது. உங்களில் தொடங்கி உங்கள் காதலின் நம்பிக்கையிலோ அல்லது உங்கள் காதலில் தொடங்கி உங்களின் நம்பிக்கையில் அது நீளும். எனக்கு நீ இருக்கிறாய், எனும் நம்பிக்கை இருவரிலுமே ஊறி திளைத்து பூக்களை பூக்கச் செய்கிறது. காதல் எப்போதும் ஒரு நந்தவனத்தைப்போல் இருக்க விரும்புவதே இல்லை. 

மாறாக அது ஒரு வறட்சியை கடக்க தயாராகிறது. புயலில் இருந்து மீள தன்னை ஈடுபடுத்த நினைக்கிறது. ஒரு பெரும் பூகம்பத்தின் பிளவில் அகப்படாமல் இருக்க முயலும். ஓரு ஆழ்கடலின் சுழலில் சிக்கி தவிக்க அது விரும்பவே விரும்பாது. ஆனால் இப்படியான எத்தனை துயரங்களை கடக்கும்போதும் கடந்த பிறகும், காதல் எதிர்பார்ப்பது ஒன்று தான். மீண்டும் அந்த அன்பின் கரங்களை அழுத்தமாக பிடித்துக்கொண்டு உலகையே வலம் வர அது ஆவல் கொள்ளும். இது இயல்பாய் இயற்கையாய் காதலுக்கே உரித்தான ஓர் அழகிய குணம். 

காதல் எந்தவொரு மோசமான சூழலிலும் கரங்களை பிய்த்துக்கொண்டு சென்றுவிட வேண்டும் என நினைப்பதே இல்லை. காதல் கரங்களை இன்னும் இறுகப்பற்றத்தான் நினைக்கிறது. எல்லா காதலிலும் முதல் முறையாக கரங்களை கோர்க்கும் போது ஒரு சிறு தடுமாற்றத்துடன் வெட்கத்துடன் ஒருவித பதற்றத்துடன் தான் பற்றியிருக்கும். அப்படி பற்றிக்கொண்ட கரங்கள் தான், தன் காதலை ஆரத்தழுவிக்கொள்கின்றன. காதலில் கரங்கள் செய்யும் மாயாஜாலம் அளப்பரியது. கண்களில் தொடங்கும்  காதலை கரங்களில் தொடர்வது ஒரு மாயவித்தை. அப்படியான வித்தைகளில் சொதப்பல் ஏற்படாமல் இருக்க வேண்டும் என நாங்க விரும்புறோம். சொதப்பல் ஏற்படாமல் இருக்க உங்க ராசிக்கான ஜாலியான லவ் ராசி பலன்களை ஜோடியா படிங்க...


Love Horoscope Today: ராசிபலனில் உங்க லவ்வருக்கு என்னனு தெருஞ்சுக்கனுமா? இதுதான்  உங்களுக்கான ஜாலியான லவ் ராசிபலன்..

 

மேஷம்

ராங் நெம்பர்ல இருந்து கால் வந்தாலும் கால் அவர் பேசற திறமை தான் உங்களுக்கு எதிரியே. ராங் நெம்பருக்கே இவ்வளவு நேரம் பேசற நீங்க, ஆள்ட்ட மட்டும் பேசவே மாட்டீங்க. இதுக்காகவே வாங்குவீங்க. 

ரிஷபம்
தலைவர் படத்துக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோக்கு போகும்போது எப்படி ஆரவாரமா இருக்குமோ அப்படி உங்க ஆள் கூட சேட்டிங் ஸ்டார்ட் ஆகும். அதுக்கு அப்பறம் பேர்ட் டேவா போறதுக்கான எல்லா வேலையும் நீங்களே பாத்துடுவீங்க. அவ்வளவு ராசியான நாள். கவனமா இருங்க. 

மிதுனம்

உங்க பேருக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லைனு நெறயா பேர் சொல்லி இருந்தாலும், இன்னைக்கு அது உண்மையோனு உங்களுக்கே தோணும். கன்ஃபியூஷனான நாளா இருந்தாலும் ஆனா உங்க ஆள் உங்கள தேத்துவாங்க. ஆள் இருக்க பயமேன்.

கடகம்

ஆனால் உங்களுக்கு தெரியும் நேத்து போட்ட சண்டை இன்னும் முடியலன்னு. ஆனாலும் காலையில எழுந்ததும் முதல் வேலையா உங்க ஆளுக்கு குட் மார்னிங்னு மெசேஜ் அனுப்புவீங்க. உங்கள நெனச்சா உங்களுக்கே பாவமா தெரியலாம். ஆனா நீங்க செம்மயான லவ் மெட்டீரியல்னு உங்க ஆள் உங்கள பாராட்டுவாங்க. 

சிம்மம்

ஒரு மாதிரி டிஷ்அப்பாய்மெண்டோட ஸ்டார்ட் ஆகி செம ரொமான்சுல முடியறதுக்கான எல்லா சான்ஸும் இருக்கு. ஆனா பாருங்க உங்க ராசிக்கு இன்னைக்கு எக்குத்தப்பான நாளாதான் இருக்கும்னு பலன் சொல்லுது. 

கன்னி

ஏன் கால் பண்ணல ஏன் மெசேஜ் பண்ணலனு உங்க ஆள் கேட்டதுக்கு நீங்க உண்மையே சொன்னாலும் என்ன கத விடுறயானு தான் சொல்லுவாங்க. இன்னைக்கு நீங்க கதையாவே அளந்தாலும் நம்புவாங்க. வாய்லயே வட சுட வாட்டமான நாள்.

துலாம் 

லவ்வருடனான சண்டைகள் விலகி சமாதானம் ஆகும் நாள். சஞ்சலங்கள் நீங்கும் நாள். இதெல்லாம் படிக்க சந்தோஷமா இருக்குல. ஆனா அது பொய். 

விருச்சிகம்

நீங்க நெனச்சத விடவுமே உங்க நாள் லவ்வோட போக எல்லா சான்ஸும் இருக்கு. ஆனால் அதுல நீங்களே மண்ண போட்டுடுவீங்க. அப்பறம் ஃபீல் பண்ணுவீங்க. யோசுச்சு சூதானமா இருங்க. 

தனுசு

லோக்கல் சேனல்ல புதுப்படம் போட்ட தியேட்டர்  ஓனருக்கு எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும் உங்களுக்கு. உங்க ஆள் உங்ககூட அதிகமாக டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னா நீங்கதான் ஏதாவது ட்ரை பண்ணனும். இல்லலைனா நீங்களும் தியேட்டர் ஓனர் ஆகிடுவீங்க. புரியும்னு நெனைக்கறேன். 

மகரம்

மங்களகரமான நாள். அதுவும் மத்தியானம் வரைக்கும் தான். அதுக்கு அப்புறம் உங்க வாய் சும்மா இருக்காது. வாய் சும்மா இருந்தாலும் கை சும்மா இருக்காது. எப்படியும் உங்க ஆள நோகடுச்சுடுவீங்க. ஆனா சமாதானம் செய்யறதுல நீங்க பி.எச்.டி. அதனால மட்டும் தான் உங்க லவ்வு இன்னும் இருக்கு. பலே கில்லாடிப்பா நீங்க. 

கும்பம் 

இந்தியா பாகிஸ்தான் மேட்ச் பாஸ் உங்களுக்கு. சேதாரம் ஆகாம பாத்துக்கங்க. அவ்வளவு தான் டாட். 

மீனம்

எப்போ கமிட் ஆவோம்னு அப்பப்போ யோசனை வந்தாலும், எப்பவும் உங்களுக்கு தோனுறது
பழைய விஜயகாந்த் படமெல்லாம் பாத்துட்டு கேப்டன் ரசிகரா மாறிடலாமானு மட்டும் தான். கேப்டன் ஸ்டைல்ல ப்ரபோஸ் பண்ணாலும் உங்களுக்கு வாய்ப்பு கம்மி தான். சேன்ஜ் த ரூட்.


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget