மேலும் அறிய

சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் இந்த ஆண்டும் ரத்து!

பெருந்தொற்றால் தொடர்ந்து 2-வது ஆண்டாக சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் சாமியை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் ஆனி திருமஞ்சன விழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தற்போது கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் பக்தா்கள் இன்றி விழா கோயில் உள்பிரகாரத்திலேயே நடைபெற்று வருகிறது. அதே வேளையில் சாமிக்கு விழாவுக்கான சிறப்பு பூஜைகள் முடிந்த பின்னர் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சிகர திருவிழாவான தேரோட்டம் இன்றும் (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) ஆனிதிருமஞ்சன விழாவும் நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும், மேலும் திருவிழா முன் எப்படி நடைபெறுமோ அதே போன்று நடைபெற அனுமதி அளித்திட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் வலியுறுத்தி வந்தனர்.


சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் இந்த ஆண்டும் ரத்து!

நேற்று முன்தினம் இரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாண்டியன் தலைமையில் மறியல் போராட்டமும் நடந்தது. இருப்பினும் மாவட்ட நிர்வாகம் தனது முடிவை மாற்றிக் கொள்ள முன்வரவில்லை. கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக, தேரோட்டத்தை கோயிலுக்கு வெளியேவும், ஆனி திருமஞ்சன விழாவையும் நடத்த அனுமதி அளிக்கவில்லை. பக்தர்கள் யாரும் இன்றி, கோயில் உள் பகுதியிலேயே தேரோட்டம் மற்றும் ஆனிதிருமஞ்சன விழாவை நடத்தி கொள்ளலாம் என்று அறிவுறுத்தியது. அதன்படி இன்று நடைபெற இருந்த பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நிகழ்வு ரத்து செய்யபடுகிறது. அதே நேரத்தில் வழக்கமாக தேரோட்டத்தின் போது நடராஜருக்கு கோயிலுக்கு உள்ளே நடைபெறும் பூஜைகள், இன்றும் அதே போன்று நடக்கிறது.




சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் இந்த ஆண்டும் ரத்து!

அதன்படி இன்று அதிகாலை 5 மணிக்கு மேல் நடராஜரும் சிவகாம சுந்தரியும் சித்சபையில் இருந்து புறப்படுகின்றனர். அதை தொடர்ந்து உள் பிரகாரத்தை வலம் வரும் சுவாமி அங்கிருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள உள்ளார். அதன் பின்பு காலை 9 மணி முதல் 2 மணி வரை சுவாமியை தரிசிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன் பின்பு பக்தர்கள் அனுமதி முற்றிலுமாக நிறுத்தப்படும். தொடர்ந்து தரிசன நாளான நாளை(வியாழக்கிழமை) ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது. பின்பு மதியம் 2 மணி அளவில் தரிசன விழா நடைபெறுகிறது. அதில் நடராஜரும் சிவகாம சுந்தரியும் நடனமாடியபடி சன்னதிக்கு செல்வார்கள். அதன் மாலை 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆனி திருமஞ்சன விழாவில் தொடர்ந்து 2-வது ஆண்டாக தேரோட்டம் ரத்து செய்யப்படுவதுடன், ஆனி திருமஞ்சனமும் பக்தர்கள் இன்றி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடதக்கதாகும். பெருந்தொற்றால் தொடர்ந்து 2-வது ஆண்டாக சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் சாமியை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.  இது பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (14-09-2026): விநாயகரின் அருளால் லாபம் பெறும் ராசி எது? - மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் இதோ!
Rasi Palan Today (14-09-2026): விநாயகரின் அருளால் லாபம் பெறும் ராசி எது? - மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் இதோ!
Rasi Palan Today (13-09-2026): இன்று கடகத்துக்கு செம லாபம்.. உங்களுக்கு நல்ல நாளா? - 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (13-09-2026): இன்று கடகத்துக்கு செம லாபம்.. உங்களுக்கு நல்ல நாளா? - 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (11-09-2026): இன்று மிதுனத்துக்கு சிக்கல்.. அப்ப உங்களுக்கு? .. 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (11-09-2026): இன்று மிதுனத்துக்கு சிக்கல்.. அப்ப உங்களுக்கு? .. 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (10-09-2026): ஆவணி மாத அமாவாசை.. இன்று கவனமுடன் இருக்க வேண்டிய ராசிகள்.. பலன்கள் இதோ!
Rasi Palan Today (10-09-2026): ஆவணி மாத அமாவாசை.. இன்று கவனமுடன் இருக்க வேண்டிய ராசிகள்.. பலன்கள் இதோ!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஒரே நாளில் ரூ.12,300 கோடி முதலீடுகளை ஈர்த்த CM விஜய்; எந்தெந்த கம்பெனிகள்.? இவ்வளவு வேலைவாய்ப்புகளா.?
ஒரே நாளில் ரூ.12,300 கோடி முதலீடுகளை ஈர்த்த CM விஜய்; எந்தெந்த கம்பெனிகள்.? இவ்வளவு வேலைவாய்ப்புகளா.?
வெல்கம் பேக் மக்களே! தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! கூட்டம் அள்ளுது!
வெல்கம் பேக் மக்களே! தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! கூட்டம் அள்ளுது!
Anna police Medals : காவல் துறையினர் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! அசத்தலான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு
காவல் துறையினர் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! அசத்தலான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு
Udhayanidhi : பெரியார்,அண்ணாவுக்கு தடை.! காவல்துறை CM கட்டுப்பாட்டிலா? காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டிலா? – உதயநிதி கேள்வி
பெரியார்,அண்ணாவுக்கு தடை.! காவல்துறை CM கட்டுப்பாட்டிலா? காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டிலா? – உதயநிதி கேள்வி
ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு போன்.! திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக- பிரேமலதா அதிரடி அறிவிப்பு
ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு போன்.! திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக- பிரேமலதா அதிரடி அறிவிப்பு
Iran Strait of Hormuz: ஹார்முஸ் விவகாரம்; வளைகுடா நாடுகளுடன் நடக்கவிருந்த சந்திப்பு; சவுதிக்காக ஒத்திவைத்த ஈரான்; காரணம் என்ன.?
ஹார்முஸ் விவகாரம்; வளைகுடா நாடுகளுடன் நடக்கவிருந்த சந்திப்பு; சவுதிக்காக ஒத்திவைத்த ஈரான்; காரணம் என்ன.?
பெற்ற மகனை ஸ்டாலின் முறையாக வளர்க்கவில்லை .! கீழ்த்தரமாக பேசுவது தான் திமுகவின் DNA- அமைச்சர் ரமேஷ்
பெற்ற மகனை ஸ்டாலின் முறையாக வளர்க்கவில்லை .! கீழ்த்தரமாக பேசுவது தான் திமுகவின் DNA- அமைச்சர் ரமேஷ்
Automatic Cars Under 9 Lakh: ஆட்டோமேட்டிக் கார்கள்லயே நாங்க தான் மலிவு.! ரூ.9 லட்சத்திற்குள் கிடைக்கும் மாடல்கள் லிஸ்ட் இதோ
ஆட்டோமேட்டிக் கார்கள்லயே நாங்க தான் மலிவு.! ரூ.9 லட்சத்திற்குள் கிடைக்கும் மாடல்கள் லிஸ்ட் இதோ
Embed widget