Fish Tank Vastu Tips | பாசிட்டிவ் எனர்ஜி.. அதிர்ஷ்டம் தரும் மீன்வளர்ப்பு.. எந்த திசையில் எப்படி வைப்பது? வாஸ்து டிப்ஸ்
மீன் தொட்டியில் 9 மீன்களை விட வேண்டும். அதில் 8 மீன்கள் தங்க மீன்களாகவும், ஒரு மீன் கறுப்பு மீனாக இருக்க வேண்டும். தங்க மீன்கள் இல்லை என்றால் சிவப்பு மீன்களையும் விடலாம்.
வீடுகளில் மீன்களை வளர்க்கும்போது மகிழ்ச்சியான சூழ்நிலையோடு பாசிடிவ் எனர்ஜியைக்கொடுக்கும். மேலும் அனைவரின் வாழ்வில் அதிர்ஷ்டத்தை தரும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
இன்றைக்கு பல வீடுகளில், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட் போன்ற பல்வேறு இடங்களில் மீன் தொட்டி வைப்பதைப் பார்த்திருப்போம். அழகிற்காக ஒரு புறம் வைக்கப்பட்டது என்றாலும் வாஸ்துபடி, சரியான திசையில் மீன் தொட்டியை வைத்து மீன்களை வளர்க்கும்போது நமக்கு அதிர்ஷ்டம் கிடைப்பதாக நம்பப்படுகிறது. மீன் தொட்டியில் வளர்க்கப்படும் மீனின் அசைவுகள் மனதிற்கும் நிம்மதியையும், அமைதியையும் ஏற்படுத்தும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் எந்த திசையில் வைக்க வேண்டும் என்ற நடைமுறையும் உள்ளது. எனவே இந்நேரத்தில் வாஸ்து முறைப்படி வீடுகளில் மீன் தொட்டியை எப்படி வைக்க வேண்டும்? என இங்கே தெரிந்துகொள்வோம்.
வாஸ்து முறைப்படி மீன் தொட்டியை வளர்க்கும் விதம்:
உங்களது வீடுகளில் மீன் தொட்டியில் மீன் வளர்க்க விரும்பினால் முதலில், தென் கிழக்கு திசை எது? என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம் என கூறப்படுகிறது
அடுத்தாற்கடுத்தாற்போல் உங்களது வீடுகளில் தென் கிழக்கு திசை எங்கு உள்ளதோ? அதற்கேற்ற சைஸ்களில் மீன் தொட்டியை அமைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் மீன் தொட்டியில் 9 மீன்களை விட வேண்டும். அதில் 8 மீன்கள் தங்க மீன்களாகவும், ஒரு மீன் கறுப்பு மீனாக இருக்க வேண்டும். தங்க மீன்கள் இல்லை என்றால் சிவப்பு மீன்களையும் விடலாம். சிவப்பு மீன்கள் வளமையும், மஞ்சள் நிற மீன்கள் செயல்திறனையும் கொடுக்கும் என கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் மீன்கள் உள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ஒரு வேளை நீங்கள் வளர்க்கும் மீன்களில் ஏதேனும் ஒன்று இறந்துவிட்டால் கூட வேறு மீன்களை வாங்கி வளர்க்கலாம்.
மேலும் நீங்கள் மீன் தொட்டியை வைக்கும்போது, வாசலுக்கு அருகில் உள்ளே வைப்பது நலம் தரும். அதேவேளையில் படுக்கை அறை, படிக்கும் அறை, சமையல் அறை இவற்றில் வைக்கக்கூடாது.
இப்படி நீங்கள் மீன்களை வீடுகளில் வளர்க்கும்போது,பார்ப்பதற்கு அழகாகவும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இதோடு மீன் தொட்டிகளில் மீன்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதைப்பார்க்கும் போது நாமும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது. இதோடு மன நிம்மதியையும், பாசிட்டிவ் எனர்ஜியையும் நமக்கு வழங்குகிறது.
எனவே மீன் தொட்டிகளில் மீன்களை வளர்க்கும்போது அழகிற்காகவும், நம்முடைய வாழ்வில் பாசிட்டிவ் எனர்ஜி கொடுக்கும் உதவியாக இருக்கும். மேலும் வாஸ்து பரிகாரமும் இதன் மூலம் நிறைவேறிவிடும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.