மேலும் அறிய

Aavani Month Rasipalan: மேஷ ராசிக்காரர்களே.. உங்களுக்கான ஆவணி மாத பலன்கள் இங்கே

Aavani Month Rasipalan: அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு  நீங்கள் செய்யும் சிறிய வேலை கூட உங்களை புகழின் உச்சிக்கு கொண்டு சென்று விடும்.

மேஷ ராசி -  ஆவணி மாத ராசி பலன் 

அன்பார்ந்த abp நாடு வாசகர்களே  ஆடி முடிந்து ஆவணி தொடங்கி விட்டது. நல்ல காலம் பிறந்து விட்டது. சுப காரியங்கள்  நிகழப்போகிறது.  சூரியன் சொந்த வீட்டில் ஆட்சி பெறுகிறார். கிரகங்களின் தலைவன்  நட்சத்திர நாயகன்  சூரியனின் ஒளியின் மூலம் உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்...

மேஷ ராசி

அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு  நீங்கள் செய்யும் சிறிய வேலை கூட உங்களை புகழின் உச்சிக்கு கொண்டு சென்று விடும்.   தோன்றின் புகழோடு தோன்றுக என்று திருவள்ளுவர் கூறுவது போல  இயல்பாகவே கால புருஷ தத்துவத்திற்கு  உங்கள் ராசியில் இருந்து ஐந்தாம் இடத்தில் புகழின் நாயகன் சூரியன் ஆட்சி பெறுகிறார்.  இயல்பாகவே மேஷ ராசிக்கு கௌரவம் அந்தஸ்து மரியாதை என்பது  வாழ்நாள் முழுவதும் ஏதாவது ஒரு வகையில் இருந்து கொண்டே இருக்கும். தற்போது கோச்சாரத்தில் சூரியன் ஆவணி மாதத்தில் ஆட்சி பெற்று  நீங்கள் யார் என்பதை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்ட வந்துவிட்டது. .  திருமணம் ஆகிவிட்டது நீண்ட நாட்களாக புத்திர பேர் இல்லை என்று சோகத்தோடு இருப்பவர்களுக்கு மழலைச் செல்வத்தை கேட்பதற்கான நேரம் வந்துவிட்டது .  ஊர் விட்டு ஊர் வந்து விட்டோம் சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை உற்றார் உறவினர்களை எல்லாம் சென்று பார்க்க வேண்டும் என்று ஏக்கத்தோடு இருப்பவர்களுக்கு இதோ இந்த ஆவணி மாதம் உங்களுக்கான  மாதம்.   குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவதற்கான மாதம்.  சூரியன்  மூன்று நட்சத்திரங்களில் பிரயாணம் செய்யப் போகிறார். அதை சற்று விரிவாக தெரிந்து கொள்வோம்...

மகம் நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சாரம்:

சிம்ம ராசியில்  முதலில் நான்கு பாதங்கள்  மகம் நட்சத்திரத்தின் பிடியில் இருக்கிறது.  இந்த நட்சத்திரத்தை சூரியன் ஒலியோடு கடக்கும் பொழுது உங்களுக்கு கடன் குறையும். அப்படி என்றால் வருமானம் வரவேண்டும் அல்லவா  நிச்சயமாக வரும்.   பழைய வீடு இருக்கிறது அதை விற்று  புதிய வீடு கட்ட வேண்டும் அல்லது புதிய இடம் வாங்க வேண்டும், புதிய பொருட்கள் வாங்கி மகிழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சூரியன் மக நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் காலகட்டத்தில் அது நிறைவேறும். ஆறாம் இடத்தில் இருக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் சூரியன் வலிமை பெற்று  பயணம் செய்வது  நாள்பட்ட நோய்களை தீர்ப்பதற்கான நேரம்  குறிப்பாக  உடலில் கட்டி இருக்கிறது  வலி இருக்கிறது மூட்டு முழங்கால் பிரச்சனை  இவை எல்லாம் தீருமா என்றால் நிச்சயம் தீரும்  மேலும், ஒன்று சொல்லுகிறேன்..  அவை தீருவதற்கான நல்ல மருத்துவர் கிடைக்கப் போகிறார்   இதுதான் முக்கியம்.  ஒரு மாதத்தில்  தீர்ந்துவிடும் என்று நான் சொன்னேன் என்றால்  அதை ஏற்றுக்கொள்ள கசப்பாக தான் இருக்கும்  ஆனால் உங்கள் வலிகள் குறைய உங்களின் நோய்கள் குணமாக நல்ல மருத்துவர் உங்களுக்கு அமைவார்.   அவரின் மருந்துகள் மூலமாக உங்களுக்கு சட்டு என்ற நோய்கள் குணமாகும்.

பூரம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் சூரியன்:

 அன்பார்ந்த வாசகர்களே  பூரம் நட்சத்திரம் என்பது சுக்கிரனுடைய நட்சத்திரம்  27 நட்சத்திரங்களும்  ஏதாவது ஒரு கிரகத்தின் ரப்பரசன்டேடிவ்  அதாவது  பூரம் என்றால் சுக்கிரனே என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்படி சூரியன் சுக்கிரன் மீது செல்லும்போது சுக்கிரனின் தன்மைகளை வாங்கி அப்படியே வெளிப்படுத்துவார் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் சுக்கிரன் தான்.  ஐந்தாம் வீட்டில் இருக்கிறது சூரியன்  தற்போது ஒரு ஆணையோ அல்லது ஒரு பெண்ணையோ திருமணம் செய்ய வேண்டும் என்று ஒரு மேஷ ராசியினர் எண்ணுகிறார் என்று வைத்துக் கொள்ளலாம்.  அதை வீட்டில் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தால் தற்போது இந்த ஆவணி மாதத்தில்  அவற்றை வீட்டில் சொல்லி  இரு வீட்டார்   சம்மதத்தோடு திருமணம் நடைபெறுவதற்கான நேரம். கூட்டுத்தொழில் லாபத்தை கொடுக்கும்.   பூர்வீக வீட்டிற்கு அல்லது தாய் வழி உறவினர்களின் வீட்டிற்கு குடும்பத்தோடு சென்று வருவீர்கள் சுபிட்சமான  குடும்ப ஒற்றுமையும் மேம்படும். இயல் இசை நாடகம்  அல்லது உங்கள் மகனின் அல்லது மகளின் திறமையை வெளிப்படுத்த நல்ல காலம் இந்த ஆவணி மாதம்.

உத்திரம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் சூரியன்:

 உத்திர நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சாரம் செய்யும் போது  அவருடைய சொந்த நட்சத்திரம் ஆயிற்று  மிகவும் பலம் பொருந்திய இடமாக உத்தரவு இருப்பதால்  கேட்டவை கிடைக்கும் நினைத்தவை நடப்பதும்.  ஆச்சரியமான காலகட்டமாக தான் இருக்க போகிறது.. உங்களுடைய பெருமை தெரு கடந்து ஊர் கடந்து மாநிலம் கடந்து செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு.. உண்மையாக இருப்பவர் நீங்கள் உண்மையான காரியங்களை எதிர்கொள்ளுங்கள்... 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget