மேலும் அறிய

விருதுநகரில் நுண்ணீர் பாசனம் ஆய்வு: விவசாயிகளுக்கு நீர் சேமிப்பு, மானியப் பலன்!

நுண்ணீர் பாசன முறைகள் மூலம் குறைந்த அளவு நீரைக் கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதுடன், நீரின் பயன்பாட்டுத் திறனும் அதிகரிக்கிறது.

விருதுநகர் மாவட்டம் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் அரசு மானியம் பெற்று பழக்கன்றுகள்  நடப்பட்டுள்ளதை, விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அரசு மானியம் பெற்று பழக்கன்றுகள்  நடப்பட்டுள்ளது

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், தாதம்பட்டியில் தோட்டக்கலைத்துறை மூலம் பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாயீ யோஜனா (Pradhan Mantri Krishi Sinchayee Yojana – PMKSY) – நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் அரசு மானியம் பெற்று பழக்கன்றுகள்  நடப்பட்டுள்ளதை, விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது...," நாட்டில் விவசாயத்திற்குத் தேவையான நீரை சிக்கனமாகவும், திறம்படவும் பயன்படுத்துவதையும், பாசன வசதிகளை மேம்படுத்துவதையும், நீர்ப்பாசனப் பரப்பை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாயீ யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாய நிலங்களில் சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசனம் உள்ளிட்ட நுண்ணீர் பாசன முறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதல்

மாவட்டத்தில், இத்திட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை தோட்டக்கலை பயிர்களில் 17,252 விவசாயிகளுக்கு 14,501 ஹெக்டேர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2025- 26 ஆம் ஆண்டில் சொட்டுநீர் பாசனம் 1013 விவசாயிகளுக்கு 1021 ஹெக்டர்கள் பரப்பளவில் ரூ.3.71 கோடி மானியத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  நடப்பாண்டு 2026- 27 ஆம் ஆண்டில் சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் உட்பட நுண்ணீர் பாசனம் அமைக்க 800 ஹெக்டேர்கள் இலக்கு நிர்ணயக்கப்பட்டு, ரூ.3.68 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. அதன்படி, இத்திட்டத்தின் கீழ் தாதம்பட்டியில் 0.75 ஹெக்டேர் பரப்பளவில் கொய்யா மரக்கன்றுகள், ஒண்டிப்புலி நாயக்கனூரில் 0.78 ஹெக்டேர் பரப்பளவில் வாழை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதை ஆய்வு செய்யப்பட்டது. மேலும், விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து, திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நுண்ணீர் பாசன உபகரணங்கள் தரமான முறையில் அமைக்கப்படுவதையும், அவை முறையாகச் செயல்படுவதையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்கவும், விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நுண்ணீர் பாசன முறைகள்

நுண்ணீர் பாசன முறைகள் மூலம் குறைந்த அளவு நீரைக் கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதுடன், நீரின் பயன்பாட்டுத் திறனும் அதிகரிக்கிறது. குறிப்பாக, மழைப்பொழிவு குறைவாக உள்ள பகுதிகளில் கிடைக்கக்கூடிய நீர்வளத்தை சிக்கனமாகப் பயன்படுத்தி விவசாய உற்பத்தியைத் தொடர்ந்து மேற்கொள்ள நுண்ணீர் பாசன முறைகள் முக்கிய பங்காற்றுகின்றன. விவசாயிகளின் நிலத்தடி நீர் மற்றும் பாசன நீர் தேவைகளை கருத்தில் கொண்டு, அரசின் நுண்ணீர் பாசனத் திட்டங்களை தகுதியான விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் மோகன்தாஸ் சௌமியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவ) அ.அம்சவேணி, தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.ஆறுமுகம் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

சம்பா சாகுபடி செய்துள்ளீர்களா? நவம்பர் 15-க்குள் இந்த ஒரு வேலையை முடிக்காவிட்டால் இழப்பீடு கிடைக்காது!
சம்பா சாகுபடி செய்துள்ளீர்களா? நவம்பர் 15-க்குள் இந்த ஒரு வேலையை முடிக்காவிட்டால் இழப்பீடு கிடைக்காது!
திருவோணம் வட்டாரத்தில் மானியத்தில் எண்ணெய் பனை சாகுபடி: தோட்டக்கலை உதவி இயக்குநர் தகவல்
திருவோணம் வட்டாரத்தில் மானியத்தில் எண்ணெய் பனை சாகுபடி: தோட்டக்கலை உதவி இயக்குநர் தகவல்
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை: (10.10.2026) இன்று உயர்ந்ததா? குறைந்ததா?
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை: (10.10.2026) இன்று உயர்ந்ததா? குறைந்ததா?
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
Embed widget