மேலும் அறிய

Ind vs Eng : 7 ஆண்டுகளுக்கு பிறகு கோஹ்லி அவுட் செய்த Anderson.. கும்ப்ளே Record சமன்! Ind vs Eng | Day 2 | Kohli

இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் நாளின் முடிவில் இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. இதனால் இந்திய அணி முதல் நாள் முடிவில் 162 ரன்கள் பின்தங்கி இருந்தது.

இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 97 ரன்கள் சேர்த்திருந்த போது ரோகித் சர்மா 36 ரன்களில் ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து வந்த புஜாரா 4 ரன்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றினார். அவருக்கு அடுத்து வந்த இந்திய கேப்டன் விராட் கோலி தன்னுடைய முதல் பந்திலேயே விக்கெட்டை ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம் பறி கொடுத்தார். அத்துடன் தன்னுடைய கோல்டன் டக்கையும் அவர் பதிவு செய்தார். கோலியின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தன்னுடைய 619ஆவது விக்கெட்டை ஜேம்ஸ் ஆண்டர்சன் எடுத்தார். அத்துடன் இந்தியாவின் அனில் கும்ப்ளேவின் 619 டெஸ்ட் விக்கெட்கள் என்ற சாதனையை சமன் செய்து அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறினார்.

அதைவிட மேலும் ஒரு சிறப்பான விஷயம் ஒன்று உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான பேட்ஸ்மேன் விராட் கோலி. அதேபோல் இங்கிலாந்து அணியின் மிகவும் அனுபவம் மிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். ஆகவே இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் போது இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு தனிப்போட்டி நடக்கும். குறிப்பாக டெஸ்ட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறும் போது ஆண்டர்சனின் ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்ள விராட் கோலிக்கு எப்போதும் பெரிய சவாலாக இருக்கும். அந்தவகையில் 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் தொடரில் விராட் கோலி மிகவும் மோசமான ஃபார்மில் இருந்தார். அப்போது 10 இன்னிங்ஸில் அவர் வெறும் 134 ரன்கள் மட்டுமே அடித்தார். அதில் 4 முறை கோலியின் விக்கெட்டை ஜேம்ஸ் ஆண்டர்சன் எடுப்பார்.

இதைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து சென்றது. அப்போதும் கோலி-ஆண்டர்சன் இடையே பெரிய போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த முறை ஆண்டர்சன் கோலியின் விக்கெட்டை ஒரு முறை கூட எடுக்கவில்லை. இந்தச் சூழலில் தற்போது 2021ஆம் ஆண்டு தொடரின் முதல் போட்டியிலேயே விராட் கோலியின் விக்கெட்டை ஆண்டர்சன் எடுத்துள்ளார். அதாவது சரியாக 7 ஆண்டுகளுக்கு பிறகு கோலியின் விக்கெட்டை ஆண்டர்சன் எடுத்துள்ளார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலியின் விக்கெட்டை ஆண்டர்சன் 9ஆவது முறையாக வீழ்த்தியுள்ளார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விளையாட்டில் ஆர்வமா? அரசு வழங்கும் ரூ. 1 லட்சம் பரிசு! ஆகஸ்ட் 31-க்குள் உடனே அப்ளை பண்ணுங்க!
விளையாட்டில் ஆர்வமா? அரசு வழங்கும் ரூ. 1 லட்சம் பரிசு! ஆகஸ்ட் 31-க்குள் உடனே அப்ளை பண்ணுங்க!
சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !
சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
Embed widget