மேலும் அறிய

முட்டி மோதிய ட்ரம்ப்..தட்டி தூக்கிய மரியா... நோபல் பரிசும் அரசியலும் | Trump Vs Maria Corina Machado

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கிடைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்பிய நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவிற்கு கிடைத்ததுள்ளது. இந்தநிலையில் தனது அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா மக்களுக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் மரியா அர்ப்பணித்தார். நோபல் குழு ட்ரம்ப்பிற்க்கு பதிலாக மரியா கொரினா மச்சாடோவை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

​மரியா கோரினா மச்சடோவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதற்கான முக்கியக் காரணம் சர்வதேச சமூகத்தின் பெரும்பகுதியினரால் அவர்தான் சரியான வெற்றியாளராகக் கருதப்பட்டார். வெனிசுலாவில் பல ஆண்டுகளாக நிலவி வரும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகவும், மக்களின் ஜனநாயக உரிமைகள், சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை நிலைநாட்டுவதற்காகவும் அவர் மேற்கொண்ட அமைதியான மற்றும் அசைக்க முடியாத போராட்டத்தை நோபல் கமிட்டி அங்கீகரித்தது.

வெனிசுலா மக்களுக்கு சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கு அவர் மேற்கொண்ட போராட்டத்திற்கும், நோபல் குழு அவரது அயராத உழைப்பை பாராட்டியது.

அவர் கடுமையான மிரட்டல்கள், அரசியல் அழுத்தங்கள் மற்றும் தடைகளை எதிர்கொண்டபோதிலும், வெனிசுலாவில் ஜனநாயகம் மலர அமைதியான வழியில் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியதற்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது போராட்டம் வெனிசுலா மக்களுக்கு நம்பிக்கையையும், உலகளாவிய அளவில் ஜனநாயகப் போராட்டக்காரர்களுக்கு ஒரு உத்வேகத்தையும் அளிப்பதாக நோபல் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.

​சுருக்கமாக, வெனிசுலாவில் சர்வாதிகாரத்துக்கு எதிராக ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக அவர் அமைதியான வழியில் தொடர்ந்து போராடியதற்காகவே அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ​நோபல் பரிசைத் தனக்கு வழங்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்திய போதிலும், கமிட்டி மச்சடோவின் போராட்டத்தைப் பாராட்டி அவருக்குப் பரிசை அறிவித்தது.

இதுக்குறித்து ட்ரம்ப் தெரிவித்துள்ளதாவது..நோபல் பரிசு பெற்றவர் இன்று என்னை அழைத்து, நீங்கள் தான் உண்மையிலேயே அந்த விருதுக்கு தகுதியானவர். உங்களை மதிக்கும் விதமாக இந்த விருதை நான் பெற்றுக்கெள்கிறேன் என்று கூறினார்... ஆனால், எனக்குக் கொடுங்கள் என்று நான் சொல்லவில்லை. அவங்க விருப்பபட்டு சொல்லியிருக்கலாம் என்று நினைக்கிறேன்... நான் அவங்களுக்கு உதவி செய்து வருகிறேன்... மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதால் நான் மகிழ்ச்சியடைகிறேன்...என தெரிவித்துள்ளார்."

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

100% இட ஒதுக்கீட்டின் நூற்றாண்டு தொடக்கம்! சமூகநீதிப் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் - அன்புமணி அதிரடி
100% இட ஒதுக்கீட்டின் நூற்றாண்டு தொடக்கம்! சமூகநீதிப் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் - அன்புமணி அதிரடி
TVK:
TVK: "ரூபாய் 30 கோடி தர்றேன்.." குதிரை பேரம் நடத்திய அதிமுக பிரமுகர்! தவெக எம்எல்ஏ பகிரங்க குற்றச்சாட்டு
மைதானத்தில் நடந்த ஒரே ஒரு மோதல்... பறிபோன 30 வயது கால்பந்து வீரரின் உயிர்: உலக கால்பந்து ரசிகர்களை உலுக்கிய சோகம்!
மைதானத்தில் நடந்த ஒரே ஒரு மோதல்... பறிபோன 30 வயது கால்பந்து வீரரின் உயிர்: உலக கால்பந்து ரசிகர்களை உலுக்கிய சோகம்!
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
அமெரிக்காவின் செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி - ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா?
அமெரிக்காவின் செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி - ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா?
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
Kavithai Gopal:
Kavithai Gopal: "அட்ஜஸ்ட்மென்ட் பண்ணு பட வாய்ப்பு தர்றேன்" ஆதாரத்துடன் சிக்கிய கவிதை கோபால்!
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
IND vs NZ: பலமான பேட்டிங்.. பலவீனமா பவுலிங்! தொடங்கியது இந்தியா - நியூசிலாந்து முதல் ! ரோகித், விராட் வந்துட்டாங்க ஃபேன்ஸ்
IND vs NZ: பலமான பேட்டிங்.. பலவீனமா பவுலிங்! தொடங்கியது இந்தியா - நியூசிலாந்து முதல் ! ரோகித், விராட் வந்துட்டாங்க ஃபேன்ஸ்
Embed widget