மேலும் அறிய

இப்படி ஆடம்பரமாக இருக்கலாமா? வாய் விட்ட சு.வெங்கடேசன்.. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கொடுத்த பதிலடி!

கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசனின் விமர்சனத்திற்கு நேரடியாகவே நீதிமன்றத்திலே வைத்து நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் பதிலடி கொடுத்தார்.

சென்னை மயிலாப்பூரில் கடந்த வாரம் பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற நூல்கள் வெளியீட்டு விழாவில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் கலந்து கொண்டார். இதில் பேசிய அவர் பெரியார் அறிவுலகத்தில் காஞ்சி மகா பெரியவர் புத்தகத்தை அடுக்கி வைக்க வேண்டும். அகல் விளக்கு பதிப்பக நூல்கள் இருந்த இடத்தில் மகா பெரியவர் புத்தகம் இருந்தால் தான் பாவம் தீரும் எனவும் கூறியிருந்தார். 

சு.வெங்கடேசன் விமர்சனம்

இதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை நீதியரசர்களின் வேலை என கூறியிருந்தார். அதாவது அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: "பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்குகளில் பாவங்கள் கழிய வேண்டுமென்றால், மகா பெரியவருடைய புத்தகங்களை அதில் அடுக்கி வைக்க வேண்டும்" என்று நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் கூறியுள்ளார். நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை. நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை. 

நீதிபதி பதிலடி

சட்டத்தின் ஞானத்திற்காக அம்பேத்கரும், பகுத்தறிவின் ஞானத்திற்காக பெரியாரும் நாள்தோறும் நினைக்கப்படும் "மகா பெரியவர்கள்"  என்று விமர்சித்திருந்தார். இந்நிலையில் நூலகப் புத்தகக் கொள்முதல் தொடர்பான வழக்கு நீதிபதி சுவாமிநாதன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சு.வெங்கடேசனின் விமர்சனத்திற்கு நேரடியாகவே நீதிபதி பதிலடி கொடுத்தார். 

ஆடம்பரமாக இருக்கிறார்

அதாவது நகைச்சுவையாக நான் தெரிவித்த விஷயத்திற்கு சு.வெங்கடேசன் எனது பணிகளை எப்படி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு மதுரை ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது உயர் ரக காரில், ஆடம்பர உடையில் ஒருவர் இறங்கினார். யாரோ என நினைத்தபோது சு.வெங்கடேசன் உயர் ரக காரில் ஆடம்பர உடையில் வந்து இறங்கினார். ரயிலில் சு.வெங்கடேசன் முதல் வகுப்புக்கு சென்றார். நான் சாதாரண வகுப்பில் பயணித்தேன். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவரான சு.வெங்கடேசன் இப்படி ஆடம்பரமாக இருக்கிறார் நான் நினைத்துக் கொண்டேன் என்று சு.வெங்கடேசனை கடுமையாக போட்டு தாக்கியுள்ளார்.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

நூலகப் புத்தக ஊழல்: 20 ஆண்டு அறிக்கை, AI முறைகேடு... உயர் நீதிமன்றம் கடும் உத்தரவு!
நூலகப் புத்தக ஊழல்: 20 ஆண்டு அறிக்கை, AI முறைகேடு... உயர் நீதிமன்றம் கடும் உத்தரவு!
தனிஷ் கொள்ளை: நிஷாந்த் கைதை தொடர்ந்து மீனாட்சி தாயிடம் தீவிர விசாரணை! பதுக்கிய நகைகள் எங்கே?
தனிஷ் கொள்ளை: நிஷாந்த் கைதை தொடர்ந்து மீனாட்சி தாயிடம் தீவிர விசாரணை! பதுக்கிய நகைகள் எங்கே?
Madurai Robbery: நகைக்கடை கொள்ளை; மீனாட்சியின் அம்மாவுக்கு இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக்கா? வைரலாகும் வீடியோக்கள்
Madurai Robbery: நகைக்கடை கொள்ளை; மீனாட்சியின் அம்மாவுக்கு இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக்கா? வைரலாகும் வீடியோக்கள்
மதுரை தனிஷ்க் கொள்ளை: முக்கிய குற்றவாளி நிஷாந்த் அதிரடி கைது! பதுக்கிய நகைகள் எங்கே?
மதுரை தனிஷ்க் கொள்ளை: முக்கிய குற்றவாளி நிஷாந்த் அதிரடி கைது! பதுக்கிய நகைகள் எங்கே?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Weekly Horoscope: யாருக்கெல்லாம் வீண் செலவு, அலைச்சல்.. கஷ்டம் நீங்கி குஷியாக இருக்க என்ன செய்யணும்?
Weekly Horoscope: யாருக்கெல்லாம் வீண் செலவு, அலைச்சல்.. கஷ்டம் நீங்கி குஷியாக இருக்க என்ன செய்யணும்?
Embed widget