மேலும் அறிய

தொடங்கிய கந்தசாமி ஆட்டம்... இப்போது விஜயபாஸ்கர்.. அடுத்து? | Kandhasamy IPS | Vijayabaskar | DVAC

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.25.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 13 மணி நேரத்திற்கும் மேலாக 26 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை கூறியுள்ளது. மேலும், காப்பீடு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள், பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிவரம்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி 
விஜயலட்சுமி, அவரது தம்பி சேகர் ஆகியோர் பெயரிலும் மற்றும் தான் பங்குதாரராக உள்ள
நிறுவனங்கள் பெயரிலும் தனதுபணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்துள்ளது சம்பந்தமாக அவர்கள் மீது கடந்த 21.07.2021ஆம் தேதி கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் குற்ற எண்.5/AC/2021 பிரிவு 13(2) r/w 13(1)(b) of the PC (Amendment) Act, 2018 மற்றும் பிரிவு 12 r/w 13(2) r/w 13(1)(b) of the PC (Amendment) Act, 2018-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. மேற்படி வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட மொத்தம் 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் இன்று 22.07.2021ஆம் தேதி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் பணம் ரூ.25,56,000/- மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள்மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள்கைப்பற்றப்பட்டன. விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

MR Vijayabaskar Update: ரெய்டு முடிந்தது: எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரூ.25.56 லட்சம் பறிமுதல்! மனைவி, தம்பி மீதும் வழக்கு பதிவு!

இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் இல்லங்களில்தான் முதலில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரை முதலில் குறி வைத்து ரெய்டு நடத்தப்பட்டதன் பின்னணியில் செந்தில்பாலாஜி உள்ளதாக கூறப்படுகிறது.

அவர்தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாங்கி குவித்த சொத்து விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கொடுத்துள்ளார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சோதனை நடைபெற்ற இடங்கள் :

* போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வாகனங்களில் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் வாங்குவதிலும் மற்றும்  வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதிலும் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் பெற்றுள்ளது என புகாரின் அடிப்படையில்  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

* எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமாக கரூரில் உள்ள வீடு மற்றும் ரெயின்போ என்ற பெயரில் அவர் நடத்தும் நிறுவனங்களான கல்குவாரிகள் ,சாயப்பட்டறை,மற்றும் அட்டைப் பெட்டி தயாரிப்பு நிறுவனம்,  எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரரான சேகர் நடத்தும் நிறுவனங்கள் மற்றும் அவரது மனைவி சாந்தி பெயரில் உள்ள நிறுவனத்திலும் அதிகாலையிலையே லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர்  சோதனையில் ஈடுபட்டனர்.

* ஆட்சியில் இருக்கும் போது எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அரசு உதவியாளராக இருந்த கார்த்திக் மற்றும் தனி உதவியாளராக இருந்த ரமேஷ் ஆகியோர் வீட்டிலும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  

* அத்துடன் அதிமுக கட்சியில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நெருக்கமாக இருந்த ஏகாம்பரம், பரமசிவம் உறவினரும் ரியல்எஸ்டேட் புரோக்கருமான சேகர் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (28-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (28-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
"பிரபாகரன் பெயரைச் சொல்லி தமிழகத்தில் ஏமாற்றுவது யார்?" - சீமானை மறைமுகமாக சாடிய வன்னியரசு
தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் டெங்கு அதிகம்... தஞ்சையில் 4 பேர் பாதிப்பு: மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்
தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் டெங்கு அதிகம்... தஞ்சையில் 4 பேர் பாதிப்பு: மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Rohit-Kohli: ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Karur Stampede: காலம் கடந்தும் நீங்கா துயரம்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று!
Karur Stampede: காலம் கடந்தும் நீங்கா துயரம்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று!
சமுதாய வளைக்காப்பு நிகழ்ச்சி.. சண்டை இழுத்து விடுறீங்களா?.. அதிகாரிகளை கண்டித்த தவெக MLA

Embed widget