மேலும் அறிய

கரூர் செல்லும் விஜய்? தவெகவின் 20 பேர் குழு! விஜய் கொடுத்த அசைன்மெண்ட்

கரூர் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு விஜய் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக உள்ள நிலையில் 20 பேர் கொண்ட குழுவை அமைத்து அசென்மெண்ட் ஒன்றை கொடுத்துள்ளார் விஜய்.

கரூர் தவெக பிரச்சாரத்தில் 41 உயிரிழந்த சம்பவம் தவெகவின் நிலைமையை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது. இந்த வழக்கில் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடினர். ஆனால் கரூர் விவகாரத்தில் தவெகவை வெளுத்தெடுத்த நீதிமன்றம் புஸ்ஸி ஆனந்தின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. தலைமறைவாகியுள்ள புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய தனிப்படைகள் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன.

இந்தநிலையில் விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் ஓடியதும் விமர்சனத்தில் சிக்கியது. தவெக தலைவர் விஜயிடம் தலைமைத்துவ பண்பே இல்லை. பரப்புரை ஏற்பாட்டாளர்கள், தலைவர் என அனைவரும் சம்பவம் நடந்ததும் தொண்டர்களையும், அவர்களை பின் தொடர்பவர்களையும் கைவிட்டு அங்கிருந்து மறைந்துவிட்டனர் என நீதிபதி கண்டித்திருந்தார்.

இந்த நேரத்தில் விஜய் கரூர் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அதற்கான பணிகளை செய்யும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக உள்ளதால் அவர் இல்லாமலேயே கூட்டங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் சென்னையில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்தது. அதனால் விஜய்யே மாவட்ட செயலாளர்களை ஆன்லைனில் தொடர்பு கொண்டு மீட்டிங் ஒன்றை நடத்தியதாக சொல்கின்றனர்.

அப்போது 20 பேர் கொண்ட குழு ஒன்றை விஜய் அமைத்துள்ளார். த.வெ.க.விற்கு ஆதரவாக கருத்து பதிவிடுவோரை கைது செய்தால் அவர்களுக்கு சட்ட உதவி வழங்குவதற்கு இந்த குழுவுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளதாக சொல்கின்றனர். கரூர் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், மீண்டும் கட்சிப் பணிகளை தொடங்குவதற்காகவும் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விவசாயிகளே உங்க குறைகளை சொல்ல தயாரா? நவ. 26-ல் முக்கிய கூட்டம்!
விவசாயிகளே உங்க குறைகளை சொல்ல தயாரா? நவ. 26-ல் முக்கிய கூட்டம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-இல் தொடக்கம் - முழு விவரம் தெரியுமா?
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-இல் தொடக்கம் - முழு விவரம் தெரியுமா?
"சிங்கப் பெண்படை எங்கே போய் தூங்கிக்கொண்டிருக்கிறது?" - முதல்வரை சாடிய கனிமொழி!
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-இல் தொடக்கம் - முழு விவரம் தெரியுமா?
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-இல் தொடக்கம் - முழு விவரம் தெரியுமா?
IND vs NZ: தலைவலி தரும் நியூசிலாந்து.. புது தடம் பதிக்குமா கில் படை? இந்திய ரசிகர்கள் ஆர்வம்
IND vs NZ: தலைவலி தரும் நியூசிலாந்து.. புது தடம் பதிக்குமா கில் படை? இந்திய ரசிகர்கள் ஆர்வம்
நவ.23-இல் திருச்சி செல்லும் முதலமைச்சர்? - இடைத்தேர்தல்களை குறிவைத்து காய்நகர்த்தும் முதல்வர்!
நவ.23-இல் திருச்சி செல்லும் முதலமைச்சர்? - இடைத்தேர்தல்களை குறிவைத்து காய்நகர்த்தும் முதல்வர்!
"சிங்கப் பெண்படை எங்கே போய் தூங்கிக்கொண்டிருக்கிறது?" - முதல்வரை சாடிய கனிமொழி!
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
Embed widget